IND vs BAN 2nd Test Day 2: இந்தியா vs வங்கதேச டெஸ்டின் 2வது நாள் ரத்தா..? போட்டிக்கு நடுவே மழை ஆடப்போகும் ஆட்டம்!

Kanpur Weather: இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று மழை பெய்ய 92% வாய்ப்பு இருந்ததாக அக்யூவெதர் தெரிவித்திருந்தது. அதன்படியே, மழைக்கு நடுவே அவ்வப்போது மழை வருவதும் போவதுமாக தொல்லை கொடுத்தது. மேலும், காலை 9.30 மணிக்கு திட்டமிடப்பட்ட நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாகவே போட்டி தொடங்கியது. அதேபோல், இரண்டாவது அமர்வின் தொடக்கமும் மழை காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியது.

IND vs BAN 2nd Test Day 2: இந்தியா vs வங்கதேச டெஸ்டின் 2வது நாள் ரத்தா..? போட்டிக்கு நடுவே மழை ஆடப்போகும் ஆட்டம்!

இந்தியா - வங்கதேசம் 2வது டெஸ்ட் (Image: BCCI)

Published: 

28 Sep 2024 08:43 AM

கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று 35 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் மழை குறுக்கிட்டது. வங்கதேச அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 107 ரன்கள் என்ற நிலையில் மோசமான வெளிச்சம் காரணமாக முதல் நாள் முடிக்கப்பட்டது. முதல் நாள் ஆட்டனேர முடிவில் முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்களுடனும், மொமினுல் ஹக் 40 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இன்று மழை பெய்யாமல் வானிலை ஒத்துழைப்பு தந்தால் இருவரும் வங்கதேச அணிக்காக சிறப்பான ஆட்டத்தை தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்டின் 2வது நாளான இன்று கான்பூரில் வானிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Watch Video: அனைத்து விதமான கிரிக்கெட்டில் ஓய்வு.. சக வீரர் அளித்த கௌரவத்துடன் அழுதுகொண்ட வெளியேறிய பிராவோ!

இன்றும் மழைக்கு வாய்ப்பு:

இந்தியா – வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கான்பூரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வானிலை மையம் கொடுத்த அப்டேட்டின்படி, வெப்பநிலை சுமார் 31 டிகிரி செல்சியல் இருக்கும் என்றும், 80 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிற்பகல் வேளையில் 31 டிகிரி செல்சியஸ் ஆக பதிவாகும் எனவும், மழை பெய்ய 55 வீதமான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாள் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்ற கூடுதல் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, அதிகபட்சமாக இன்று இரு அணிகளும் காலை 9.30 மணிக்கு போட்டியை தொடங்கி மாலை 4.30 மணி வரை மட்டுமே விளையாடும் என்று தெரிகிறது.

கான்பூரில் காலை 9 மணி முதல் 5 மணி வரையிலான மழைக்கான வாய்ப்பு சதவீதம்:

காலை 9 மணி – 51 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு
காலை 10 மணி – 51 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு
காலை 11 மணி – 47 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு
மதியம் 12 மணி – 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு
மதியம் 1 மணி – 34 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு
மதியம் 2 மணி – 34 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு
மதியம் 3 மணி – 37 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு
மாலை 4 மணி – 48 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு
மாலை 5 மணி – 52 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு

அக்யூவெதரின் படி, இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது மற்றும் மூன்றாவது நாளில் மழை பெய்யும் என்றும், நான்காவது மற்றும் 5ம் நாட்களில் வானிலை சற்று தெளிவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நாள் எப்படி இருந்தது..?

இந்தியா – வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான நேற்று மழை பெய்ய 92% வாய்ப்பு இருந்ததாக அக்யூவெதர் தெரிவித்திருந்தது. அதன்படியே, மழைக்கு நடுவே அவ்வப்போது மழை வருவதும் போவதுமாக தொல்லை கொடுத்தது. மேலும், காலை 9.30 மணிக்கு திட்டமிடப்பட்ட நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாகவே போட்டி தொடங்கியது. அதேபோல், இரண்டாவது அமர்வின் தொடக்கமும் மழை காரணமாக 15 நிமிடங்கள் தாமதமாகவே தொடங்கியது. அதே நேரத்தில் போட்டி முடிய 2 மணி நேரத்திற்கு மேலாக நேரம் இருந்த போதிலும் வெளிச்சத்தின் காரணமாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே போட்டி முடிக்கப்பட்டது.

ALSO READ: IND vs BAN 2nd Test: 3 ஆண்டுகளுக்கு பிறகு சர்வதேச போட்டி.. கான்பூரில் இந்திய அணி இதுவரை எப்படி..?

இந்தியா மற்றும் வங்கதேசம் விளையாடும் XIகள்:

இந்தியா (பிளேயிங் லெவன்):

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்

வங்கதேசம் (விளையாடும் லெவன்):

ஷத்மான் இஸ்லாம், ஜாகிர் ஹசன், நஜ்முல் ஹொசைன் சாண்டோ(கேப்டன்), மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம் , ஷகிப் அல் ஹசன் , லிட்டன் தாஸ்(விக்கெட் கீப்பர்), மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம், ஹசன் மஹ்மூத், காலித் அகமது

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!