IND vs BAN 3rd T20 All Records: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அடுக்கப்பட்ட சாதனைகள்.. சம்பவம் செய்த இந்திய அணி..!

IND vs BAN: சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். மேலும், ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் சாம்சன் பெற்றார். முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி, ரிஷப் பண்ட் போன்ற விக்கெட் கீப்பர்களால் கூட இந்த சாதனையை செய்ய முடியவில்லை.

IND vs BAN 3rd T20 All Records: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அடுக்கப்பட்ட சாதனைகள்.. சம்பவம் செய்த இந்திய அணி..!

இந்திய கிரிக்கெட் அணி (Image: BCCI)

Published: 

13 Oct 2024 11:58 AM

வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் டாஸ் வென்று பேட்டிங் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 164 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் வங்கதேச அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என கைப்பற்றியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த தொடரின் கடைசி ஆட்டத்தில் 47 பந்துகளில் 111 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகன் பட்டத்தை வென்றார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவும் அரைசதம் கடந்து 75 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் ரவி பிஷ்னோய் 3 விக்கெட்டுகளையும், மயங்க் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

ALSO READ: IND W vs AUS W: இந்திய அணிக்கு வாழ்வா சாவா போட்டி..! ஆஸ்திரேலியாவை இன்று வீழ்த்துமா ஹர்மன்ப்ரீத் படை?

சர்வதேச டி20யில் அதிகபட்ச ஸ்கோர்:

வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 297 ரன்கள் குவித்தது. சர்வதேச டி20 போட்டிகளில் டெஸ்ட் விளையாடும் நாடுகளின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். டெஸ்ட் போட்டிகளில் விளையாடாத அனைத்து அணிகளையும் சேர்த்தால் நேபாளம் அணி அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு மங்கோலியாவுக்கு எதிராக நேபாள அணி 314 ரன்கள் குவித்தது. இதற்கு அடுத்தபடியாக இந்திய அணி டி20யில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து, இரண்டாவது இடத்தில் உள்ளது.

டி20யில் அதிவேக 100, 150, 200 மற்றும் 250 ரன்கள்:

வங்கதேசத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் இந்திய அணி பவர்பிளேவில் 82 ரன்கள் குவித்தது. சர்வதேச டி20யில் பவர்பிளேவில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதே சமயம் 100 ரன்கள், 150 ரன்கள், 200 ரன்கள் மற்றும் 250 ரன்கள் எடுத்த சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. 7.1 ஓவர்களில் 100 ரன்களை எடுத்த இந்திய அணி 14 ஓவர்களில் 200 ரன்களை எட்டியது.

ஒரு இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள்:

வங்கதேசத்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி மொத்தமாக 47 பவுண்டரிகளை அடித்தது. இதன்மூலம், சர்வதேச ஒரு டி20 இன்னிங்ஸில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.

ஒரு போட்டியில் அதிக பவுண்டரிகள்:

வங்கதேசம் – இந்தியா இடையிலான போட்டியில் மொத்தம் 70 பவுண்டரிகள் (சிக்ஸர்கள் மற்றும் சிக்ஸர்களையும் சேர்த்து) அடிக்கப்பட்டனர். இந்தியா இந்த போட்டியில் அதிகபட்சமாக 47 பவுண்டரிகளையும், வங்கதேசம் 23 பவுண்டரிகளையும் அடித்தது. இதன்மூலம், ஆடவர் டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த மூன்றாவது அதிகபட்ச சாதனை இதுவாகும். இந்தநிலையில், 2023ம் ஆண்டு செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடந்த டி20 போட்டி முதலிடத்தில் உள்ளது. இந்த போட்டியில் 81 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன. அதேநேரத்தில், கடந்த 2022ம் ஆண்டு பல்கேரியா மற்றும் செர்பியா இடையே நடந்த டி20 போட்டியில் 71 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.

இந்திய அணியின் 3வது மூன்றாவது அதிகபட்ச வெற்றி:

இந்திய போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற மூன்றாவது வெற்றி இதுவாகும். நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாகும். அதேசமயம் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.

சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன்:

சர்வதேச டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். மேலும், ஒரு ஓவரில் 5 சிக்ஸர்கள் அடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் சாம்சன் பெற்றார். முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ்.தோனி, ரிஷப் பண்ட் போன்ற விக்கெட் கீப்பர்களால் கூட இந்த சாதனையை செய்ய முடியவில்லை.

தொடர்ந்து, சஞ்சு சாம்சன் தனது முதல் டி20 சர்வதேச சதத்தை 40 பந்துகளில் அடித்தார். இது டி20 சர்வதேச போட்டியில் இந்தியரின் இரண்டாவது அதிவேக சதமாகும். கடந்த 2017ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 35 பந்துகளில் சதம் விளாசிய ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

ALSO READ: Dengue Fever: மழைக்காலம் வந்தாச்சு… உங்க குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டால் உடனே இதை செய்யுங்கள்!

ஒரு காலண்டர் ஆண்டில் அதிக டி20 வெற்றிகள்

  • 2023 – 29ல் உகாண்டா வெற்றி
  • 2022-ல் இந்தியா – 28 வெற்றி
  • 2022 – 21ல் தான்சானியா வெற்றி
  • 2024-21ல் இந்தியா வெற்றி
  • 2021-20ல் பாகிஸ்தான் வெற்றி

ஒட்டுமொத்த டி20யில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல்:

  • இந்தியா – 37 முறை
  • சம்சார்செட் – 36 முறை
  • சென்னை சூப்பர் கிங்ஸ் – 35 முறை
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – 33 முறை

இந்தியாவில் டி20 போட்டியில் அதிக ரன்கள்:

  • 472 – ஆப்கானிஸ்தான் vs அயர்லாந்து, டேராடூன், 2019
  • 461 – இந்தியா vs வங்கதேசம், ஹைதராபாத், 2024
  • 459 – இங்கிலாந்து vs தென்னாப்பிரிக்கா, மும்பை வான்கடே ஸ்டேடியம், 2016
  • 458 – இந்தியா vs தென்னாப்பிரிக்கா, குவஹாத்தி, 2022
  • 447 – இந்தியா vs ஆஸ்திரேலியா, குவஹாத்தி, 2023
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!