India vs Bangladesh 3rd T20I: டி20யில் கிட்டத்தட்ட 300.. ஒட்டுமொத்த சாதனையை முறியடித்த இந்திய அணி..!
Sanju Samson: மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேசத்துக்கு 298 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. முன்னதாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர்.
வங்கதேசத்திற்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்து சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் புதிய வரலாறு படைத்தது.இந்திய அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111 ரன்களும், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 75 ரன்களும் எடுத்திருந்தனர். மூன்றாவது டி20 போட்டியில் வங்கதேசத்துக்கு 298 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிரடியான தொடக்கம் கொடுத்தனர். அதிரடியாக பேட்டிங்கை தொடங்கிய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 4 பந்துகளில் 1 பவுண்டரியுடன் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, அதன்பின் ஸ்டேடியத்தில் மின்னல் பறக்க தொடங்கியது.
Innings Break!
A batting exhibition from #TeamIndia as they post their Highest T20I total of all time 🔥🔥
India set a 🎯 of 298 for Bangladesh as @IamSanjuSamson top-scores with 111(47) 👏👏
Over to our bowlers 💪
Scorecard – https://t.co/ldfcwtHGSC#INDvBAN |… pic.twitter.com/SHDG8omeIu
— BCCI (@BCCI) October 12, 2024
சஞ்சு சாம்சன் உடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணைந்து வங்கதேச பந்துவீச்சாளர்களின் பந்துகளை நான்குபுறமும் சிதறடித்து கொண்டிருந்தனர். இவர்களின் அதிரடி பேட்டிங் காரணமாக இந்திய அணி முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்தது. கேப்டன் சூர்யாவும், சஞ்சு சாம்சனும் தங்களுக்கு விரும்பிய பாணியில் அதிரடி காட்டி கொண்டு இருந்தனர். ஆரம்பம் முதலே செம கிளாஸாக ஆடிய சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 50 ரன்களை கடந்து வழக்கத்திற்கு மாறாக அரைசதத்தை ஆக்ரோஷமாக கொண்டாடினார். தொடர்ந்து, சூர்யகுமார் யாதவும் மறுமுனையில் அரைசதம் கடக்க, ஆட்டம் விறுவிறுப்பை தொட்டது.
சூர்யாகுமார் யாதவ் சஞ்சு சாம்சனும் தொடர்ந்து அதிரடியை காட்டி வங்கதேச பௌலர்களை திணற செய்தனர். சஞ்சு சாம்சன் 46 பந்துகளில் 11 ரன்களுடன் ஆட்டமிழக்க, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ஆகியோர் பவுண்டரி, சிக்ஸர்களாக விளாசினார்கள். ரியான் பராக் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே 26 பந்துகளில் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: Health Tips: சரியான டயட் இருந்தாலும் எடை கூடுகிறதா? இந்த 5 காரணங்களாக இருக்கலாம்..!
அதிரடியாக விளையாடிய ரியான் பராக் 11 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 32 ரன்களுடனும், ஹர்திக் பாண்டியா 18 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியிடன் 47 ரன்களுடன் ஆட்டமிழந்தனர். இவர்கள் ஆட்டமிழந்தாலும், இந்திய அணி எளிதாக டி20 வரலாற்றில் 300 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், கடந்த போட்டியில் அரைசதம் அடித்து மிரட்டிய நிதீஷ்குமார் ரெட்டி முதல் பந்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். கடைசி பந்தில் சிக்ஸர் மன்னன் ரிங்கு சிங் சிக்ஸரை பறக்கவிட இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்கள் குவித்தது.
A six from the birthday boy to finish the innings off in style! 🥳#TeamIndia finish with 297/6 on board 🔥
Live – https://t.co/ldfcwtHGSC#TeamIndia | #INDvBAN | @rinkusingh235 | @IDFCFIRSTBank pic.twitter.com/HkaIzoR0Kh
— BCCI (@BCCI) October 12, 2024
வங்கதேச அணியில் அதிரகபட்சமாக தன்சிம் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்களும், தஸ்கின் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், மஹ்முதுல்லா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர்:
கடந்த 2023ம் ஆண்டு மங்கோலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 314 ரன்கள் எடுத்த நேபாளம் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. எனவே, இப்போது சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இந்திய கிரிக்கெட் அணி தனது பெயரில் பதிவு செய்துள்ளது. இன்று நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச டி20 போட்டிக்கு முன், கடந்த 2019ம் ஆண்டு துருக்கிக்கு எதிரான போட்டியில் 278 ரன்கள் குவித்த செக் குடியரசு இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தது. கடந்த 2019ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 278 ரன்கள் குவித்த சாதனையை ஆப்கானிஸ்தான் படைத்து தற்போது 4வது இடத்தில் உள்ளது.
- நேபாளம் – 314 ரன்கள் – எதிரணி மங்கோலியா
- இந்தியா – 297 ரன்கள் – எதிரணி வங்கதேசம்
- செக் குடியரசு – 278 ரன்கள் – எதிரணி துருக்கி