IND vs BAN: “இந்திய அணியை வெற்றி பெற விட மாட்டோம்”- சவால் விட்ட வங்கதேச கேப்டன் சாண்டோ!

Najmul Hossain Shanto: கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இந்தியா - வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, ராவல்பிண்டியில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வங்கதேசம் அசத்தியது. தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக, நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம், இந்திய அணியை எளிதில் வெற்றி பெற விட மாட்டோம் என்று வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹூசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.

IND vs BAN: இந்திய அணியை வெற்றி பெற விட மாட்டோம்- சவால் விட்ட வங்கதேச கேப்டன் சாண்டோ!

நஸ்முல் ஹுசைன் சாண்டோ (Image: Matthew Lewis-ICC/ICC via Getty Images)

Published: 

16 Sep 2024 18:44 PM

இந்திய அணி இந்த மாதம் வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் வருகின்ற செப்டம்பர் 19ம் தேதி தொடங்குகிறது. சென்னையில் முதல் டெஸ்ட் போட்டி வருகின்ற செப்டம்பர் 23ம் தேதி முடிவடைந்ததும், கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இந்தியா – வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. முன்னதாக, ராவல்பிண்டியில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டியில் பாகிஸ்தானை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி வங்கதேசம் அசத்தியது. தற்போது இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக, நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சிப்போம், இந்திய அணியை எளிதில் வெற்றி பெற விட மாட்டோம் என்று வங்கதேச கேப்டன் நஸ்முல் ஹூசைன் சாண்டோ தெரிவித்துள்ளார்.

ALSO READ: Triple Centuries: டெஸ்டில் அதிவேக டிரிபிள் சதம் அடித்த டாப் 5 வீரர்கள்.. இந்த பட்டியலில் 2 இந்தியர்களும் சாதனை படைப்பு!

இந்திய அணிக்கு சவால் விட்ட சாண்டோ:

இந்தியா செல்வதற்கு முன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சாண்டோ, “ தரவரிசையில் எங்களை விட இந்தியா மிகவும் முன்னாடி உள்ளனர். ஆனால், சமீபகாலமாக சிறப்பாக விளையாடி வருகிறோம். 5 நாட்கள் நன்றாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். டெஸ்ட் போட்டியின் கடைசி நாளின் கடைசி அமர்வு வரை நாங்கள் விளையாட விரும்புகிறோம். அந்த நேரத்தில் போட்டி எந்த திசையிலும் செல்லலாம். இந்தியாவிற்கு எதிராக எங்களது முதல் வெற்றியை பெற இது ஒரு வாய்ப்பு. ஆனால், அதை பற்றி அதிக நேரம் யோசிக்க விரும்பவில்லை.

இது சவாலான தொடராக இருக்கும். ஆனால், பாகிஸ்தான் தொடர் எங்களுக்கு கூடுதல் நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த நம்பிக்கை இப்போது வங்கதேச நாட்டிற்கும் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு தொடரும் ஒரு வாய்ப்பு. நாங்கள் இரண்டு டெஸ்டிலும் வெற்றி பெற விரும்புகிறோம், ஆனால் எங்கள் செயல்முறையை நாங்கள் கடைபிடிக்க வேண்டும். நம் வேலையைச் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து வங்கதேச அணியின் பந்துவீச்சு பற்றி பேசிய சாண்டோ, “ வேகம் மற்றும் சுழற்பந்து வீச்சு என இரண்டிலும் எங்களது பந்துவீச்சு தாக்குதலை கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஒருவேளை எங்களது வேகப்பந்து வீச்சாளர் அனுபவரீதியாக பின் தங்கி இருந்தாலும், எங்களது சுழல் தாக்குதல் இந்திய அணிக்கு பெரும் சவாலை கொடுப்பார்கள். எங்கள் வேகப்பந்து வீச்சாளர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் 100% கொடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஒரு அணியாக விளையாடினால்தான் மாற்றத்தை கொண்டு வர முடியும் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்தார்.

இருப்பினும், வங்கதேச அணியை இந்தியாவில் தோற்கடிப்பது எளிதானது அல்ல. உண்மையில், இந்திய அணி 2012 முதல் சொந்த மண்ணில் ஒரு தொடரை இழந்ததில்லை.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

இந்தியா – வங்கதேசம் இடையே இதுவரை மொத்தம் 13 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்தியா 11 போட்டிகளில் வெற்றி பெற்று 2 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. வங்கதேச அணி இதுவரை இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக 2022-ம் ஆண்டு டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் இந்தியா 2-0 என எளிதாக வென்றது.

ALSO READ: Virat Kohli: விராட் கோலி கணக்கில் மற்றொரு மெகா சாதனையா? பாண்டிங்கை பின்னுக்கு தள்ள மிகப்பெரிய வாய்ப்பு..!

இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி:

நஸ்முல் ஹுசைன் சாண்டோ (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், ஜாகிர் ஹசன், மொமினுல் ஹக், ஷத்மான் இஸ்லாம், மெஹ்தி ஹசன் மிராஜ், ஜாகர் அலி அனிக், தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், ஹசன் மஹ்மூத், தைஜுல் இஸ்லாம், மஹ்முதுல் ஹசன் ஜாய், காலித் அகமது, நஹித் ராணா

முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?