Rishabh Pant: நியூசிலாந்து எதிராக ஒரே அரைசதம்! பல சாதனைகளை குவித்த ரிஷப் பண்ட்..

India vs New Zealand: டெஸ்ட் போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இலங்கைக்கு எதிராக பண்ட் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதேநேரத்தில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா - உல் - ஹக் அதிவேக அரைசதம் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

Rishabh Pant: நியூசிலாந்து எதிராக ஒரே அரைசதம்! பல சாதனைகளை குவித்த ரிஷப் பண்ட்..

ரிஷப் பண்ட் (Image: PTI)

Published: 

02 Nov 2024 16:53 PM

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. நியூசிலாந்து மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 263 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்களும், ரிஷப் ப்ண்ட் 60 ரன்களும் எடுத்தனர். 4 விக்கெட்டுக்கு 86 ரன்கள் என்ற நிலையில் இன்று காலை தொடங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 28 ரன்கள் எடுத்தது. அதே நேரத்தில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 235 ரன்கள் எடுத்திருந்தது.

ALSO READ: IPL 2025: 5 ஐபிஎல் அணிகளுக்கு புதிய கேப்டன்கள்.. சூடுபிடிக்கப்போகும் ஏலம்..!

ரிஷப் பண்ட் அதிரடி அரைசதம்:

இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது ரிஷப் பண்ட் எப்பொழுதும் போல் தனது அதிரடி பாணியில் 36 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்த அதிரடி இன்னிங்ஸ் மூலம் இந்திய அணிக்கு மீண்டும் களமிறங்கியது மட்டுமின்றி புதிய சாதனையையும் படைத்தார்.

இரண்டாவது நாளில் கிரீஸூக்கு வந்தவுடன் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கிய ரிஷப் பண்ட், வேகமாக ரன்களை குவிக்க தொடங்கினார். தனது அதிரடி பேட்டிங்கால் ஒரு மணிநேரத்தில் 138 ஸ்டிரைக் ரேட்டில் பண்ட் 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்டில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக, புனே டெஸ்டில் 41 பந்துகளில் அரைசதம் அடித்து இந்த சாதனையை நிகழ்த்திய யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெயரில் இருந்தார்.

நியூசிலாந்துக்கு எதிராக அதிவேக அரைசதம்:

  1. 36 பந்துகள் – ரிஷப் பண்ட் (மும்பை 2024)
  2. 41 பந்துகள் – யஷஸ்வி ஜெய்ஸ்வால் (புனே 2024)
  3. 42 பந்துகள் – ஹர்பஜன் சிங் (ஹைதராபாத் 2010)
  4. 42 பந்துகள் – சர்பராஸ் கான் (பெங்களூரு 2024)

டெஸ்டில் அதிவேக அரைசதம்:

டெஸ்ட் போட்டியில் அதிவேக அரைசதம் அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் ரிஷப் பண்ட் படைத்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு பெங்களூருவில் நடந்த இலங்கைக்கு எதிராக பண்ட் 28 பந்துகளில் அரைசதம் கடந்தார். அதேநேரத்தில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மிஸ்பா – உல் – ஹக் அதிவேக அரைசதம் அடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். கடந்த 2014ம் ஆண்டு அபுதாபியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 21 பந்துகளில் அரைசதம் அடித்த சாதனையை படைத்திருந்தார்.

விக்கெட் கீப்பராக அதிக ரன்கள்:

டெஸ்ட் கிரிக்கெட்டில் 65 இன்னிங்ஸ்களில் விளையாடி அதிக ரன்கள் எடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் முதல் இடத்தில் உள்ளார். கில்கிறிஸ்ட் 65 இன்னிங்ஸ்களில் 3073 ரன்கள் எடுத்திருந்தார்.

இந்த பட்டியலில் இந்தியாவின் ரிஷப் பண்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவர் 2629 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ் 2588 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் விக்கெட் கீப்பர் குயிண்டன் டி காக் 2468 ரன்கள் குவித்து பட்டியலில் நான்காவது இடத்திலும், இலங்கையின் முன்னாள் விக்கெட் கீப்பர் குமார் சங்கக்கார 65 இன்னிங்ஸ்களுக்கு பிறகு டெஸ்டில் 2442 ரன்களுடன் 5வது இடத்திலும் உள்ளனர்.

தோனியை பின்னுக்கு தள்ளினார்:

100 ஸ்டிரைக் ரேட்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக அரைசதங்கள் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் பண்ட் பெற்றுள்ளார். முன்னதாக இந்த சாதனையை 100க்கும் அதிகமாக ஸ்டிரைக் ரேட்டில் 4 டெஸ்டில் அரைசதங்கள் அடித்த தோனியின் சாதனையை படைத்தார். பண்ட் தற்போது, 5 முறை 100 ஸ்டிரைக் ரேட்டில் அரை சதங்கள் அடித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் 2 சிக்ஸர்கள் அடித்துள்ளார். இதன்மூலம், பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 66 சிக்ஸர்களை அடித்துள்ளார். இது அவர் விளையாடிய இன்னிங்ஸ்களின் எண்ணிக்கையை விட (65) அதிகம்.

ALSO READ: ICC Champions Trophy 2025: இந்திய ரசிகர்களை கவர பாகிஸ்தான் புதிய யுக்தி.. சாம்பியன் டிராபியில் பங்கேற்குமா இந்திய அணி?

டெஸ்ட் போட்டிகளில் 100 ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிக அரைசதம் அடித்த விக்கெட் கீப்பர் பட்டியல்:

8 – ஆடம் கில்கிறிஸ்ட்
5 – ரிஷப் பண்ட்
4 – எம்.எஸ்.தோனி
4 – ஜானி பேட்ஸ்டோவ்
4 சர்பராஸ் அகமது
3 – குயிண்டன் டி காக்
3 – ஆன் டிக்வெல்லா
3 – மாட் பிரையர்

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!