KL Rahul Dropped: கம்பீர் கொடுத்த ஆதரவு எங்கே..? 12 மணிநேரத்தில் நீக்கப்பட்ட கே.எல்.ராகுல்!
India Vs New Zealand: புனேவில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. கே.எல்.ராகுல் கடந்த சில மாதங்களாக பல போட்டிகளில் மோசமான பார்முடன் போராடி வருகிறார். அதற்கு கடந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 0, 12 ரன்கள் எடுத்ததே உதாரணம்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையே புனேவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் இடம்பெறவில்லை. பெங்களூருவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்படவில்லை. அந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் டக் அவுட்டும், இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்களும் எடுத்திருந்தார். இதுவும் இந்திய அணி தோல்வியுற ஒரு காரணமாக அமைந்தது. இந்தநிலையில், புனேவில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் ஆதரவையும், சில தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கே.எல்.ராகுல்:
இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி புனேவில் இன்று தொடங்கியது. முன்னதாக, கடந்த வாரம் பெங்களூருவில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. எனவே, பெங்களூரு டெஸ்ட் போட்டிக்குபிறகு, புனேவில் நடந்த இந்திய அணியின் ஆடும் லெவனில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதன்படி, கே.எல்.ராகுல், முகமது சிராஜ் மற்றும் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, இவர்களுக்கு பதிலாக சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டுள்ளனர். புனே டெஸ்டில் கே.எல்.ராகுல் நீக்கப்படுவார் என்று முதல் டெஸ்ட் போட்டியிலிருந்தே சமூக வலைதளங்களில் விவாதங்கள் கிளம்பிய நிலையில், ரோஹித் சர்மா இன்று அதை செய்துள்ளார்.
கில் இன் – ராகுல் அவுட்:
புனேவில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல் ஏன் நீக்கப்பட்டார் என்பதற்கான காரணம் தெரியவந்துள்ளது. கே.எல்.ராகுல் கடந்த சில மாதங்களாக பல போட்டிகளில் மோசமான பார்முடன் போராடி வருகிறார். அதற்கு கடந்த பெங்களூரு டெஸ்ட் போட்டியில் முதல் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் முறையே 0, 12 ரன்கள் எடுத்ததே உதாரணம். மறுபுறம், கழுத்து வலி காரணமாக பெங்களூரு டெஸ்ட் போட்டியில் விளையாடாத சுப்மன் கில், தற்போது முழுமையான உடல் தகுதியுடன் இருக்கிறார். இதன் காரணமாகவே, புனே டெஸ்டில் விளையாடும் லெவன் அணியில் இடம் பிடித்தார். கில்லின் தற்போதைய பேட்டிங் ஃபார்ம் கே.எல்.ராகுலை விட சிறப்பாக உள்ளது. முன்னதாக, வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் சதம் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
– Not part of T20I team.
– Didint played in the 3rd ODI vs SL.
– Not part of the 2nd Test vs NZ.2024 has been tough for KL Rahul in terms of selection and injuries, comeback strong soon. 🌟 pic.twitter.com/1TrUmAzWSu
— Johns. (@CricCrazyJohns) October 24, 2024
12 மணிநேரத்தில் முடிந்த கம்பீரின் ஆதரவு:
டாஸ் முடிந்து கேப்டன் ரோகித் சர்மா அணியை அறிவித்தபோது, அதில் கே.எல்.ராகுலின் பெயர் இடம்பெறவில்லை. நேற்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இந்திய அணியில் கே.எல்.ராகுலின் இடம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கம்பீர், “ கான்பூரில் கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடினார். அணி நிர்வாகம் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும். சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது, நிபுணர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதுதான் முக்கியம். கேஎல் ராகுலுக்கு அணி நிர்வாகத்தின் முழு ஆதரவு உள்ளது. கான்பூரில் கடினமான விக்கெட்டில் அவர் நல்ல இன்னிங்ஸ் விளையாடினார்.” என்று பேசினார்.
ALSO READ: World Polio Day 2024: போலியோ என்றால் என்ன..? உலக நாடுகள் ஒழிக்க போராடுவது ஏன்..?
கம்பீர் இவ்வளவு தெளிவாக பேசியதன் காரணமாக, இன்று நடைபெறும் புனே டெஸ்ட் போட்டியில் இடம் பிடிப்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. கம்பீர் இதைச் சொன்ன 12 மணி நேரத்தில், கேஎல் ராகுல் அணியில் இருந்து வெளியேறினார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், ரவிச்சந்திரன் அஸ்வின், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா.
இந்திய அணிக்கு எதிரான நியூசிலாந்து அணி:
டாம் லாதம் (கேப்டன்), டெவோன் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் ப்ளன்டெல் (விக்கெட் கீப்பர்), கிளென் பிலிப்ஸ், டிம் சவுத்தி, மிட்செல் சான்ட்னர், அஜாஸ் படேல், வில்லியம் ஓ’ரூர்க்.