5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs NZ Test Records: நியூசிலாந்து அணியை டெஸ்டில் எதிர்கொள்ளும் இந்திய அணி.. இதுவரை பதிவான சாதனைகள் தெரியுமா..?

IND vs NZ: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் நேருக்குநேர் மோதலில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் மொத்தமாக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் அதிகபட்சமாக இந்திய அணி 22 போட்டிகளிலும், நியூசிலாந்து 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 27 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.

IND vs NZ Test Records: நியூசிலாந்து அணியை டெஸ்டில் எதிர்கொள்ளும் இந்திய அணி.. இதுவரை பதிவான சாதனைகள் தெரியுமா..?
இந்தியா – நியூசிலாந்து (Image: twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 15 Oct 2024 11:04 AM

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் நாளை (அக்டோபர் 16) முதல் தொடங்குகிறது. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இரண்டாவது டெஸ்ட் அக்டோபர் 24-28 வரை புனேயிலும், கடைசி டெஸ்ட் நவம்பர் 1-5 வரை மும்பையிலும் நடைபெறுகிறது. இந்திய மண்ணில் இதுவரை நியூசிலாந்து அணியால் எந்த இருதரப்பு டெஸ்ட் தொடரையும் வெல்ல முடியவில்லை.

இரு தரப்புக்கு இடையேயான கடைசித் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் வென்றது. முதல் டெஸ்ட் போட்டியில் டிராவில் முடிந்தநிலையில், இந்திய அணி 2வது போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

ALSO READ: IND W Vs AUS W: கடைசி வரை திக்! திக்! போராடி வீழ்ந்த இந்திய அணி.. கரை சேர்க்க தவறிய கவுர்!

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் நேருக்குநேர் மோதலில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இரு அணிகளும் மொத்தமாக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் அதிகபட்சமாக இந்திய அணி 22 போட்டிகளிலும், நியூசிலாந்து 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 27 போட்டிகள் டிரா ஆகியுள்ளது.

இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர் விவரம்:

மொத்த தொடர்: 12
இந்தியா வெற்றி: 10
நியூசிலாந்து வெற்றி: 00
டிரா: 2

இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிள் விவரம்:

மொத்த டெஸ்ட் போட்டிகள்: 36
இந்தியா வெற்றி: 17
நியூசிலாந்து வெற்றி: 2
டிரா: 17

கடைசி 5 போட்டிகளில் நிலை என்ன..?

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில் முடிவுகள் நியூசிலாந்து அணிக்கே சாதகமாக உள்ளது. இரு அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் இந்திய அணி ஒரு வெற்றியும், நியூசிலாந்து அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே அதிக ரன்கள் குவித்த வீரர் யார்..?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 15 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராகுல் டிராவிட் 6 சதங்கள் மற்றும் 6 அரை சதங்கள் உள்பட 1659 குவித்துள்ளார். 24 டெஸ்ட் போட்டிகளில் 8 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் உட்பட 1595 ரன்கள் குவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் 2வது இடத்தில் இருக்கிறார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் 10 போட்டிகளில் 2 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் உள்பட 1224 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ALSO READ: MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? அனுமதிக்காக மும்பை செல்லும் சிஎஸ்கே நிர்வாகிகள்!

அதிக விக்கெட்கள் எடுத்த வீரர் யார்..?

இந்தியா – நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் இதுவரை நியூசிலாந்து அணிக்கு எதிராக 9 போட்டிகளில் விளையாடி 66 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான ரிச்சர்ட் ஹாட்லி 14 போட்டிகளில் 65 விக்கெட்களுடன் 2வது இடத்தில் உள்ளார். அதேபோல், இந்தியாவின் பிஷன் சிங் பேடி 12 போட்டிகளில் 57 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

டெஸ்ட் தொடருக்கான இந்தியா-நியூசிலாந்து அணிகள்:

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப்.

நியூசிலாந்து அணி: டாம் லாதம் (கேப்டன்), டாம் ப்ளூன்டெல் (விக்கெட் கீப்பர்), மைக்கேல் பிரேஸ்வெல் (முதல் டெஸ்ட் மட்டும்), மார்க் சாப்மேன், டெவோன் கான்வே, மாட் ஹென்றி, டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரன், மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், இஷ் சோதி (2வது மற்றும் 3வது டெஸ்ட் மட்டும்), டிம் சவுத்தி, கேன் வில்லியம்சன் மற்றும் வில் யங்.

Latest News