5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs SA 1st T20: இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டி20 எப்போது? எந்த சேனலில் பார்க்கலாம்?

Team India: தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு எதிரான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். அதேநேரத்தில், இளம் வீரர்களான அவேஷ் கான், ரவி பிஷ்னாய், விஜய்குமார், ரமன்தீப் சிங், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

IND vs SA 1st T20: இந்தியா – தென்னாப்பிரிக்கா முதல் டி20 எப்போது? எந்த சேனலில் பார்க்கலாம்?
இந்தியா – தென்னாப்பிரிக்கா (Image: BCCI)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 07 Nov 2024 19:03 PM

சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-0 என தோல்வியடைந்த இந்திய அணி அடுத்ததாக, தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மோசமாக செயல்பட்டது. ஆனால், தற்போது, சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நவம்பர் 8ம் தேதி (நாளை) டர்பனில் உள்ள கிங்ஸ்மீடில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு பிறகு, அடுத்த 3 போட்டிகள் முறையே கெக்பெர்ஹா, செஞ்சுரியன் மற்றும் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 10, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எய்டன் மார்க்கரமும் கேப்டனாக செயல்பட இருக்கின்றனர்.

நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் பார்டர் – கவாஸ்கர் டிராபிக்கான திட்டங்களை தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தீட்டி வருவதால், தென்னாப்பிரிக்காவில் பயிற்சி பணிகளை மேற்கொள்ள தேசிய கிரிக்கெட் அகாடமின் (என்சிஏ) தலைவர் விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு எதிரான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர். அதேநேரத்தில், இளம் வீரர்களான அவேஷ் கான், ரவி பிஷ்னாய், விஜய்குமார், ரமன்தீப் சிங், அபிஷேக் சர்மா, ரிங்கு சிங் ஆகியோருக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ALSO READ: Watch Video: கேப்டனுடன் கடும் வாக்குவாதம்.. போட்டிக்கு நடுவே வெளியேறிய அல்சாரி ஜோசப்..!

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

டி20 கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவும், தென்னாப்பிரிக்காவும் இதுவரை 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், இந்திய அணி அதிகபட்சமாக 15 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டியில் முடிவில்லாமல் போனது.

போட்டி எங்கு நடைபெறுகிறது..?

இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பு இரு அணி கேப்டன்களும் டாஸ் போட களமிறங்குவார்கள்.

போட்டியை எந்த சேனலில் காணலாம்..?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டியை ஸ்போர்ட்ஸ் 18ன் பல்வேறு சேனல்களில் நேரலையில் கண்டுகளிக்கலாம். மொபைலில் பார்க்க விரும்புவோர் ஜியோ சினிமா லைவ் மூலம் நேரலையில் காணலாம்.

இந்தியா – தென்னாப்பிரிக்கா தொடர் அட்டவணை:

  • முதல் டி20 போட்டி – நவம்பர் 8
  • இரண்டாவது டி20 போட்டி – நவம்பர் 10
  • மூன்றாவது டி20 போட்டி – நவம்பர் 13
  • நான்காவது டி20 போட்டி – நவம்பர் 15

ALSO READ: WTC Final 2025: ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இந்திய அணி பைனல் வருமா? சமன்பாட்டின் முழு விவரம்!

இரு அணிகளின் விவரம்:

இந்திய அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ராமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஷ்னாய், விஜய்குமார், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், யாஷ் தயாள்.

தென்னாப்பிரிக்கா அணி:

ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, டொனோவன் ஃபெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், பேட்ரிக் க்ரூகர், கேசவ் மகராஜ், டேவிட் மில்லர், மிஹாலலி ம்பொங்வானா, ரியானிலே சிம்டன், ரியானிலே சிம்பெல், ரியானிலே சிம்பெல், பீட்டர், சிபம்லா (3வது மற்றும் 4வது) மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

Latest News