5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IND vs SA 2nd T20I: வருண் சக்கரவர்த்தியின் 5 விக்கெட் வீண்.. இந்தியாவை வீழ்த்தி அசத்திய தென்னாப்பிரிக்கா!

India vs South Africa 2nd T20I Cricket Match Result: இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் எய்டன் மார்க்கரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரை தென்னாப்பிரிக்கா அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

IND vs SA 2nd T20I: வருண் சக்கரவர்த்தியின் 5 விக்கெட் வீண்.. இந்தியாவை வீழ்த்தி அசத்திய தென்னாப்பிரிக்கா!
இந்தியா – தென்னாப்பிரிக்கா (Image: twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 10 Nov 2024 23:52 PM

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக, இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் காரணமாக இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தற்போது, 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றதால் 4 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் உள்ளது.

ALSO READ: Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேறும் இந்தியா..? எந்த அணி பங்கேற்க வாய்ப்பு..?

முன்னதாக டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது. 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. தென்னாப்பிரிக்கா அணி 44 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து, 86 ரன்களுக்குள் மொத்தமாக 7 விக்கெட்டுகளை இழந்தது. இதனால், இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இதையடுத்து, டிரிஸ்டன் ஸ்டப்ஸுடன், தென்னாப்பிரிக்கா ஆல் ரவுண்டர் ஜெரால்டு கோட்ஸி பாட்ர்னர்ஷிப் அமைத்தார். இந்த ஜோடிதான் இந்திய அணியில் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் ஜெரால்ட் கோட்ஸி ஜோடியானது 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க தென்னாப்பிரிக்கா அணி எளிதான வெற்றியை பதிவு செய்தது. கோட்ஸி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 9 பந்துகளில் 19 ரன்களும், அதேசமயம் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 41 பந்துகளில் 47 ரன்கள் குவித்தும் தென்னாப்பிரிக்கா அணியை வெற்றிபெற செய்தனர்.

வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம், சர்வதேச டி20 போட்டியில் ஒரே இன்னிங்சில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை வருண் சக்கரவர்த்தி பெற்றுள்ளார். இந்த சாதனையை அதிகபட்சமாக புவனேஷ்வர் குமார் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு முறை பதிவு செய்துள்ளனர். அதேநேரத்தில், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தீபக் சாஹர் ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் தலா ஒரு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர்.

இந்திய அணியின் பேட்டிங்:

கெபெராவில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்தும் முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 50 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாற தொடங்கியது. இன்றைய போட்டியில் 4 ரன்கள் மட்டுமே எடுக்க நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா மீண்டும் ஏமாற்றம் அளித்தார்.  கடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் டக் அவுட்டானார்.

ALSO READ: AUS vs PAK: ஆஸ்திரேலியாவை ஓட விட்ட பாகிஸ்தான் அணி.. 6 ஆண்டுகளுக்குப் பின் மோசமான சாதனை!

கேப்டன் சூர்யகுமார் யாதவும் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதையடுத்து, ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், திலக் வர்மா ஆகியோர் இரட்டை இலக்க ரன்களை எடுத்து இந்திய அணி 124 ரன்கள் எடுக்க உதவினர். இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 39, அக்சர் படேல் 27, திலக் 20 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்கா சார்பில் மார்கோ ஜான்சன், ஜெரால்டு கோட்ஸி, அண்டில் சிமெலன், ஐடன் மார்க்ரம் மற்றும் பீட்டர் டாலோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Latest News