IND vs SA 3rd T20I: இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி.. குறுக்கே வரப்போகும் மழை…!

Team India: இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடைபெறும் செஞ்சூரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இங்கு, வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக வேகத்தையும், பவுன்ஸ் தாக்குதலையும் ஏற்படுத்தலாம்.

IND vs SA 3rd T20I: இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான 3வது டி20 போட்டி.. குறுக்கே வரப்போகும் மழை...!

சூர்யகுமார் யாதவ் (Image: AP)

Published: 

13 Nov 2024 16:12 PM

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று (நவம்பர் 13) நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. அதேசமயம், டாஸ் அரை மணி நேரத்திற்கு முன்னதாக அதாவது 8 மணிக்கு போடப்படும். இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு போட்டிகளில், முதல் டி20 போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் பிறகு, இரண்டாவது டி20யில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. இதன் காரணமாக, இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்று 1 -1 என்ற கணக்கில் உள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற முன்னிலை வகிக்க வேண்டும் என இரு அணிகளும் முயற்சிக்கும்.

ALSO READ: On This Day in 2024: ஒருநாள் வரலாற்றில் அதிக ரன்கள்.. இதே நாளில் 264 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா!

பிட்ச் ரிப்போர்ட்:

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நடைபெறும் செஞ்சூரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் பிட்ச் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இங்கு, வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக வேகத்தையும், பவுன்ஸ் தாக்குதலையும் ஏற்படுத்தலாம். கடந்த சில ஆண்டுகளில் செஞ்சூரியன் பிட்ச் முன்பை விட அதிக வேகம் மற்றும் பவுன்ஸில் முன்னேற்றம் கண்டுள்ளது. இதனால், டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம்.

செஞ்சூரியன் உள்ள இந்த ஸ்டேடியத்தில் இந்திய அணி இதுவரை ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தென்னாப்பிரிக்கா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்தது. அந்த பழைய அணியில் உள்ள 3 வீரர்கள் நடப்பு தொடரில் விளையாடி வருகின்றனர். அவர்கள் கிளாசென், டேவில் மில்லர் மற்றும் ரீசா ஹெண்ட்ரிக்ஸ் ஆவர். அதேநேரத்தில், இந்த பிட்ச்சில் விளையாடி தற்போது இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ஒரே வீரர் ஹர்திக் பாண்டியா மட்டுமே.

மழை பெய்ய வாய்ப்பா..?

இன்று நடைபெறவுள்ள இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான போட்டியில் வெப்பநிலை 27 டிகிரியாகவும், மழை பெய்ய 25 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழைக்கான வாய்ப்பு 6 சதவீதம் என்றும், வானம் 39 சதவீதம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்படுப்பட்டுள்ளது. இதனால், மழையால் போட்டிக்கு இடையூறு ஏற்படலாம். அப்படி இல்லையென்றால், முழு போட்டியும் நடைபெறாமல் போகலாம்.

போட்டியை எங்கே காணலாம்..?

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியை பார்க்க விரும்புவோர் ஸ்போர்ட்ஸ் 18 சேனல்களில் கண்டுகளிக்கலாம். அதேநேரத்தில், மொபைல் போனில் பார்க்க விரும்புவோர் ஜியோ சினிமா ஆப்பில் இலவச லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்.

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் இதுவரை 29 டி20 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. இதில், அதிகபட்சமாக இந்திய அணி 16 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி முடிவு இல்லாமல் போனது.

ALSO READ: India Vs Pakistan: இந்தியாவின் கோரிக்கைக்கு அடிபணிய வேண்டாம்.. சாம்பியன்ஸ் டிராபியில் தலையிட்ட பாகிஸ்தான் அரசு!

இரு அணிகளின் விவரம்:

இந்திய அணி:

அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், விஜய்குமார் வைஷாக், அவேஷ் கான், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், யாஷ் தயாள், ரவி பிஷ்னோய், ராமன்தீப் சிங், ஜிதேஷ் சர்மா.

தென்னாப்பிரிக்கா அணி:

ரீசா ஹென்ட்ரிக்ஸ், ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), ஐடன் மார்க்ரம் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஜெரால்ட் கோட்ஸி, என் பீட்டர், ஒட்னியல் பார்ட்மேன், டோனோவன் ஃபெரீரா, மிஹாலி ம்போங்ருவாகர் .

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!
குளிர் காலத்தில் சாப்பிட வேண்டிய 6 வகை உணவுகள்!
நீங்கள் பயன்படுத்தும் கோதுமை தரமானதா - சோதிப்பது எப்படி?
உணவில் தக்காளி சேர்ப்பது ஆபத்தானதா? - ஆய்வுகள் கூறுவது என்ன?