Rohit Sharma: ரித்திகா இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட்! ரோஹித் மகனின் பெயர் இதுதானா..?

Ritika Sajdeh: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த நவம்பர் 15ம் தேதி இரண்டாவது முறையாக தந்தையானார். இதற்கு ஒருநாள் கழித்து ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எங்கள் குடும்பம் இப்போது நான்கு பேராகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.

Rohit Sharma: ரித்திகா இன்ஸ்டா மூலம் ரசிகர்களுக்கு ட்ரீட்! ரோஹித் மகனின் பெயர் இதுதானா..?

ரோஹித் - ரித்திகா

Published: 

01 Dec 2024 13:21 PM

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா, கடந்த மாதம் இரண்டாவது முறையாக தந்தையானார். ரோஹித்தின் மனைவி ரித்திகா சஜ்தே மகனை பெற்றெடுத்தார். இதன்மூலம், தற்போது ரோஹித் சர்மா மற்றும் ரித்திகாவுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ரித்திகாவுக்கு கடந்த நவம்பர் 15ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, ரோஹித் சர்மாவின் மகனுக்கு என்ன பெயர் வைக்க போகிறார்கள் என்ற செய்தி சமூக வலைதளங்களில் எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் விதமாக சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் ரித்திகா ஒரு ஸ்டோரி மூலம், தனது மகனின் பெயரை வெளியிட்டுள்ளார்.

ALSO READ: Champions Trophy 2025: ஹைப்ரிட் மாடலுக்கு சம்மதம்.. இறங்கி வந்த பாகிஸ்தான்.. ஐசிசிக்கு ட்விஸ்ட் கொடுத்த பிசிபி!

ரோஹித் மகனின் பெயர் என்ன..?

குழந்தை பிறந்து 15 நாட்கள் ஆன நிலையில், ரோஹித் சர்மா மற்றும் ரித்திகா சஜ்தேவின் மகனின் பெயர் என்ன என்று யாருக்கு தெரியாது. ரித்திகா சஜ்தே டிசம்பர் 1ம் தேதியான இன்று இன்ஸ்டா ஸ்டோரியில் சிறப்பு புகைப்படத்தை பகிர்ந்து, அதில் தனது மகனின் பெயர் அஹான் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த நவம்பர் 15ம் தேதி இரண்டாவது முறையாக தந்தையானார். இதற்கு ஒருநாள் கழித்து ரோஹித் சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “எங்கள் குடும்பம் இப்போது நான்கு பேராகிவிட்டது” என்று குறிப்பிட்டிருந்தார். அதனை தொடர்ந்து தற்போது ரித்திகாவும் இன்ஸ்டா மூலம் தனது மகன் பெயரை வெளியிட்டார்.

ரித்திகா வெளியிட்ட புகைப்படத்தில் 4 கிறிஸ்மஸ் பொம்மைகள் உள்ளது. அதில், ஒரு பக்கம் ரிட்ஸ் அதாவது ரித்திகா என்றும், இரண்டாவது பக்கம் ரோ அதாவது ரோஹித் சர்மா என்றும், மூன்றாவது பக்கம் சாமி அதாவது சமைரா என்றும் எழுதப்பட்டு இருந்தது. நான்காவதாக இருக்கும் சிறிய பொம்மையில் தலையின் அஹான் என்று எழுதப்பட்டுள்ளது. இதன்மூலம், ரோஹித் சர்மாவின் மகனுக்கு அஹான் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா:

இந்திய கேப்டன் ரோஹித் சர்மா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. மகன் பிறந்ததால் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடவில்லை என்றாலும், பும்ரா தலைமையிலான இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ALSO READ: Ajith Kumar: அஜித் பங்கேற்கும் கார் ரேஸ் எப்போது? எங்கு பார்க்கலாம்.. தேதி வாரியாக விவரம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வருகின்ற டிசம்பர் 6ம் தேதி அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது. இந்த போட்டியானது பிங்க் பந்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணி இன்று ஆஸ்திரேலியா பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்கு எதிராக கான்பெராவில் பயிற்சி ஆட்டத்தில் பிங்க் பந்தில் விளையாடி வருகிறது.

பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன்:

ஜாக் எட்வர்ட்ஸ் (கேப்டன்), மாட் ரென்ஷா, ஜாக் கிளேட்டன், ஆலிவர் டேவிஸ், ஜேடன் குட்வின், சாம் ஹார்பர் (விக்கெட் கீப்பர்), சார்லி ஆண்டர்சன், சாம் கான்ஸ்டாஸ், ஸ்காட் போலண்ட், லாயிட் போப், ஹன்னோ ஜேக்கப்ஸ், மஹ்லி பியர்ட்மேன், ஐடன் ஓ’கானர், ஜெம் ரியான், ஜாக் நிஸ்பெட்.

இந்திய டெஸ்ட் அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்) ), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் , ஆகாஷ் தீப், பர்திஷ் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல்.

இணையத்தில் வைரலாகும் சித்தார்த் – அதிதி ராவ் தம்பதியின் போட்டோஸ்
நீல நிற புடவையில் நடிகை அனிகா... வைரலாகும் போட்டோஸ்
நடிகை அனுபமா பரமேஷ்வரனின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்..!
நடிகை ரஜிஷா விஜயன் பற்றிய சுவாரஸ்ய தகவல்..