5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rohit Sharma: ஆஸ்திரேலியா தொடரை மிஸ் செய்யப்போகும் ரோஹித்.. அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்?

Rohit Sharma Miss Australia Series: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 போட்டிகளில் ரோஹித் சர்மா வெளியேறினால், துலீப் டிராபியில் இந்திய பி அணியின் கேப்டனாக இருந்த அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க வீரராக களமிறங்கலாம். துலீப் டிராபியில் கேப்டனாக செயல்பட்டு 2 சதங்களை அடித்த அபிமன்யு ஈஸ்வரன், சமீபத்தில் நடைபெற்ற இரானி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணிக்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக 191 ரன்கள் குவித்தார்.

Rohit Sharma: ஆஸ்திரேலியா தொடரை மிஸ் செய்யப்போகும் ரோஹித்.. அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்?
ரோஹித் சர்மா (Image: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 16 Oct 2024 12:41 PM

இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே வருகின்ற நவம்பர் 22 முதல் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் முக்கிய தொடராக பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக ரோஹித் சர்மா விளையாட மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த தெளிவான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

பிசிசிஐ தரப்பில் வெளியான தகவலில், தனிப்பட்ட காரணங்களால் பார்டர் – கவாஸ்கரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாது என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பிசிசிஐ அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளார். இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு, ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வந்தால், ரோஹித் சர்மா 5 போட்டிகளிலும் விளையாடுவார்.

ஆஸ்திரேலியா – இந்தியா டெஸ்ட் போட்டி அட்டவணை:

  1. முதல் டெஸ்ட்: நவம்பர் 22-26, பெர்த்
  2. இரண்டாவது டெஸ்ட்: டிசம்பர் 6-10, அடிலெய்டு (பகலிரவு ஆட்டம்)
  3. மூன்றாவது டெஸ்ட்: டிசம்பர் 14-18, பிரிஸ்பேன்
  4. நான்காவது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்
  5. ஐந்தாவது டெஸ்ட்: 3-7, சிட்னி

 

ALSO READ: Hardik Pandya Birthday: பிறப்பு முதல் விவாகரத்து வரை.. ஹர்திக் பாண்டியாவின் 30 ஆண்டுகால வாழ்க்கை!

நியூசிலாந்து டெஸ்ட் தொடர்:

வருகின்ற நவம்பர் 22 முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி வரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. ஆனால், அதற்கு முன் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விளையாடுவார். இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பெங்களூருவில் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் அக்டோபர் 24-ம் தேதி தொடங்குகிறது. மூன்றாவது டெஸ்ட் மும்பையில் நவம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது.

ரோஹித் பதிலாக அடுத்த கேப்டன் யார்..?

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் 2 போட்டிகளில் ரோஹித் சர்மா வெளியேறினால், துலீப் டிராபியில் இந்திய பி அணியின் கேப்டனாக இருந்த அபிமன்யு ஈஸ்வரன் தொடக்க வீரராக களமிறங்கலாம். துலீப் டிராபியில் கேப்டனாக செயல்பட்டு 2 சதங்களை அடித்த அபிமன்யு ஈஸ்வரன், சமீபத்தில் நடைபெற்ற இரானி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணிக்கு எதிராக ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்காக 191 ரன்கள் குவித்தார்.

நீண்ட ஆண்டு காலமாக உள்நாட்டு தொடரில் சிறப்பாக விளையாடி வரும், அபிமன்யு ஈஸ்வரன், எப்போது இந்திய அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா வெளியேறினால், அபிமன்யு ஈஸ்வரனுக்கு நல்ல வாய்ப்பு அமையும்.

கேப்டன்ஷிப்பை பொறுத்தவரை ரோஹித் சர்மா இல்லாத நிலையில், துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்கலாம். அதற்கு முன், பிசிசிஐயோ அல்லது ரோஹித் சர்மாவோ முன் வந்து இந்த விஷயத்தில் ஏதாவது அறிவித்தால்தான் நிலைமை என்னவென்று தெளிவாகும்.

2வது முறையாக தந்தையாகிறாரா ரோஹித் சர்மா..?

இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகா சஜ்தே கர்ப்பமாக இருப்பதாகவும், ரோஹித் விரைவில் 2வது தந்தையாகிவிடுவார் என்றும் கூறப்படுகிறது. ரோஹித் சர்மா இரண்டாவது முறையாக தந்தையானால், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோஹித் வெளியேறக்கூடும் என்றும் தெரிகிறது.

இந்தியாவின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் இதேபோன்ற சம்பவம் நடந்தது. 2020-21 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது அந்த அணியின் கேப்டனாக விராட் கோலி இருந்தார். பின்னர் அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி முடிந்து திரும்பிய விராட் முதல் முறையாக தந்தையானார். இதனால் அந்த தொடரின் எஞ்சிய 3 போட்டிகளில் அவரால் விளையாட முடியவில்லை.

ALSO READ: Food Recipes: சாப்பிடும் ஆசையை தூண்டும் கொய்யா சட்னி.. இப்படி செய்து ருசித்து பாருங்க..!

கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பா..?

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகுதான் இந்திய அணி தேர்வில் பிசிசிஐ கவனம் செலுத்தும்., கே.எல். நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய கவர்ந்தால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் களமிறங்கலாம். பார்டர்-கவாஸ்கர் டிராபியில் ரோஹித் இல்லாத நிலையில், அனுபவம் வாய்ந்த வீரர் கே.எல்.ராகுல் முக்கிய பங்கு வகிக்கலாம்.

 

Latest News