5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Indian Team Met Modi: பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணியினர்.. சிறப்பு விருந்திலும் பங்கேற்பு..!

டி20 உலகக் கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 17 வருடங்களுக்கு பிறகு சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினர் இன்று தனி விமானம் மூலம் பார்படாஸில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில், இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது, இந்திய அணி வீரர்களுடன் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோர் உடன் இருந்தனர்.

Indian Team Met Modi: பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய அணியினர்.. சிறப்பு விருந்திலும் பங்கேற்பு..!
Follow Us
intern
Tamil TV9 | Updated On: 04 Jul 2024 17:19 PM

அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதுவரை இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்றன. இதில் இரண்டு குழுக்களாக நடைபெற்ற லீக் மற்றும் சூப்பர் 8 சுற்றுகள் வெற்றிபெற்ற நான்கு அணிகள் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. அரையிறுதில், வெற்றிபெற்ற இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இரு அணிகளும் பார்படாசில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மோதின. இதில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்று 2வது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை உலக கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்னர் கடந்த 2007-ல் தோனி தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், தற்போது 17 வருடத்திற்கு பிறகு ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.

Also Read:India Team: உலகக் கோப்பையுடன் தாயகம் திரும்பிய இந்திய அணி.. உற்சாக வரவேற்பு!

கடந்த மாதம் ஜூன் 30 ஆம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில், சாம்பியன் பட்டம் வென்ற நிலையில், அங்கு ஏற்பட்ட சூறாவளி புயல் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது. அதனைத்தொடர்ண்டு நிலைமை சீரானவுடன், மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸ் நகரில் இருந்து நேற்று புறப்பட்ட இந்திய அணியினர் இன்று காலை தாயகம் திரும்பினர். டெல்லி வந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Also Read:  Gautam Gambhir : இந்தியா உலக கோப்பையில் 1 ரன்னில் தோற்ற போது இரவு முழுவதும் அழுதேன் – கம்பீர்

பின்னர் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த சந்திப்பின் போது இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.  சிறப்பு பேருந்து மூலம் பிரதமரின் இல்லத்திற்கு சென்ற இந்திய அணி வீரர்கள், கோப்பையை பிரதமரிடம் வழங்கி வாழ்த்து பெற்ற நிலையில், வீரர்களுக்கு சிறப்பு  ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய அணி வீரர்கள், வீரர்களின் குடும்பத்தினர் மற்றும்  பயிற்சியாளர் டிராவிட் உள்ளிட்ட்டோர் சிறப்பு விருந்தில் கலந்துகொண்டனர்.

பின்னர் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  இந்திய அணியில் இடம்பெற்ற அனைத்து வீரர்களும் தனித்தனியாக பிரதமருடன் புகைப்படம் எடுத்ஹ்ட நிலையில், பும்ரா, ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் தங்களது குடும்பத்துடன் பிரமருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

.

பிரதமருடன் நடைபெற்ற சந்திப்பை தொடர்ந்து மும்மை வான்கடே மைதானத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் பங்கேற்க இந்திய அணியின் மும்பை விரைந்தனர். அங்கு இந்திய வீரர்கள் பங்கேற்கும் வாகன அணிவகுப்பு நடைபெற உள்ளதாக ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்ட நிலையில், தற்போது மும்பையில் மழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், வெற்றி ஊர்வலம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Latest News