India T20 schedule 2025: இந்திய அணியின் அடுத்த டி20 தொடர் எப்போது? எந்த அணிக்கு எதிராக?
Team India: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் இந்த ஆண்டு இந்திய அணிக்கு கடைசி டி20 தொடராக அமைந்தது. இப்போது 2025 புத்தாண்டில், இந்திய கிரிக்கெட் அணி தனது அடுத்த டி20 தொடரை சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
தென்னாப்பிரிக்காவில் நடந்த 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் கடைசி டி20 தொடரை வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் சதம் அடித்திருந்தனர். அடுத்ததாக 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 18.2 ஓவரில் 148 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம், மிகப்பெரிய வெற்றிபெற்று தொடரை முடிந்தது.
நவம்பர் மாதமான இந்த மாதத்துடன் இந்திய அணியின் கடைசி டி20 தொடர் முடிவுக்கு வந்தது. இனி இந்திய அணி அடுத்த ஆண்டு, அதாவது 2025ல்தான் டி20 போட்டியில் விளையாடும்.
ALSO READ: Ranji Trophy 2024: ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்.. கேரளாவுக்கு எதிராக கலக்கிய அன்ஷூல் கம்போஜ்!
இந்தியாவுக்கு 24வது வெற்றி:
2024ம் ஆண்டில் ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணி சிறப்பாகவே செயல்பட்டது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 வெற்றி, 2024ல் இந்திய அணிக்கு கிடைத்த 24வது வெற்றியாகும். இந்த ஆண்டு இந்திய அணி இதுவரை 26 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், இந்திய அணி 2 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்தது. அது தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும், ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தின் முதல் டி20 போட்டியிலும் தோல்வியடைந்தது, இது தவிர அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியை பெற்றுள்ளது. மேலும், 2024 டி20 உலகக் கோப்பை போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியை சந்திக்காமல் சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
சூர்யகுமார் யாதவுக்கு ஹாட்ரிக் தொடர் வெற்றி:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இந்த தொடர் வெற்றியின் மூலம் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஒட்டுமொத்தமாக சூர்யகுமார் யாதவுக்கு இது ஐந்தாவது தொடர் வெற்றி இதுவாகும். சூர்யாகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளை 3-0 என்ற கணக்கில் க்ளீன் ஸ்வீவ் செய்தது. அதற்கு முன், கடந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்தது. சூர்யா கேப்டனாக தனது முதல் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 4-1 என கைப்பற்றினார்.
கடைசி டி20 போட்டியில் இந்திய அணி ஸ்பெஷல் சாதனை:
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 4வது மற்றும் கடைசி டி20 போட்டியில் தனது இன்னிங்ஸில் இந்திய அணி மொத்தமாக 23 சிக்ஸர்களை பறக்கவிட்டு இருந்தது. இந்தியாவுக்கு இது ஒரு சாதனை என்றாலும், உலக சாதனையை சிறிது நேரத்தில் தவறவிட்டது. வெறும் 4 சிக்ஸர்களுடன் இந்த சாதனையை இந்திய அணி தவறவிட்டது.
அதாவது, டி20 போட்டிகளில் ஒரே இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் விளாசிய அணி என்ற உலக சாதனையை ஜிம்பாப்வே படைத்துள்ளது. 2024 ஆம் ஆண்டு, ஜிம்பாப்வே பேட்ஸ்மேன்கள் காம்பியாவுக்கு எதிரான போட்டியில் 27 சிக்ஸர்கள் அடித்து உலக சாதனை படைத்தனர். இந்தியா தற்போது 23 சிக்சர்களுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. டி20 கிரிக்கெட் போட்டியில் 26 சிக்ஸர்களுடன் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த சாதனை பட்டியலில் நேபாளம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
அடுத்த டி20 தொடர் எப்போது?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் இந்த ஆண்டு இந்திய அணிக்கு கடைசி டி20 தொடராக அமைந்தது. இப்போது 2025 புத்தாண்டில், இந்திய கிரிக்கெட் அணி தனது அடுத்த டி20 தொடரை சொந்த மண்ணில் விளையாடுகிறது. இந்த தொடரில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்த தொடரின் அட்டவணையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறவுள்ளது.
டி20 தொடர் அட்டவணை:
- முதல் போட்டி: ஜனவரி 22, ஈடன் கார்டன்ஸ்
- 2வது போட்டி: ஜனவரி 25, சென்னை
- 3வது போட்டி: ஜனவரி 28, ராஜ்கோட்
- 5வது போட்டி: ஜனவரி 31, புனே
- கடைசி மற்றும் 5வது போட்டி: பிப்ரவரி 2, மும்பை