Musheer Khan Car Accident: சாலை விபத்தில் தந்தையுடன் சிக்கிய முஷீர் கான்.. சிகிச்சை தர மும்பை கொண்டுபோகும் பிசிசிஐ!
Musheer Khan: இளம் வயதிலேயே சச்சின் சாதனையை முறியடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார் முஷீர் கான். 2024 ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்து மும்பை கோப்பையை வெல்ல உதவினார். இதனுடன், சச்சினின் சாதனையை முறியடித்து, ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், துலீப் டிராபியின் அறிமுக போட்டியில் முஷீர் கான் 181 ரன்கள் அடித்து, துலீப் டிராபியின் அறிமுக ஆட்டத்தில் 159 ரன்கள் எடுத்த சச்சினின் சாதனையை முறியடித்தார்.
இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சர்பராஸ் கானின் இளைய சகோதரர் முஷீர் கான் சாலை விபத்தில் காயமடைந்துள்ளார். இந்த விபத்தில் முஷீர் கானின் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முஷீர் கான் தனது தந்தை நௌஷாத் கானுடன் அசம்கரில் இருந்து லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து ஏற்பட்டது. விபத்து எப்படி நடந்தது என்பது முழுமையாக தெரியவில்லை என்றால், விபத்தின்போது காரானது சாலையில் 4-5 முறை கவிழ்ந்ததாகவும், இதனால் முஷீருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக முஷீர் சுமார் 16 வாரங்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருப்பார்.
விபத்து எப்படி நடந்தது..?
முஷீர் தனது தந்தை நௌஷாத் கான் மற்றும் இருவருடன் வெள்ளிக்கிழமை மதியம் அசம்கரில் இருந்து பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே வழியாக லக்னோவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, இவர்களது கார் டிவைடரில் மோதி கவிழ்ந்தது. விபத்தில் முஷீர் கானின் தந்தை மற்றும் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், முஷீர் கானுக்கு தலை மற்றும் கழுத்தின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, காயமடைந்த இவர்கள் அனைவரும் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Musheer Khan suffers a fracture in a road accident in UP. He’s set to miss the Irani Cup and the initial phase of the Ranji trophy. (TOI).
– Wishing Musheer a speedy recovery! pic.twitter.com/lZaLJmjniC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) September 28, 2024
யார் இந்த முஷீர் கான்..?
19 வயதான முஷீர் கான் உ.பி.யின் அசம்கர் மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது, கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். முஷீர் கான் தற்போது உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் நிலையில், இவரது சகோதரர் சர்பராஸ் கான் இந்திய அணிக்காக விளையாடுகிறார். கடந்த 2022ம் ஆண்டு வெறும் 17 வயதில் முஷீர் கான் மும்பைக்காக உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமாகி அசத்தினார். இதையடுத்து, உள்நாட்டு கிரிக்கெட்டில் முஷீர் கானின் சிறப்பான ஆட்டத்தால் 19 வயதுக்குட்பட்ட உலகக் கோப்பைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த உலகக் கோப்பையில் 7 போட்டிகளில் களமிறங்கி முஷீர் கான் 2 சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் உள்பட 360 ரன்கள் குவித்தார்.
Breaking News :
Musheer Khan Met With A Massive Accident.
He Was Coming From Azamgarh To Lucknow.
Musheer And His Father Admitted In Hospital. pic.twitter.com/7pbFA2AIMU
— Vaibhav Bhola 🇮🇳 (@VibhuBhola) September 28, 2024
சச்சினின் சாதனையை முறியடித்த முஷீர் கான்:
இளம் வயதிலேயே சச்சின் சாதனையை முறியடித்து தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார் முஷீர் கான். 2024 ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்து மும்பை கோப்பையை வெல்ல உதவினார். இதனுடன், சச்சினின் சாதனையை முறியடித்து, ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், துலீப் டிராபியின் அறிமுக போட்டியில் முஷீர் கான் 181 ரன்கள் அடித்து, துலீப் டிராபியின் அறிமுக ஆட்டத்தில் 159 ரன்கள் எடுத்த சச்சினின் சாதனையை முறியடித்தார்.
முஷீர் கான் இதுவரை 9 முதல் தர போட்டிகளில் விளையாடி 51.14 சராசரியில் 3 சதம் மற்றும் 1 அரை சதம் உள்பட 716 ரன்கள் குவித்துள்ளார். ஆட்டமிழக்காமல் 2023 ரன்கள் எடுத்ததே முஷீர் கானின் சிறந்த முதல் தர ஸ்கோர் ஆகும். மேலும், முதல் தர போட்டியில் முஷீர் கான் இதுவரை 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
மும்பை கிரிக்கெட் சங்கம்:
முஷீர் கான் குறித்து மும்பை கிரிக்கெட் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”நேற்றிரவு சாலை விபத்தில் சிக்கிய முஷீர் கான், வரும் நாட்களில் தொடங்கவுள்ள இரானி கோப்பையில் பங்கேற்க முடியாது. முஷீர் கான் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள எம்சிஏ மற்றும் பிசிசிஐ இன் மருத்துவக் குழு அவரை கவனித்துக் கொள்ளும்” என்று தெரிவித்துள்ளது.