5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vinesh Phogat Journey: நடு ரோட்டில் போராட்டம்.. ஒலிம்பிக் தகுதி நீக்கம்.. வினேஷ் போகத் வாழ்வின் கருப்பு பக்கங்கள்!

Paris Olympics 2024: வினேஷ் போகத் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்டை எதிர்கொள்ள இருந்த நிலையில், இன்று அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது வினேஷ் போகத் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கு அதிர்ச்சியை தந்தது. விதிகளின்படி, வினேஷ் போகத்தின் எடை 50 கிலோக்குள் இருக்க வேண்டும். ஆனால், 50 கிலோ 100 கிராம் இருந்ததால் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

Vinesh Phogat Journey: நடு ரோட்டில் போராட்டம்.. ஒலிம்பிக் தகுதி நீக்கம்.. வினேஷ் போகத் வாழ்வின் கருப்பு பக்கங்கள்!
வினேஷ் போகத் (Image source: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 07 Aug 2024 14:25 PM

வினேஷ் போகத்: இந்திய நட்சத்திர மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ ஃப்ரீஸ்டைல் ​​எடைப் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி புது சரித்திரம் படைத்தார். இந்தநிலையில், வினேஷ் போகத் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் சாரா ஹில்டெப்ராண்டை எதிர்கொள்ள இருந்த நிலையில், இன்று அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இது வினேஷ் போகத் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிற்கு அதிர்ச்சியை தந்தது. விதிகளின்படி, வினேஷ் போகத்தின் எடை 50 கிலோக்குள் இருக்க வேண்டும். ஆனால், 50 கிலோ 100 கிராம் இருந்ததால் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் வினேஷ் போகத்தால் விளையாட முடியாது. இப்படியான சூழ்நிலையில், பாரிஸ் ஒலிம்பிக் வரை வினேஷ் போகத் கடந்து வந்த பாதை எப்படி இருந்தது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

பயணம்:

வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் இறுதிப் போட்டி வரை வந்தது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு முன்பு வரை வினேஷ் போகத் காயன், அறுவை சிகிச்சை மற்றும் நடுரோட்டில் போராட்டம் என அனைத்தையும் கடந்து வந்தார். இத்தனை சிரமங்களையும் கடந்து பாரிஸ் நகருக்கு அடியெடுத்து வைத்த வினேஷ் போகத், இப்போது தங்கம் வெல்ல ஒரு படி தூரத்தில் இருந்தும் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

ALSO READ: Vinesh Phogat Disqualified: வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம்.. கலைந்த தங்கப் பதக்க கனவு.. உடைந்த இந்திய ரசிகர்கள்!

பாரிஸ் ஒலிம்பிக் தகுதி போட்டிக்கு முன்பு வரை வினேஷ் போகத், 53 கிலோ எடை பிரிவில் களமிறங்கி விளையாடி வந்தார். காயம் காரணமாகவும், உடல் எடை பிரச்சனை காரணமாகவும் தனது எடையை குறைத்து பாரிஸ் ஒலிம்பிக்கில் 50 கிலோ எடை பிரிவில் களமிறங்கினார். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு முந்தைய சோதனைப் போட்டியின் போது அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உடல்நலம் தேறி மீண்டும் ஒலிம்பிக் போட்டிக்குள் களமிறங்கினார்.

வினேஷ் போகத் ஒலிம்பிக்கில் தனது முதல் போட்டியில் அதாவது காலிறுதிக்கு முந்தைய 16வது தகுதி சுற்றில் ஜப்பானின் யுய் சுசாகியை எதிர்கொண்டு 3-2 என்ற கணக்கில் வெற்றிபெற்றார். காலிறுதியில் உக்ரைனின் ஒக்ஸானா லிவாச்சை எதிர்கொண்டு 7-5 என்ற கணக்கில் வினேஷ் போகத் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

பின்னர், நேற்று நடைபெற்ற அரையிறுதியில் வினேஷ் போகத், கியூபாவின் யூஸ்னெலிஸ் குஸ்மானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் உஸ்னெலிஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இறுதிப்போட்டிக்கு முன்னேறி இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட வினேஷ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

நடுரோட்டில் போராட்டம்:

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வினேஷ் போகத் உள்ளிட்ட பல முக்கிய வீரர், வீராங்கனைகள் நடுரோட்டில் இறங்கி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் பங்கேற்ற வினேஷ் போகத்திற்கு பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான பாதை மிகவும் கடினமாகிவிட்டது. இந்த போராட்டால் நடுரோட்டில் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டபோது, போராட்டத்தில் முழுவீச்சாக செயல்பட்டபோதிலும் வினேஷ் போகத்தால் சரியாக பயிற்சி மேற்கொள்ளவில்லை.

ALSO READ: Olympic 2024 : முதல் வாய்ப்பிலேயே 89.34 மீ-க்கு ஈட்டியை வீசி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் நீரஜ் சோப்ரா!

கிட்டத்தட்ட முடிந்த கேரியர்:

கடந்த 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில்தான் வினேஷ் போகத் முதன்முறையாக ஒலிம்பிக்கில் அறிமுகமானார். ரியோ ஒலிம்பிக்கில் முழங்கால் காயம் காரணமாக வினேஷ் போகத் பாதியில் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ரியோ ஒலிம்பிக் காயத்திற்குப் பிறகு வினேஷின் கேரியர் முடிந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனாலும் மனம் தளராத வினேஷ், மீண்டும் டோக்கியோ ஒலிம்பிக்கில் களமிறங்கி 16வது சுற்றுடன் வெளியேறினார். அதன்பிறகு, போராட்டம், காயம் என போராடிய வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டி வரை வந்தது சாதனைக்குரிய விஷயம்தான்.

Latest News