5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Gautam Gambhir: சூர்யகுமாருக்கு ஏன் டி20 கேப்டன் பதவி..? பத்திரிகையாளர்கள் கேள்விக்கு கம்பீர் விளக்கம்..!

Gautam Gambhir Press Conference: ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு ஏன் டி20 கேப்டன் பதவி வழங்கப்பட்டது..? விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம், முகமது ஷமி கம்பேக், இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கவுதம் கம்பீர் தெளிவாக விளக்கம் அளித்தார்.

Gautam Gambhir: சூர்யகுமாருக்கு ஏன் டி20 கேப்டன் பதவி..? பத்திரிகையாளர்கள் கேள்விக்கு கம்பீர் விளக்கம்..!
Image source: CricCrazyJohns/ x)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 22 Jul 2024 12:05 PM

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இலங்கை சுற்றுபயணத்திற்கு முன், செய்தியாளர்கள் சந்திப்பை இன்று நடத்தினார். இந்திய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீரின் முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாக்கும். கம்பீருடன், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கரும் பங்கேற்றார். அப்போது பத்திரிகையாளர் கம்பீரிடம் பல்வேறு விதமான கேள்விகளை தொடுத்தனர். அத்தனை கேள்விகளுக்கு கவுதம் கம்பீர். எந்தவித பதட்டமின்றி பொறுமையாக பதிலளித்தார். அதில், ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவுக்கு ஏன் டி20 கேப்டன் பதவி வழங்கப்பட்டது..? விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் எதிர்காலம், முகமது ஷமி கம்பேக், இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு கவுதம் கம்பீர் தெளிவாக விளக்கம் அளித்தார்.

Also read: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கின் பாதுகாப்பில் இரண்டு இந்திய நாய்கள்.. வரலாற்றில் இதுவே முதல் முறை!

சூர்யகுமாருக்கு ஏன் டி20 கேப்டன் பதவி..?

இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஒருநாள் தொடரில் இடம்பெறவில்லை. தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர் சந்திப்பில், “ சூர்யகுமார் யாதவ் டி20 அணியில் மட்டுமே இடம்பெற்றுள்ளார். அவர் ஒரு டி20 வீரர் மட்டுமே. எனவே, சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. எனவே, டி20 அணியை அமைக்க சூர்யகுமார் யாதவிற்கு கேப்டன் பதவி வழங்கினோம். டி20யில் இருந்து ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஓய்வு பெற்றதால், அவர்களது இடத்தை நிரப்ப முயற்சி செய்து வருகிறோம்” என்றார்.

பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள்:

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் நியமனம் குறித்து பேசிய கவுதம் கம்பீர், “ இந்தியா – இலங்கை தொடருக்கு இன்னும் ஒரு மாத காலம் உள்ளது. நான் அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டாய்ச் ஆகியோரை பரிந்துரை செய்துள்ளேன். மேலும், சிலரிடம் பேசியுள்ளேன். பிசிசிஐயின் முடிவுக்குபின், அவர்களுடன் பணியாற்ற நான் மிகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என்றார்.

ரோஹித்தும் விராட்டும் இந்திய அணியில் எவ்வளவு காலம் இருப்பார்கள்?

ரோஹித் சர்மா மற்றும் கோலி குறித்து பேசிய கவுதம் கம்பீர், “ரோஹித் சர்மாவு, விராட் கோலியும் சர்வதேச கிரிக்கெட்டில் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். ரோஹித் மற்றும் விராட் தற்போது டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளதால், இருவரும் இனி இரண்டு வடிவங்களில் விளையாடவுள்ளனர். 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.” என்று கூறினார்.

விராட் கோலி நட்புறவு:

விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து பேசிய கவுதம் கம்பீர், “இதை நான் பலமுறை கூறியுள்ளேன். சண்டையிட அனைவருக்கும் உரிமை உண்டு. அவர்களின் அணிக்காக, அவர்களின் ஜெர்சிக்காகதான் அனைவரும் வெற்றிக்காக போராடுகிறோம். இப்போது நாங்கள் இந்தியாவையும் 140 கோடி இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம். இதுதான் எங்களுக்கு பெருமை. எனக்கும் விராட் கோலிக்கும் இடையே நல்ல நட்புறவு இருக்கிறது.” என்றார்.

மேலும், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இளம் பேட்ஸ்மேன் சுப்மன் கில் வாய்ப்பு அளிக்கப்படும் என்றும்,வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து முகமது ஷமி திரும்புவார் என்றும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Also read: Paris Olympics 2024: ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தில் தங்கம் உள்ளதா? இதை அதிகமுறை வென்றவர் யார்..?

Latest News