5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Asian Champions Trophy: 5வது முறை சாம்பியன்.. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் அசத்திய இந்திய ஹாக்கி அணி!

India Vs China Hockey Final: சீனா ஹாக்கி மற்றும் இந்திய ஹாக்கி அணிகளுக்கு இடையேயான ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியானது சீனாவின் ஹூலுன்பீர் நகரின் உள்ள மோகி பயிற்சி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முக்கால்வாசி நேரம் வரை இரு அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. போட்டியின் 51வது நிமிடத்தில் இந்திய ஹாக்கி வீரர் ஜூக்ராஜ் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

Asian Champions Trophy: 5வது முறை சாம்பியன்.. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் மீண்டும் அசத்திய இந்திய ஹாக்கி அணி!
இந்தியா – சீனா ஹாக்கி அணி (Image: hockey india)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 28 Nov 2024 13:27 PM

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2024ன் ஹாக்கி இறுதிப்போட்டியில் இன்று சீனா மற்றும் இந்திய ஹாக்கி அணிகள் மோதின. இந்திய அணி ஆறாவது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கிய நிலையில், சீனா முதல் முறையாக ஆசிய சாம்பியன் டிராபி ஹாக்கி இறுதிப்போட்டியில் களமிறங்கியது. முதல் முறையாக களமிறங்கி சாம்பியன் பட்டத்தை வெல்ல முயற்சித்த சீன அணி, இந்திய அணிக்கு கடும் போட்டியை கொடுத்தது. இருப்பினும், ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய ஹாக்கி அணி, சொந்த மண்ணில் சீனாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, 5வது முறையாக கோப்பை கைப்பற்றி தங்கப் பதக்கத்தை வென்றார்.

ALSO READ: ICC Equal Prize Money: கிரிக்கெட்டில் இனி அனைத்தும் சமம் என நிரூபித்த ஐசிசி.. உலகக் கோப்பையில் சமமான பரிசுத் தொகை அறிவிப்பு!

போட்டியில் என்ன நடந்தது..?

சீனா ஹாக்கி மற்றும் இந்திய ஹாக்கி அணிகளுக்கு இடையேயான ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியானது சீனாவின் ஹூலுன்பீர் நகரின் உள்ள மோகி பயிற்சி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முக்கால்வாசி நேரம் வரை இரு அணிகளாலும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. போட்டியின் 51வது நிமிடத்தில் இந்திய ஹாக்கி வீரர் ஜூக்ராஜ் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

கடைசி சில நிமிடங்கள் இந்திய ஹாக்கி அணி சீனா வீரர்களை கோல் அடிக்காமல் தற்காத்து கொண்டது. முன்னதாக, இந்திய ஹாக்கி அணி கோல் அடித்ததும் சீனா தனது கோல்கீப்பரை நீக்கி, கடைசி ஐந்து நிமிடங்களுக்கு ஒரு கூடுதல் வீரரை களமிறக்கியது. ஆனால், அது சீனாவுக்கு பலனை தரவில்லை. போட்டியின் கடைசி நேரத்தில் சீன அணி குறைந்தது ஒரு கோலை அடித்து போட்டியை டிரா செய்ய முயற்சித்தது. இந்திய வீரர்கள் சிறப்பாக தடுப்பாட்டத்தில் ஈடுபட, சீனா அணி கடைசி வரை முயற்சித்து சாம்பியன் பட்டத்தை விட்டுகொடுத்தது.

5வது முறை சாம்பியன்:

ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு முன்பு இந்திய ஹாக்கி அணி 2011, 2016, 2018, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றது. 2023ல் நடந்த இறுதிப் போட்டியில் மலேசியாவை வீழ்த்தி நான்காவது முறையாக இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி, தற்போது ஐந்தாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. தற்போது மீண்டும் இந்திய ஹாக்கி அணி 2024ம் ஆண்டிலும் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு இந்தியாவும், பாகிஸ்தானும் கூட்டாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக அதிக முறை சாம்பியன் பட்டத்தை வென்றது பாகிஸ்தான் அணிதான். இதுவரை மூன்று முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2024 ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. அதே நேரத்தில் முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய சீன அணி, இரண்டாவது இடத்தை பிடித்தது.

அரையிறுதி போட்டி எப்படி அமைந்தது..?

முன்னதாக, முதலாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இரண்டாவதாக நடந்த அரையிறுதி போட்டியில் சீனாவும் பாகிஸ்தான் அணியும் மோதியது. இதில், சீன ஹாக்கி அணி வெற்றிபெற்று முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மேலும், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் கொரியா இடையே நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தது. இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்த ஸ்டேடியத்தில் இந்த போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: India Vs Bangladesh: அஸ்வின் கைகளில் காத்திருக்கும் 5 சாதனைகள்.. வங்கதேச டெஸ்ட் தொடரில் வரலாறு படைப்பாரா?

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி முழுவதும் இந்த சீசனில் இந்திய ஹாக்கி அணி இதுவரை எந்த போட்டியிலும் தோல்வி அடையவில்லை. ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்த அணி தொடர்ந்து 6 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. அதன்பிறகு சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது. போட்டியின் நடப்பு சீசனில் தோற்கடிக்கப்படாத ஒரே அணியாக இந்திய அணி உள்ளது.

Latest News