Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கருக்கு கிடைத்த அரிய மரியாதை.. என்ன தெரியுமா?

Manu Bhaker : பாரிஸ் ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளில் அதாவது ஜூலை 27 ஆம் தேதி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாகர் வெண்கலம் வென்றார். இந்தப் பதக்கத்தின் மூலம் இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையை மனு பெற்றார்.

Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் மனு பாக்கருக்கு கிடைத்த அரிய மரியாதை.. என்ன தெரியுமா?

மனு பாக்கர்

Published: 

06 Aug 2024 14:54 PM

பாரிஸ் ஒலிம்பிக் : ஒலிம்பிக் போட்டிகளின் நிறைவு விழாவில் பாரிஸ் ஒலிம்பிக்கில் இரட்டை வெண்கலப் பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாகர் இந்தியாவின் கொடி ஏந்துபவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நிறைவு விழா ஆகஸ்ட் 11-ம் தேதி பிரான்ஸ் தலைநகரில் நடைபெறும். மனு ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது தெரிந்ததே. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய வீரர் ஒருவர் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வெல்வது இதுவே முதல்முறை.

Also Read : ஒலிம்பிக்கில் ப்ரோபோஸ்.. தங்கம் வென்ற வீராங்கனையிடம் காதலை வெளிப்படுத்திய சக வீரர்!

10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு போட்டியில் மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஒரு ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை மனு பாக்கர் படைத்தார். இதுவரை எந்த ஒரு இந்திய வீரரும் ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றதில்லை. ஆனால், பல ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் உள்ளனர். பாரிஸில் முதல் வெற்றிக்கு 48 மணி நேரத்திற்குப் பிறகு, மனு பாக்கர் மற்றொரு வெண்கலம் வென்று வரலாறு படைத்தார்

அரிய மரியாதை

இரண்டு பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மனு பார்க்கருக்கு அரிய மரியாதை கொடுக்கும் விதமாக ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய மூவண்ணக்கொடியை ஏந்தும் மரியாதை அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் நிறைவு விழாவில் இந்திய கொடியை ஏந்தி மனு பாக்கரை வழிநடத்துவார் என ஐஓஏ தலைவர் டாக்டர். பி.டி. உஷா, தலைமைக் குழு பிரதிநிதி ககன் நரங் ஆகியோர் அறிவித்துள்ளனர்

மனு பாக்கர் சாதனை

மனு பாக்கர் மற்றும் சரப்ஜோத் சிங் ஜூலை 29ம் தேதியான நேற்று, 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு குழு போட்டியில் வெண்கலப் பதக்கப் போட்டிக்கு தகுதி பெற்றனர். இருவரும் தகுதிச் சுற்றில் 20 முறை கச்சிதமாக சுட்டு அதன் மூலம் 580 புள்ளிகளைப் பெற்றனர். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் கொரிய ஜோடியுடன் மனு பாக்கர், சரப்ஜோத் சிங் ஜோடி கடுமையாக போராடினார்கள். இந்தபோட்டியில் முதல் செட்டை கொரியா வென்று தொடங்கியது. இதன் பிறகு, மனு மற்றும் சரப்ஜோத் சிங் தொடர்ந்து 5 செட்களில் வெற்றி பெற்று அசத்தியது.

பாரிஸ் ஒலிம்பிக்கின் இரண்டாவது நாளில் அதாவது ஜூலை 27 ஆம் தேதி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் மனு பாகர் வெண்கலம் வென்றார். இந்தப் பதக்கத்தின் மூலம் இந்தியாவுக்காக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பதக்கம் வென்ற முதல் பெண் துப்பாக்கி சுடும் வீராங்கனை என்ற பெருமையை மனு பெற்றார். இப்போது ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்று புதிய வரலாறும் படைத்தார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!