Smriti Mandhana Birthday: கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா பிறந்தநாள் இன்று.. நேஷனல் க்ரஷ் ரெக்கார்ட் லிஸ்ட் இதோ!
Smriti Mandhana: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு இணையான பெயரை, பெண்கள் கிரிக்கெட் அணியும் பெற்றுள்ளது. அதற்கு ஸ்ம்ருதி மந்தனாவும் ஒரு காரணம். இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அனைத்துவிதமான தொடர்களிலும் விளையாடியது. அதில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா, தனித்துவ சாதனையும் படைத்தார்.
ஸ்மிருதி மந்தனா: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஸ்மிருதி மந்தனா தனது பிரத்யேக பேட்டிங் மற்றும் அழகான ரியாக்ஷன்களால் அதிகபடியான ரசிகர்களை தன் பக்கம் இழுத்துள்ளார். இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் இவர நேஷனல் க்ரஷ் என்று அழைக்கிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு இணையான பெயரை, பெண்கள் கிரிக்கெட் அணியும் பெற்றுள்ளது. அதற்கு ஸ்ம்ருதி மந்தனாவும் ஒரு காரணம். இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அனைத்துவிதமான தொடர்களிலும் விளையாடியது. அதில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் குவித்து ஸ்மிருதி மந்தனா, தனித்துவ சாதனையும் படைத்தார். இந்தநிலையில், யார் இந்த ஸ்மிருதி மந்தனா..? இந்திய அணிக்காக என்ன சாதனை படைத்துள்ளார் என்பதை இங்கே பார்க்கலாம்.
யார் இந்த ஸ்மிருதி மந்தனா..?
இடது கை பேட்ஸ்மேனான ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணியில் தொடக்க வீரராகவும், துணை கேப்டனாகவும் இருந்து வருகிறார். இவர் கடந்த 1996ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி மும்பையில் பிறந்தார். இவரது தந்தையில் பெயர் ஸ்ரீனிவாஸ் மற்றும் தாயார் பெயர் ஸ்மிதா ஆகும். மேலும், இவருக்கு ஷர்வன் மந்தனா என்ற சகோதரரும் உள்ளார். ஸ்மிருதி மந்தனாவிற்கு இரண்டு வயது இருக்கும்போது , இவரது முழு குடும்பமும் சாங்லியில் உள்ள மாதவ் நகருக்கு குடிபெயர்ந்தது.
ALSO READ: Turmeric: மஞ்சள் மகிமை.. வீட்டு கிச்சனில் இருக்கும் சூப்பர் மருந்து.. இவ்வளவு விஷயம் இருக்கா?
மாதவ்நகரிலேயே ஆரம்பக் கல்வி கற்ற ஸ்மிருதி மந்தனா, சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் தன் சகோதரனுடன் கிரிக்கெட் விளையாட தொடங்கிய அவர், அதன்பின் கிரிக்கெட்டையே தன் வாழ்க்கையாக தேர்ந்தெடுத்தார். தொடர்ந்து, ஸ்மிருதி மந்தனா தொழில் ரீதியாக கிரிக்கெட் விளையாடி அசத்தினார். ஸ்மிருதி மந்தனா 11 வயது இருக்கும்போதே, 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மிருதி மந்தனாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள்:
- பிங்க் பந்து டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆவார்.
- ஸ்மிருதி மந்தனா ஒருநாள் கிரிக்கெட்டில் சேஸிங் செய்யும் போது தொடர்ச்சியாக அதிக 50+ ஸ்கோர்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளார். 2021 ஆம் ஆண்டில் ஸ்மிருதி மந்தனா தொடர்ச்சியாக 10 50+ ஸ்கோர்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்துள்ளார்.
- 2018ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மற்றும் ஐசிசி மகளிர் ஒருநாள் வீராங்கனை ஆகிய விருதுகளை பெற்றார். இது இவரது வாழ்வில் மிகப்பெரிய கவுரவம்.
- 2018 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஸ்மிருதி மந்தனா சிறப்பாக செயல்பட்டி, இந்தியாவுக்காக அதிக ரன்களை குவித்தார்.
- ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்த இந்திய பெண் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இந்த சாதனையை வெறும் 51 இன்னிங்ஸ்களில் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பெண்கள் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.
- ஸ்மிருதி மந்தனாவுக்கு 2019ம் ஆண்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் உயரிய விருதான பெலிண்டர் கிளார்க் விருது வழங்கப்பட்டது. மகளிர் பிக் பாஷ் லீக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அந்த ஆண்டு சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
- 2016ம் ஆண்டு ஸ்மிருதி மந்தனா பெண்கள் சேலஞ்சர் டிராபியில் இந்தியா ரெட் அணிக்காக மூன்று அரை சதங்களை அடித்தார்.
ஸ்மிருதி மந்தனாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை:
ஸ்மிருதி மந்தனா இந்திய மகளிர் அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதங்கள், 3 அரைசதங்கள் உள்பட 629 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 85 ஒருநாள் போட்டியகளில் விளையாடி 7 சதங்கள், 27 அரைசதங்கள் உள்பட 3585 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 13 சர்வதேச டி20 போட்டிகளில் 3320 ரன்கள் எடுத்துள்ளார்.
ALSO READ: Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்த இரு நாடுகள் பங்கேற்க தடை! ஏன் தெரியுமா?