ICC Women’s T20 World Cup: தத்தளிக்கும் ஹர்மன்ப்ரீத் படை.. இந்திய அணி அரையிறுதிக்கு செல்ல என்ன செய்ய வேண்டும்?
Indian Cricket Team: 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து அணி 2.900 என்ற நிகர ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1.908 ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா அரையிறுதிக்கு முன்னேற மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் போதாது. அதுமட்டுமின்றி, நிகர ரன் ரேட்டை அதிகரிக்க செய்து, மற்ற அணிகளின் முடிவுகளும் நமக்கு சாதகமாக அமைய வேண்டும்.
ஹர்மன்ப்ரீத் தலைமையிலான இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி, டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்து கொண்டது. நியூசிலாந்து எதிரான முதல் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய மகளிர் அணி, குரூப் – ஏ பிரிவின் இரண்டாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2024 டி20 உலகக் கோப்பையில் தனது முதல் புள்ளியை பெற்றது. அதேநேரத்தில், இந்திய மகளிர் அணி அடுத்ததாக இலங்கை அணியை நாளை எதிர்கொள்கிறது.
இந்தியா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற என்ன செய்ய வேண்டும்..?
இந்திய மகளிர் அணி குரூப் ஏ பிரிவில் இன்னும் இரண்டு போட்டிகளில் விளையாடவுள்ளது. இதையடுத்து, இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டுமெனில் அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய மகளிர் அணி குரூப் ஸ்டேஜில் அதிகபட்சமாக 6 புள்ளிகளை எட்ட முடியும். இப்போது, இந்திய அணி 2 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ள நிலையில், இன்னும் 2 போட்டிகளில் வெற்றிபெற்று 4 புள்ளிகளை பெற வேண்டும்.
இந்திய அணி 2 போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் தனது குழுவில் 4வது இடத்தில் உள்ளது. இந்திய அணியின் நிகர ரன் ரேட் -1.217 ஆகும். பாகிஸ்தான் அணியும் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் அதே புள்ளியை பெற்றுள்ள நிலையில், ரன் ரேட் அடிப்படையில் குரூப் ஸ்டேஜில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் அணியின் நிகர ரன் ரேட் 0.555 ஆகும்.
எந்த அணி முதலிடம்..?
2024 மகளிர் டி20 உலகக் கோப்பை குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து அணி 2.900 என்ற நிகர ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணியும் ஒரு போட்டியில் வெற்றி பெற்று 1.908 ரன் ரேட்டுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா அரையிறுதிக்கு முன்னேற மீதமுள்ள இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் போதாது. அதுமட்டுமின்றி, நிகர ரன் ரேட்டை அதிகரிக்க செய்து, மற்ற அணிகளின் முடிவுகளும் நமக்கு சாதகமாக அமைய வேண்டும்.
ஒரு போட்டியில் தோற்றால் கூட என்ன நடக்கும்..?
நியூசிலாந்து ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால், இந்தியாவுக்கு ஆறு புள்ளிகள் போதுமானதாக இருக்கும். எஞ்சியிருக்கும் ஒரு போட்டியில் மட்டும் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் அது இந்தியாவுக்கு சாதகமாக மாறும். எஞ்சியிருக்கும் ஒவ்வொரு ஆட்டத்திலும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா வெற்றி பெற்றால், நியூசிலாந்து ஆஸ்திரேலியாவை வென்றால், மூன்று அணிகளும் 6 புள்ளிகளுடன் சமமாக இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், ஏ பிரிவில் இருந்து அரையிறுதிக்கு செல்லும் இரண்டாவது அணி நிகர ரன் ரேட் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.
ALSO READ: Dipa Karmakar Retirement: இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் திடீர் ஓய்வு..!
இந்திய மகளிர் அணி இலங்கையை தோற்கடித்து, ஆஸ்திரேலிய அணியிடம் தனது கடைசி குரூப் ஸ்டேஜ் போட்டியில் தோற்றால் அரையிறுதி போட்டியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்படும். அப்போதும் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டுமெனில், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் தோற்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியை சந்திக்க வேண்டும். இந்தநிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் நான்கு புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அதன்பிறகு, நிகர ரன் ரேட் அடிப்படையில் 2024 மகளிர் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு செல்லும் இரண்டு அணிகள் முன்னேறும்.
மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அனி விவரம்:
ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, தீப்தி ஷர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ரிச்சா கோஷ், யாஸ்திகா பாட்டியா, பூஜா வஸ்த்ரகர், அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங் தாக்கூர், தயாளன் ஹேம்லதா, ஆஷா ஷோபானா, ராதா, ஸ்ரேயங்கா பாட்டீல், சஜ்னா சஜீவன்