5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Vinesh Phogat : மல்யுத்தத்தில் இருந்து விலகினார் வினேஷ் போகத்.. இனியும் விளையாட எந்த வலியும் இல்லை என ஆதங்கம்!

Indian Wrestler | ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், காலிறுதிக்கான முந்தைய சுற்றில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தக்கப் பதக்கம் வென்ற ஜப்பான் வீராங்கனை யூ சசாகியை வீழ்த்தினார். காலிறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகத், உக்ரைனின் ஒக்சானா லிவாச் என்பரை எதிர்க்கொண்டார். இதிலும் அடித்து தூள் கிளப்பிய வினேஷ் போகத் 7-5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அறையிருதிக்கு முன்னேறினார். 

Vinesh Phogat : மல்யுத்தத்தில் இருந்து விலகினார் வினேஷ் போகத்.. இனியும் விளையாட எந்த வலியும் இல்லை என ஆதங்கம்!
வினேஷ் போகத்
vinalin
Vinalin Sweety | Updated On: 08 Aug 2024 08:00 AM

பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024 : உலகப் புகழ் பெற்ற ஒலிம்பிக் போட்டி பாரிஸில் நடைபெற்று வருகிறது. கடந்த கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய ஒலிம்பிக் போட்டி, வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் உலகம் முழுவது உள்ள ஏராளமான விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று உள்ளனர். அந்த வகையில் இந்தியாவில் இருந்தும் ஏராளமான வீரர்கள் பங்கேற்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒலிம்பிக்கில் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், காலிறுதிக்கான முந்தைய சுற்றில் டோக்கியோ ஒலிம்பிக்கில் தக்கப் பதக்கம் வென்ற ஜப்பான் வீராங்கனை யூ சசாகியை வீழ்த்தினார். காலிறுதிக்கு முன்னேறிய வினேஷ் போகத், உக்ரைனின் ஒக்சானா லிவாச் என்பரை எதிர்க்கொண்டார். இதிலும் அடித்து தூள் கிளப்பிய வினேஷ் போகத் 7-5 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் அறையிறுதிக்கு முன்னேறினார்.

100 கிராம் உடல் எடையால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்

அரையிறுதியில் வினேஷ் போகத், கியூபாவின் யூஸ்னெலிஸ் குஸ்மானை எதிர்கொண்டார். இந்த போட்டியில் வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் உஸ்னெலிஸை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்நிலையில் 100 கிராம் உடல் எடை அதிகமாக இருந்ததன் காரணமாக வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த செய்தி இந்தியர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. போட்டிகளில் அசத்தலாக விளையாடி, இறுதி போட்டிக்கு முன்னேறிய வினேஷ் போகத், எப்படியேனும் தங்க பதக்கம் வென்றுவிடுவார் என இந்தியர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், வினேஷ் போகத்தின் தகுதி நீக்கம் ஏமாற்றத்தை தந்தது.

இதையும் படிங்க : Vinesh Phogat Journey: நடு ரோட்டில் போராட்டம்.. ஒலிம்பிக் தகுதி நீக்கம்.. வினேஷ் போகத் வாழ்வின் கருப்பு பக்கங்கள்!

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத்

இந்த நிலையில் தனது தகுதி நீக்கம் குறித்து மேல்முறையீடு செய்த வினேஷ் போகத், ஒலிம்பிக் இறுதி போட்டிக்கு தகுதிபெற்ற தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இறுதி போட்டிக்கு முன்னேறி தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில், வினேஷ் போகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தான் மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இனியும் போட்டிகளில் விளையாட தனக்கு எந்த வலியும் இல்லை என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். வினேஷ் போகத்தின் இந்த முடிவு, இந்திய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : IPL 2025: ஐபிஎல்லில் முக்கிய வீரரை கழட்டி விடப்போகும் மும்பை இந்தியன்ஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பதக்கத்தை தவற விட்ட மீராபாய் சானு

இதேபோல மகளிருக்கான பளுதூக்குதல் போட்டியின் 49 கிலோ எடைப்பிரிவில் 4வது இடம் பிடித்து நூலிழையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவற விட்டார் இந்திய வீராங்கனை மீராபாய் சானு. 1 கிலோ எடை அதிகமாக இருந்ததன் காரணமாக அவர் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest News