Vinesh Phogat Disqualified: வினேஷ் போகத் திடீரென தகுதி நீக்கம்.. கலைந்த தங்கப் பதக்க கனவு.. உடைந்த இந்திய ரசிகர்கள்!
Paris Olympic 2024: வினேஷ் போகத் இன்று தங்கம் வென்றிருந்தால், இந்திய நாட்டுக்காக தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண் தடகள மற்றும் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருப்பார்.
வினேஷ் போகத் தகுதி நீக்கம்: நட்சத்திர மல்யுத்த வீரர் வினேஷ் போகத், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் வினேஷ் போகத் இன்று 50 கிலோ எடைப் பிரிவில் இறுதிப் போட்டியில் பங்கேற்க முடியாது என்பது தெளிவாகிறது. அனுமதிக்கப்பட்ட எடை வரம்பை விட ஃபோகத், தோராயமாக 100 கிராம் இருந்ததாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இதன்காரணமாகவே, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வினேஷிடம் இருந்து தங்கப் பதக்கத்தை நாடே எதிர்பார்த்தது, இன்று இரவு வினேஷ் இறுதிப் போட்டியில் விளையாட முடியாமல் போனது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் மல்யுத்த 50 கிலோ பிரிவில் இருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட செய்தியை இந்திய அணி வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறது. இரவு முழுவதும் குழுவினரின் சிறந்த முயற்சிகள் இருந்தபோதிலும், அவர் இன்று காலை 50 கிலோவுக்கு மேல் சில கிராம் எடையுடன் இருந்தார். இந்த நேரத்தில் குழுவால் மேலும் எந்த கருத்துகளை கூற முடியாது. வினேஷின் தனியுரிமையை மதிக்குமாறு இந்திய அணி கேட்டுக்கொள்கிறது. இனி வரும் கையில் இருக்கும் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறது” என்று தெரிவித்தது.
Indian Wrestler Vinesh Phogat disqualified from the Women’s Wrestling 50kg for being overweight.
It is with regret that the Indian contingent shares news of the disqualification of Vinesh Phogat from the Women’s Wrestling 50kg class. Despite the best efforts by the team through… pic.twitter.com/xYrhzA1A2U
— ANI (@ANI) August 7, 2024
போட்டி விதிகளின்படி, வினேஷ் போகத் வெள்ளிப் பதக்கத்தை பெற முடியாது. இப்போது தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவர்களுக்கு மட்டுமே 50 கிலோ எடையில் தகுதிபெற்றுள்ளார்கள். இப்போது இறுதிப் போட்டியில் விளையாடாமல் அமெரிக்க மல்யுத்த வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் பெறுகிறார்.
வினேஷ் போகத் இன்று தங்கம் வென்றிருந்தால், இந்திய நாட்டுக்காக தங்கப் பதக்கம் வென்ற முதல் பெண் தடகள மற்றும் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றிருப்பார். கடந்த சில் ஆண்டுகளாக 53 கிலோ எடை பிரிவில் விளையாடி வந்த வினேஷ் போகத், பாரிஸ் ஒலிம்பிக்கில் எடையை குறைத்து 50 கிலோ எடை பிரிவில் களமிறங்கினார். ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு முந்தைய சோதனைப் போட்டியின் போது வினேஷ் போகத்திற்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வினேஷ் போகத் எடையை குறைக்க இரவு முழுவதும் உணவை தவிர்த்து, உடற்பயிற்சி, ஓடுதல் என 50 கிலோ எடைக்கு கீழ் வர தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. எடை குறையும் என்ற நம்பிக்கையில் வினேஷ் போகத் இரவு முழுவதும் தூங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்திய அதிகாரிகளும் ஒலிம்பிக் கமிட்டியிடம் கூடுதல் அவகாசம் கேட்டபோதும், அனைத்து முயற்சிகள் வீணாகின.