ICC Test Rankings: 10 ஆண்டுகளுக்குப் பிறகு தரவரிசையில் கடும் வீழ்ச்சி.. மீண்டு வருவாரா விராட் கோலி..?
Virat Kohli: விராட் கோலி இந்த ஆண்டு 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22.72 சராசரியில் ஒரு அரைசதம் உட்பட 250 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டு 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 671 ரன்கள் குவித்திருந்தார். கடந்த 2020 முதல் 2022 வரை கோலி மோசமான பார்மில் தத்தளித்து வந்தார்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் விராட் கோலியும் ஒருவர். ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, கடந்த சில போட்டிகளாகவே ரன் அடிக்க திணறி வருகிறார். வங்கதேசத்திற்கு எதிரான ஒரு இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி, நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதன் காரணமாக, ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார் விராட் கோலி.
Indian batters in ICC Test Ranking:
Yashasvi Jaiswal – 4
Rishabh Pant – 6
Shubman Gill – 16
Virat Kohli – 22
Rohit Sharma – 26 pic.twitter.com/hNDVJbjvpr— Johns. (@CricCrazyJohns) November 6, 2024
ஐசிசி டெஸ்ட் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இதில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டாப் 20 பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளாது. இதன்மூலம், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு, விராட் கோலி தனது கேரியரில் மோசமான ரேங்கிங் பெற்றுள்ளார். அதாவது, ஐசிசி இன்று வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 22வது இடத்தை பிடித்துள்ளார். இதற்குமுன், விராட் கோலி 10 ஆண்டுகளுக்கு முன் அதாவது கடந்த 2014ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் டாப் 20 இடங்களில் இருந்து வெளியேறினார். இந்த டெஸ்ட் தரவரிசைக்கு முன் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் விராட் கோலி, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
ALSO READ: IND vs AUS: கத்தி முனையில் நிற்கும் 4 இந்திய வீரர்கள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்தான் கடைசியா..?
வெறும் 250 ரன்கள்:
விராட் கோலி இந்த ஆண்டு 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 22.72 சராசரியில் ஒரு அரைசதம் உட்பட 250 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டு 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 671 ரன்கள் குவித்திருந்தார். கடந்த 2020 முதல் 2022 வரை கோலி மோசமான பார்மில் தத்தளித்து வந்தார். அதாவது, கடந்த 2020ம் ஆண்டு விராட் கோலியின் டெஸ்ட் சராசரி 19.33 ஆகவும், 2021ம் ஆண்டு சராசரி 28.21 ஆகவும், 2022ம் ஆண்டு சராசி 26.50 ஆகவும் மட்டுமே இருந்தது. அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 30க்கும் குறைவாகவே உள்ளது. விராட் கோலி அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுபயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறார். இதில், ரன்களை குவித்து பழைய விராட் கோலியாக திரும்பி வருவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
சரிவை சந்தித்த ரோஹித் சர்மா:
விராட் கோலியை தொடர்ந்து இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவும் டெஸ்ட் தரவரிசையில் இரண்டு இடங்களை இழந்து 26வது இடத்தில் உள்ளார்.
Major shake-up in the top 10 of the ICC Men’s Test Player Rankings across the board after #INDvNZ and #BANvSA series 🔥#WTC25 | Details ⬇https://t.co/2XzsyYtCVp
— ICC (@ICC) November 6, 2024
யார் முதலிடம்..?
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜோ ரூட் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் இரண்டாவது இடத்திலும், இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹாரி புரூக் 3வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவை சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஒரு இடம் இழந்து 4வது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் 5வது இடத்தில் இடம் பிடித்துள்ளார். இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் 5 இடங்கள் முன்னேறி 6வது இடத்திலும், சுப்மன் கில் 16வது இடத்திலும் உள்ளார்.
ரவீந்திர ஜடேஜா முன்னேற்றம்:
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களாக ரவீந்திர ஜடேஜா, பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் 2 இடங்கள் முன்னேறி 6வது இடத்தில் உள்ளார். அதேநேரத்தில், ரவிச்சந்திரன் அஸ்வின் 5வது இடத்தில் நீடிக்கிறார். நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி அசத்திய வாஷிங்டன் சுந்தர் 7 இடங்கள் முன்னேறி 46 இடத்தை பிடித்துள்ளார்.