Champions Trophy 2025: ஐசிசி கூட்டத்திற்கு பிறகும் எட்டப்படாத தீர்வு.. பிசிசிஐ முடிவு என்ன?
Indian Cricket Team: வருகின்ற 2025 சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கான உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது. பாகிஸ்தானில் இந்த போட்டி நடைபெற்றால் இந்திய அணியை சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என பிசிசிஐயும், மத்திய அரசும் கூறியுள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர்பாக நவம்பர் 29ம் தேதியான இன்று ஐசிசி கூட்டம் ஆன்லைனில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) உள்ளிட்ட அனைத்து வாரிய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி 2025 எப்போது, எங்கு விளையாடுவது என்பது குறித்து முடிவு செய்யப்பட இருந்தது. மேலும், போட்டியை ஹைபிரிட் மாதிரியில் ஏற்பாடு செய்யலாமா அல்லது வேண்டாமா என்றும், முழுப் போட்டியும் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறுமா என்பது குறித்தும் பேசப்பட்டது. ஆனால் ஐசிசி கூட்டத்திற்கு பிறகும் இந்த போட்டி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாததால், இந்த சந்திப்பு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்னும் கிடைக்காத தீர்வு:
வருகின்ற 2025 சாம்பியன்ஸ் டிராபியை நடத்துவதற்கான உரிமையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பெற்றுள்ளது. பாகிஸ்தானில் இந்த போட்டி நடைபெற்றால் இந்திய அணியை சுற்றுப்பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என பிசிசிஐயும், மத்திய அரசும் கூறியுள்ளது. இந்த பிரச்சனை ஆரம்பித்தது முதல் சாம்பியன்ஸ் டிராபி போட்டி எப்போது, எங்கு நடத்தப்படும் என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வருகிறது. இதன் காரணமாக ஐசிசி இந்த கூட்டத்தை உடனடியாக ஏற்பாடு செய்தது. ஊடக அறிக்கைகளின்படி, ஐசிசி நடத்திய இந்த அவசர கூட்டம் 10 முதல் 15 நிமிடங்கள் மட்டுமே நீடித்ததாகவும், அதன் பிறகு கூட்டம் நவம்பர் 30 ஆம் தேதிக்கு அதாவது நாளை வரை ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இதையடுத்து, இந்த போட்டியின் இறுதி முடிவு நவம்பர் 30ம் தேதியான நாளை வெளியாகும் என்று தெரிகிறது.
ICC trying to find out reasonable solution – Sources
The only solution is that the Champions Trophy will be held in Pakistan – PCB 🔥#ChampionsTrophy2025 pic.twitter.com/XpP1Zra56z
— Muhammad Sami (@mrsami96) November 29, 2024
சுமார் 15 நிமிடங்கள் நடந்த இந்த ஐசிசி கூட்டத்தில் மூன்று விஷயங்கள் பரிசீலிக்கப்பட இருக்கிறது. இந்த முக்கிய விஷயங்கள் ஏதாவது ஒன்று முடிவானாலும் கூட சாம்பியன்ஸ் டிராபி விளையாடப்படும் என்று நம்பப்படுகிறது.
ஹைபிரித் மாடல்:
- முதல் விஷயம் என்னவென்றால், 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஹைபிரித் மாடலில் இருக்க வேண்டும். இந்திய அணியை தவிர மற்ற அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும்.
- இரண்டாவது விஷயம் என்னவென்றால், போட்டிகள் பாகிஸ்தானுக்கு வெளியே முழுமையாக விளையாடப்பட ஏற்பாடு செய்யப்பட்டு, ஹோஸ்டிங் உரிமைகள் மட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் இருக்கும்.
- மூன்றாவது மற்றும் கடைசி விஷயம் என்னவென்றால், இந்த முழு போட்டியும் பாகிஸ்தானில் விளையாடப்படும். ஆனால் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்காது.
இந்திய அணி:
2008ம் ஆண்டுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி ஒருமுறை கூட பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யவில்லை. அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாக நல்லுறவு இல்லை. பாகிஸ்தான் அணி மட்டும் ஐசிசி நடத்தும் போட்டிகளில் மட்டும் இந்தியா வந்து விளையாடி வருகிறது. இதன் காரணமாக இரு அணிகளுக்கும் இடையே இருநாட்டு தொடர்கள் நடைபெறவில்லை. இத்தகைய சூழ்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி இந்த போட்டியை ஹைபிரிட் மாடலில் நடத்த விரும்புகிறது.
This explosion is so epic, I’ve watched it way too many times.🔥🔥🔥 #ChampionsTrophy2025 pic.twitter.com/nlJtvaCEaD
— Nidhi Srivastava (@NidhiSriva86752) November 29, 2024
அதே நேரத்தில், சாம்பியன்ஸ் டிராபிக்கான ஹைபிரிட் மாடலை ஏற்க மாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் ஐசிசிக்கு தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தியது. அப்போதும் இந்திய அணி பாகிஸ்தானுக்குப் பதிலாக இலங்கையில் விளையாடியது. இம்முறையும் அதேபோன்ற விருப்பத்தை இந்திய அணி விரும்புகிறது.