IPL 2024 Auction Highest Paid Players: எம்.எஸ்.தோனி முதல் ஸ்டார்க் வரை.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம்போன வீரர்கள் இவர்கள்தான்!

IPL Players Auction: ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்தில் மொத்தம் ரூ. 641 கோடி களமிறக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் இருக்க வேண்டும். அணிகளில் குறைந்தபட்ச வீரர்களின் எண்ணிக்கை 18 ஆகும். 10 அணிகளும் இதுவரை 46 வீரர்களை ஏற்கனவே தக்கவைத்துள்ள நிலையில், மொத்தம் 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட இருக்கின்றனர்.

IPL 2024 Auction Highest Paid Players: எம்.எஸ்.தோனி முதல் ஸ்டார்க் வரை..  ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம்போன வீரர்கள் இவர்கள்தான்!

அதிக விலைக்கு ஏலம்போன வீரர்கள் (Image: PTI)

Published: 

19 Nov 2024 18:51 PM

ஐபிஎல் ஏலம் எப்போதுமே நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். ஒவ்வொரு அணியின் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த அணியில் தங்களுக்கு பிடித்த வீரர்கள் வீரர்கள் ஏலம் எடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பில் காத்திருப்பார்கள். ஏனெனில், இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் என்பது ஒரு போட்டி மட்டுமல்ல, திருவிழா போன்றது. ஐபிஎல் வரலாற்றில் பல ஆண்டுகளாக பல வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு, கோடீஸ்வரர்களாகியுள்ளனர். ஐபிஎல் ஏலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல சாதனைகள் முறியடிக்கப்படுகின்றன. கடந்த முறை பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன.

கடந்த ஐபிஎல் ஏலத்தில் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலையில் ஏலம் போன வீரர் என்ற சாதனையை படைத்தார். அந்தவகையில், ஐபிஎல் 2025க்கான ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 366 இந்தியர்கள் மற்றும் 208 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

ஒவ்வொரு அணியும் வீரர்களை வாங்க அல்லது தக்கவைக்க மொத்தம் ரூ.120 கோடி உள்ளது. ஏலம் எடுக்க காத்திருக்கும் 10 அணிகளில் பஞ்சாப் கிங்ஸிடம் ரூ.110.5 கோடி உள்ளது.

ALSO READ: On This Day in 2023: இதே நாளில் உடைந்த இந்தியர்களின் மனம்! இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியனான நாள்!

ரூ. 641 கோடி ஏலம் எதிர்பார்ப்பு:

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்தில் மொத்தம் ரூ. 641 கோடி களமிறக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்கள் இருக்க வேண்டும். அணிகளில் குறைந்தபட்ச வீரர்களின் எண்ணிக்கை 18 ஆகும். 10 அணிகளும் இதுவரை 46 வீரர்களை ஏற்கனவே தக்கவைத்துள்ள நிலையில், மொத்தம் 204 வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட இருக்கின்றனர். அதேநேரத்தில், ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக எட்டு வெளிநாட்டு வீரர்கள் இருக்கலாம். எனவே, ஏலத்தில் வெளிநாட்டு வீரர்களுக்கு 70 இடங்கள் உள்ளன. இந்த முறை நடைபெறவுள்ள ஏலத்தில் பல கோடிக்கு ஏலம் போகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம்போன வீரர்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஐபிஎல் ஏலத்தில் ஆண்டுதோறும் அதிக விலைக்கு ஏலம்போன வீரர்கள்:

  • 2008 – எம்.எஸ்.தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ரூ. 9.5 கோடி
  • 2009 – கெவின் பீட்டர்சன் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு), ஆண்ட்ரூ பிளின்டாஃப் (சென்னை சூப்பர் கிங்ஸ்) – ரூ. 9.8 கோடி
  • 2010 – ஷேன் பாண்ட் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), கீரன் பொல்லார்ட் (மும்பை இந்தியன்ஸ்) – ரூ. 4.8 கோடி
  • 2011 – கௌதம் கம்பீர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) – ரூ. 14.9 கோடி
  • 2012 – ரவீந்திர ஜடேஜா (சென்னை சூப்பர் கிங்ஸ்) –  ரூ. 12.8 கோடி
  • 2013 – கிளென் மேக்ஸ்வெல் (மும்பை இந்தியன்ஸ்)- ரூ. 6.3 கோடி
  • 2014 – யுவராஜ் சிங் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)- ரூ. 14 கோடி
  • 2015 – யுவராஜ் சிங் (டெல்லி கேப்பிடல்ஸ்) – ரூ. 16 கோடி
  • 2016 – ஷேன் வாட்சன் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு) – ரூ. 9.5 கோடி
  • 2017 – பென் ஸ்டோக்ஸ் (ரைஸிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்) -ரூ. 14.5 கோடி
  • 2018 – பென் ஸ்டோக்ஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்) -ரூ. 12.5 கோடி
  • 2019 – ஜெய்தேவ் உனத்கட் (ராஜஸ்தான் ராயல்ஸ்), வருண் சக்ரவர்த்தி (பஞ்சாப் கிங்ஸ்)- ரூ. 8.4 கோடி
  • 2020 – பாட் கம்மின்ஸ் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்) -ரூ. 15.5 கோடி
  • 2021 – கிறிஸ் மோரிஸ் (ராஜஸ்தான் ராயல்ஸ்)ரூ. 16.25 கோடி
  • 2022 – இஷான் கிஷன் (மும்பை இந்தியன்ஸ்) -ரூ. 15.25 கோடி
  • 2023 -சாம் கர்ரன் (பஞ்சாப் கிங்ஸ்)-ரூ. 18.5 கோடி
  • 2024 – மிட்செல் ஸ்டார்க் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)-ரூ. 24.75 கோடி

ALSO READ: IND vs AUS: இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் எப்போது? இலவசமாக எங்கு பார்க்கலாம்?

5 அணிகளில் கேப்டன் இல்லை:

கடந்த சீசனில் கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் இந்த முறை ஏலத்தில் உள்ளனர். அது இன்னும் சுவாரஸ்யமாகிவிட்டது. ஐபிஎல் தொடரில் 5 அணிகளுக்கு கேப்டனாக இருக்கும் நிலையில், 5 அணிகள் கேப்டனை ஏலத்தில் தேடி வருகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு கேப்டன் இல்லை.

 

காதலில் பிரச்னையை உண்டாக்கும் சின்ன பொய்கள்!
நடிகர் அருண் விஜய் நடிப்பில் பார்க்க வேண்டிய படங்கள்!
கர்ப்பக் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க சில டிப்ஸ்..
தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?