5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஐபிஎல் 2024: தொடர் தோல்விகளால் நெருக்கடியில் சிஎஸ்கே… சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு சற்று குறைவாகவே உள்ளது.

ஐபிஎல் 2024: தொடர் தோல்விகளால் நெருக்கடியில் சிஎஸ்கே… சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா?
intern
Tamil TV9 | Updated On: 02 May 2024 08:41 AM

ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர்

2024 ஐபிஎல் 17 ஆவது தொடரின் ஐபிஎல் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 49 வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

சிஎஸ்கேவின் மோசமான பேட்டிங்

இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 48 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். ஷிவம் துபே, ஜடேஜா, என அடித்து ஆடக்கூடிய வீரர்கள் முக்கியமான போட்டியில் சரிவர விளையாடதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த போது மிடில் ஓவர்களில் விக்கெட்களை இழந்து தடுமாறியது.

Also Read:ஐபிஎல் 2024:ஆரஞ்சு கேப்பை கைப்பற்றிய ருத்துராஜ்..!

பஞ்சாப் எளிதில் வெற்றி

162 ரன்கள் என்ற மிகவும் குறைவான இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான, ஜானி பேர்ஸ்டோ 46 ரன்களும்,  ரைலி ரூசோ 43 ரன்களும் எடுத்தனர். பின்னர், அதிரடி ஆட்டக்காரர்  ஷஷான்க் சிங் 25 ரன்களும், சாம் கர்ரன் 26 ரன்கள் எடுத்து  தங்கள் அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தனர்.

புள்ளிப்பட்டியலில் 4 ஆம் இடம்

பிளே ஆப் போட்டிக்கு தகுதி அடுத்து வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நேரத்தில் மிகவும் மோசமான பேட்டிங்கால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.  புள்ளிப்பட்டியலில் அதிக ரன்ரேட் காரணமாக 3 ஆம் இடத்தில் இருந்த சென்னை அணி, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியை தழுவியதன் காரணமாக 4 ஆம் இடத்திற்க்கு தள்ளப்பட்டுள்ளது.

மோசமான பவுலிங்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீதம் உள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால் இந்த போட்டியின் மீது எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. மேலும் இந்த போட்டியில் பத்திரானா மற்றும் துஷார் தேஷ்பாண்டே காயம் காரணமாக விளையாடவில்லை மிகப்பெரியதாக்கத்தை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக ரிச்சர்ட் க்ளீசன் அணியில் இடம் பெற்றார். தீபக் சாகர் காயம் காரணமாக இப்போட்டியில், தொடர்ந்து பந்து வீசவில்லை. ஹர்துல்தாகூர் நோ பால் வீசி ரன்களை வாரி வழங்கினார். இதுபோன்ற மோசமான பவுலிங், பீல்டிங், பேட்டிங் ஆகியவற்றால் சென்னை அணி ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளதாகவே கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அடுத்த போட்டியில் அதிக ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும், அல்லது மற்ற அணிகளின் வெற்றியை பொறுத்தே சென்னை அணியின் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

Latest News