KKR Vs SRH IPL 2024 Final Live Streaming : ஐபிஎல் இறுதிப்போட்டி.. எங்கு, எப்படி பார்க்கலாம்? நேரலை தகவல்கள்!
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு 17 வது சீசனில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் இறுதிப்போட்டியில் களம் காண்கின்றனர். இப்போட்டி வரும் மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளின் பலம், பலவீனம் குறித்து காணலாம்.
நடப்பு 2024 ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள், ப்ளே ஆஃப் சுற்றுகள் முடிவடைந்து, இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தொடரில் 4 அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்ற நிலையில், முதல் குவாலிஃபையர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது. அடுத்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில், ஆர்சிபி அணியை வீழ்த்தி குவாலிஃபையர் 2-க்கு ராஜஸ்தான் அணி தகுதி பெற்றது. இந்நிலையில், குவாலிஃபையர் 2 போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின . இந்தபோட்டியில் வெற்றிபெற்ற சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணி வெற்றிபெற்றது. மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதுகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
நடப்பு சீசனில் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் விளையாடிய 14 போட்டிகளில் 9 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டியில் தோல்வியை தழுவிய நிலையில், 2 போட்டி மழையினால் ரத்து செய்யப்பட்டது. இந்த சீசனில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்ற முதல் அணி என்ற பெருமையையும் பெற்றது. கவுதம் கம்பீர் ஆலோசகராக செயல்படும் இந்த அணி இந்த சீசனில் ஆரம்பம் முதல் வெற்றியை குவித்து வருகிறது. கேகேஆர் அணியில் பேட்டிங் பலமாக இருந்தாலும், பவுலிங்கை பொறுத்த வரையில் சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸல் இருவரை மட்டுமே நம்பி இறுதிப்போட்டியில் களம் காணவுள்ளது. ஷரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். கடந்த சீசனில் 7 வது இடம் பிடித்த கொல்கத்தா அணி இந்த சீசனில் இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதரபாத்
சன்ரைசர்ஸ் ஐதராபாத் இந்த சீசனில் விளையாடிய 14 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றியும், 5 போட்டியில் தோல்வியையும் தழுவியது. ஒரு போட்டி மழைக்காரணமாக ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது குவாலிபையர் போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. சன்ரைசர்ஸ் அணியின் முக்கிய பலமே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தான். அபிஷேக் ஷர்மா, ட்ராவிஸ் ஹெட், மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கால்சன் ஆகியோரின் பேட்டிங், நட்ராஜன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், பேட் கம்மின்ஸ், ஆகியோர் பலமிக்க வீரகளாக உள்ளனர். கடந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்த சன்ரைசர்ஸ் அணி, இந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்தை பிடித்து, தற்போது இறுதிபோட்டிக்கு முன்னேறியுள்ளது.
சேப்பாக்கத்தில் இறுதிப்போட்டி
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் இறுதிப்போட்டி, மே 26 ஆம் தேதி சென்னை சேப்பாக்கில் அமைந்துள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னை மற்றும் மும்பை இல்லாத இறுதிப்போட்டி என்பதால் ரசிகர்களிடையே சற்று வரவேற்பு குறைந்து காணப்படுகிறது. சென்னையில் போட்டி நடைபெறுவதால், சிஎஸ்கே ரசிகர்கள் பெருமளவில் போட்டியை காண மைதானத்தில் குவாலிஃபையர் 2 க்கு குவிந்தனர். அதே போல், இறுதிப்போட்டியிலும், சிஎஸ்கே ரசிகர்கள் ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: RR vs SRH: 36 ரன்கள் வித்தியாசத்தில் RR-ஐ வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது SRH..!
7.30 மணிக்கு நேரலை
ஐபிஎல் இறுதிப்போட்டியை மொபைல் போன்களில் காண ஜியோ சினிமாவிலும், தொலைக்காட்சியில் காண ஸ்டார் ஸ்போர்ஸ் தொலைக்காட்சியிலும் நேரலையாக கண்டுகளிக்கலாம். இந்த நேரலையில் முன்னாள் வீரர்கள் கமெண்டரிக்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.