IPL 2024: SRH-ஐ வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறியது KKR..!
SRH vs KKR: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரிடையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனால் கொல்கத்தா அணியின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். சன்ரைசர்ஸ் அணி குவாலிஃபையர் 2-ல் மீண்டும் களம் காண இருகிறது
கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வந்த நடப்பு 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத், ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றன. இதில் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிஃபையர் போட்டியில் கொல்கத்தா மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசஸ் ஐதரபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வீழ்த்தி இறுதி போட்டிக்கு நேரிடையாக தகுதிபெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு ஐபிஎல் வரலாற்றில் நான்காவது முறையாக கொல்கத்தா அணி தகுதி பெற்றிருக்கிறது.
Also Read: சென்னையில் அடுத்த பிரம்மாண்டம்.. சூப்பராக வரப்போகும் பிராட்வே பஸ் நிலையம்!
குஜராத் மாநிலம் அகமதாபாத் அமைந்துள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். எப்போதும் போல முதலில் பேட்டிங் செய்வதால் இமாலய இலக்கை கொல்கத்தா அணிக்கு சன்ரைசர்ஸ் அணிக்கு நிர்ணயிக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரும் நல்ல அடித்தளம் அமைத்து கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தொடர்ந்து, டிராவிஸ் ஹெட் ரன் ஏதும் எடுக்காமல்ம் எடுக்காமல் கிளீன் போல்டானார்.
கடந்த போட்டியில் இறுதிவரை அவுட் ஆகாமல் இருந்து அணியின் ஸ்கோரை அடித்து கொடுத்த அபிஷேக், இப்போட்டியில் 3 ரன் எடுத்து வைபவ் அரோரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி 9 ரன்களும், ஷாபாஸ் அகமது (0) டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்கள். கிளாஸன் 32 ரன்கள் எடுத்தபோது, வருண் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ராகுல் திரிபாதி 55 ரன்களும், சன்விர் சிங் 0, அப்துல் சமத் 16 ரன்களும், புவனேஷ்வர் குமார் ரன்கள் எடுக்கமாலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து நடையை கட்டினர். பொறுப்பை உணர்ந்து அதிரடியாக ஆடிய கேப்டன் கம்மின்ஸ் 30 ரன்களை எடுத்த போது, ரசல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
Also Read: ”பாஜக ஆட்சி அமைக்கலன்னா அமித்ஷாவுக்கு சந்தோஷம்” கொளுத்தி போட்ட ப.சிதம்பரம்!
160 ரன்கள் எடுத்தால் என்ற மிகச்சிறிய அளவிலான ஸ்கோரை சேசிங் செய்த கொல்கத்தா அணி 134 ஓவரில், 2 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்தது. ரகுமானுல்லா குர்பாஸ், சுனில் நரைன் இருவரும் அதிரடியாக விளையாடி 3.1 ஓவரில் 44 ரன் சேர்த்தனர். குர்பாஸ் 23 ரன் அவுட் ஆனார், சுனில் நரைன் 21 ரன்களும் எடுத்து பேட் கம்மின்ஸ் சுழலில் சிக்கினார். அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அதிகபட்சமாக 58 ரன்கள் விளாசினார். வெங்கடேஷ் ஐயர் 51 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் எளிதில் வெற்றிக்கான இலக்கை அடைந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி நேரிடையாக இறுதிபோட்டிக்கு முன்னேறியது. சென்னையில் மே 26ம் தேதி களமிறங்குகிறது. அடுத்தடுத்த போட்டிகளில் எந்த அணி கேகேஆருடன் மோதும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.