5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2024 KKR Vs SRH : 8 விக்கெட் வித்தியாசத்தில் SRH-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது KKR..!

CHAMPION KKR: நடப்பு 2024 ஆம் ஆண்டு, 17 வது ஐபிஎல் சீசனின் இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசரஸ் ஐதரபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சாதனை படைத்தது. 2012, 2014 ஆம் ஆண்டுகளை தொடர்ந்து, 2024 ஆம் ஆண்டு ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி 3 முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது.

IPL 2024 KKR Vs SRH : 8 விக்கெட் வித்தியாசத்தில் SRH-ஐ வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது KKR..!
சாம்பியன் பட்டத்தை வென்றது கொல்கத்தா அணி
intern
Tamil TV9 | Updated On: 26 May 2024 23:09 PM

ஐபிஎல் வரலாற்றில் இறுதி போட்டியில் மிக குறைவான நன்களை சேர்த்து அணி என்ற மோசமான சாதனையை படைத்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். உலக கோப்பையை வென்று சாதனை படைத்த ஆஸ்திரேலியா பேட் கம்மின்ஸ் கொல்கத்தாவை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். நான் இன்று சேப்பாக்கம் நடந்த சம்பவம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

Also Read: Tamilnadu Weather Alert: அடுத்த 5 நாட்களுக்கு கொளுத்தப்போகும் கோடை வெயில்.. வானிலை மையம் எச்சரிக்கை!

ஐபிஎல் 2024 இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. எப்போதும் போல இமாலய இலக்கை எதிரணிக்கு நிர்ணயிக்கும் என்று எதிர்பார்த்து ரசிகர்களுக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அபிஷேக் ஷர்மா ஐந்து பந்துகளுக்கு இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். ராகுல் திரிப்பாதி 13 பந்துகளில் ஒன்பது ரன்கள் எடுத்து மிட்செல் ஸ்டார்க் வந்து வீட்டில் ரமன் தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களம் இறங்கிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த போது ரசல் பந்துவீச்சில் மிட்செல் ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் வீசிய பந்தில் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து பெவிலியின் திரும்பினார். ஹென்றி கிளாஸன் 17 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஹர்ஷித் வீசிய பந்தில் அவுட் ஆனார். கடைசி போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக ரங்கோல் குவித்த சபாஷ் அகமது இப்போட்டியில் 7 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து வரும் சக்கரவர்த்தி சூழலில் நரைனிடம் கேட்ச் கொடுத்த அவுட்டானார். இம்பாக்ட் பிளேயராக வந்த சமத் நான்கு பந்துகளுக்கு நான்கு ரன்கள் மட்டுமே எடுத்து ரசல் பந்துவீச்சில் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்தார். சன்ரைசர்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்பார் என்று எதிர்பார்த்த கேப்டன் பேட் கம்மின்ஸ் ரஸல் பந்துவீச்சில் 19 பந்துகளுக்கு 24 ரன்கள் எடுத்து ஸ்டார்க்கிடம் கேட்ச் கொடுத்து அவட்டானார். உணத்கட் நரேன் பந்துவீச்சு LBW முறையில் ஆட்டமிழந்தார். இறுதிகள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.3 ஓவருக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. 20 ஓவர்களில் 287 ரன்கள் எடுத்து மிகப்பெரிய இலக்கை எதிரணிக்கு நிர்ணயித்து  உலக சாதனை படைத்த சன்ரைசர்ஸ் இந்த போட்டியில், ரன்கள் எடுக்க முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Also Read: காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? பிரசாந்த் கிஷோர் நறுக்!

நடப்பு ஐபிஎல் சீசனில் 20 ஓவர் அவர்களுக்கு அதிகபட்ச ரன்களை  குவித்து உலக சாதனை படைத்த சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் இறுதிப் போட்டியில் மிக குறைவான இலக்கை நிர்ணயித்து மீண்டும் ஒரு மோசமான சாதனையை படைத்துள்ளது. அதிகபட்சமாக ஆண்ட்ரே ரஸல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளும், ஹர்ஷித் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். வைபவ் நரைன், வருண் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிகச்சிறிய இலக்கை எதிர்நோக்கி களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் தொடக்க ஆட்டக்கார்களாக களமிறங்கினர். குர்பாஸ் 32 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து LBW முறையில் ஆட்டமிழந்தார். அதிரடி பேட்ஸ்மேன் சுனில் நைரன் 6 ரன்களில் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றி இலக்கை எட்ட உறுதுணையாக இருந்தார்.  கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் இறுதியில் 6 ரன்கள் எடுத்த நிலையில் 10.3 ஓவர்களில் 114 ரன்களை எடுத்து வெற்றிக்கான இலக்கை எடுத்து சாம்பியன் பட்டத்தை 3 முறையாக வென்று சாதனை படைத்தது.

சன்ரைசர்ஸ் அணி சார்பில் கேப்டன் பேட் கம்மின்ஸ் சுனில் நரைன் விக்கெட்டையும், ஷஹ்பஸ் அகமது குர்பாஸ் விக்கெட்டையும் வீழ்த்தினர். இன்றைய இறுதிப்போட்டி பரபரப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பாத்த நிலையில், மிகவும் மோசமான இறுதிப்போட்டி என்ற விமர்சனத்தை பெற்றுள்ளது.

Latest News