ஐபிஎல் 2024: ராகுலுடன் லக்னோ அணியின் உரிமையாளர் வாக்குவாதம்.. வீடியோ இணையத்தில் வைரல்…!
ஐதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இருவரும் மைதானத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தோல்விக்கு பிறகு உரிமையாளார் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் கே.எல். ராகுலுடன் மைதானத்திலேயே வாக்குவாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
2024 ஐ.பி.எல் தொடர் பரப்பரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகளுடன் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரானது மிகவும் பரப்பரப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் ஒரு வழியாக இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளது. ஒவ்வொரு அணிக்கும், 3 முதல் 4 போட்டிகளே இன்னும் மீதம் உள்ள நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஆகிய இரண்டு அணிகளும், ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. மேலும், சன்ரைசர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன் ரைசர்ஸ், சூப்பர் கிங்ஸ், லக்னோ ஆகிய 5 அணிகளூம் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடி வருகின்றனர்.
நேற்றைய 57வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது.
Aslo Read: ஐபிஎல் 2024: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுத்தது நியாயமா? ரசிகர்கள் கேள்வி?
தொடக்க ஆட்டக்காரகளாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், 30 பந்துகளில் 89 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 75 ரன்களையும் எடுத்தனர். லக்னோ அணி வீரர்கள் சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட்டை வீழ்த்த கடுமையாக போராடினர். இறுதியில், மேலும், ஒரு உலக சாதனையை நிகழ்த்தி சன்ரைசர்ஸ் அணி 9.5 ஓவரில் 167 ரன்களை எடுத்து ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
லக்னோ அணியின் தோல்விக்கு பிறகு அணியின் கேப்டனை கே.எல்.ராகுலை, ரசிகர்களும் இணையத்தில் விமர்சித்து வரும் சூழலில், லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயேங்கா மைதானத்திலேயே அத்தனை கேமராக்கள் முன்னிலையிலும் கே.எல்.ராகுலை தோல்விக்கு காரணமாக கூறி வாக்குவாதம் செய்து, திட்டியுள்ளார். இது கிரிக்கெட் ரசிகர்களுக்கும், வீடியோவை பார்ப்பவர்களு கோபத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கியது.
Highly unprofessional and undignified behaviour by LSG owner Goenka towards captain #KLRahul. There are dignified way to express criticism and unhappiness. #TravisHead is in completely different mode, no one can stop him. #SRHvsLSG #LSGvsSRHpic.twitter.com/nPqTG88jie
— Ganpat Teli (@gateposts_) May 9, 2024
லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் உரிமையாளர், சஞ்சீவ் கோயேங்கா லக்னோ அணியின் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபத்தின் உச்சிக்கே சென்றார். பின்னர் அவரது முக பாவனைகள் மாறியதும் கேமராக்களில் தெள்ளத்தெளிவாக காண்பிக்கப்பட்டது. இணையத்தில் வெளியான வீடியோவில் கே.எல். ராகுலிக்டம் கை நீட்டி அவர் கோபமாக பேசுவதும், ராகுல் அந்த இடத்தில் அமைதியாக எதுவும் பேசமுடியாத சூழ்நிலையில் நின்று கொண்டிருந்ததும் ரசிகர்களை கோபமடையச் செய்தது. . வேண்டுமென்றே அணியின் உரிமையாளர் கே.எல்.ராகுலை அவமானப்படுத்தும் நோக்கில் அந்த அணியின் உரிமையாளர் இப்படி நடந்து கொண்டதாக ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர். இந்த செயலுக்காக ராகுலிடம் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
2017ம் ஆண்டு மகேந்திர சிங் தோனியை ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கிய சஞ்சீவ் கோயங்கா ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டனாக நியமித்தார். புனே அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்து வெளியேறியதால், ஸ்டீவ் ஸ்மித்திற்கு கேப்டன் பதவி கொடுக்கபட்டதாக கூறப்பட்டது. பின்னர், 2018 ஆம் ஆண்டு சென்னை அணியின் கேப்டனாக பதவியேற்ற தோனி கோப்பையை பெற்றுக்கொடுத்தார். எப்போதும் தன்னை பிரபலாமக்க இவர் கையாளும் யுக்தி என்று கடுமையான விமர்சனங்களை சஞ்சீவ் கோயேங்கா பெற்று வருகிறார்.