IPL 2024 KKR Vs SRH : இறுதிப்போட்டிக்கு KKR – SRH வர என்ன காரணம்? – ஐபிஎல் 2024 மீள் பார்வை!

IPL 2024 : ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் சென்னையில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், அதே சென்னையில் சுமார் 2 மாதங்கள் கழித்து இன்றுடன் (மே 26) நிறைவடைய உள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் சீசனுக்கு முன்னரும், அந்த சீசன் குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் இருக்கும். அந்த வகையில், தோனியின் கடைசி சீசன் (?), மும்பைக்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி, ரிஷப் பந்தின் ரீ-என்ட்ரி, விராட் கோலியின் டி20 ஃபார்ம், டி20 உலகக் கோப்பை செலக்ஷன் என இந்த சீசனுக்கும் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன.

IPL 2024 KKR Vs SRH : இறுதிப்போட்டிக்கு KKR - SRH வர என்ன காரணம்? - ஐபிஎல் 2024 மீள் பார்வை!

ஐபிஎல் 2024

Updated On: 

26 May 2024 11:28 AM

ஐபிஎல் 2024 : 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், நடப்பு சீசன் குறித்த ஒரு சின்ன Recap-ஐ இங்கு காணலாம். ஐபிஎல் என்றாலே அது கிரிக்கெட் ரசிகர்களின் கொண்டாட்ட திருவிழாவாக பார்க்கப்படுகிறது. கிரிக்கெட் போட்டிகளை பெரிதும் பின்பற்றாதவர்கள் கூட ஐபிஎல் போட்டியை ஆண்டு முழுக்க எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அந்தளவிற்கு இந்திய சமூகத்தில் ஐபிஎல் வேரூன்றி இருக்கிறது. கிரிக்கெட் போட்டிகளை குடும்பம் குடும்பமாக மைதானத்தில் வந்து பார்க்கும் போக்கு என்பது ஐபிஎல் தொடரின் வளர்ச்சிக்கு பிறகே இந்தியாவில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது எனலாம். அத்தகைய ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் சென்னையில் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கிய நிலையில், அதே சென்னையில் சுமார் 2 மாதங்கள் கழித்து இன்றுடன் (மே 26) நிறைவடைய உள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் சீசனுக்கு முன்னரும், அந்த சீசன் குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகள் ரசிகர்களிடம் இருக்கும். அந்த வகையில், தோனியின் கடைசி சீசன் (?), மும்பைக்கு ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி, ரிஷப் பந்தின் ரீ-என்ட்ரி, விராட் கோலியின் டி20 ஃபார்ம், டி20 உலகக் கோப்பை செலக்ஷன் என இந்த சீசனுக்கும் பல்வேறு எதிர்பார்ப்புகள் இருந்தன.

கொல்கத்தா – ஹைதராபாத் அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோத உள்ள வேளையில், இந்த தொடர் எந்தளவிற்கு சிறப்பானதாக அமைந்திருக்கிறது என்பதை நினைவுக்கூர்வது அவசியமாகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் யாருமே எதிர்பாராத விஷயங்கள்தான் இந்த சீசனில் ரசிகர்களுக்கு அதிக உற்சாகத்தை அளித்திருக்கிறது எனலாம். அந்த வகையில், நடப்பு ஐபிஎல் சீசன் குறித்த ஒரு சின்ன Recap-ஐ தொடர்ந்து காணலாம்.

பேட்டர்களின் ஆதிக்கம்…

நடப்பு ஐபிஎல் சீசனில்தான், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக முறை 200+ ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த சீசன் மட்டும் 41 முறை 200+ ரன்கள் ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த சீசனில் பலராலும் விவாதிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறலாம். பிளாட் பிட்ச்கள், பக்கத்தில் இருக்கும் பவுண்டரிகள், இம்பாக்ட் பிளேயர் விதி என இதற்கு பல்வேறு காரணங்கள் அடுக்கப்பட்டாலும் பந்துவீச்சாளர்களுக்கான எவ்வித சாதகமான அம்சமும் இடம்பெறாததும் பேட்டர்களின் இத்தகைய அதிரடிக்கு முக்கிய காரணம் என அஸ்வின், விராட் உள்ளிட்ட சீனியர் வீரர்களே வெளிப்படையாக தெரிவித்தனர். இது நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டியது.

Also Read : ஓய்வுக்கு பிறகு என்னை பார்க்க முடியாது – விராட் கோலி

பயமற்ற ‘பார்முலா’

இது ஒருபுறம் இருக்க இந்த சூழலை மற்ற அணிகளை விட கொல்கத்தா அணியும், ஹைதராபாத் அணியும்தான் அதிகம் பயன்படுத்திக்கொண்டது எனலாம். ஹைதராபாத்தில் நடந்த ஹைதராபாத் – மும்பை போட்டிதான் இந்த சீசனின் திருப்புமுனை. பவர்பிளேவில் துளிக்கூட பயமோ, பதற்றமோ இன்றி விளையாடி ரன்களை குவிப்பது எப்படி என டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா ஜோடி மற்ற வீரர்களுக்கு பாடம் எடுத்தது. ஓப்பனிங்கை தொடர்ந்து அவர்களின் அதிரடி பேட்டிங் லைன்அப் அவர்கள் 250+ ரன்களுக்கு மூன்று முறை அழைத்து சென்றது எனலாம்.

அடுத்து கேகேஆர். கொல்கத்தா முகாமில் கம்பீர் நுழைந்த உடனேயே பெரும் புத்துணர்ச்சி அங்கு ஏற்பட்டிருக்கிறது. அந்த அணி சரியான ஓப்பனர்கள் இல்லாமல் கடந்த சில சீசன்களில் சொதப்பி வந்த நிலையில், கம்பீர் – நரைன் கெமிஸ்ட்ரி இந்த முறையும் ஒர்க் அவுட்டாகி, மற்ற சீசன்களை விட அதிரிபுதிரி ஹிட் அடித்துள்ளது. நரைன் மற்றும் பில் சால்ட் ஆகியோர் பவர்பிளேவில் வெறித்தனமாக விளையாடியது அந்த அணியை தற்போது இறுதிப்போட்டி வரை கொண்டு வந்துள்ளது. முன்பே சொன்னது போல, பவர்பிளேவில் பயமில்லாமல் விளையாடும் யுக்தி இந்த இரண்டு அணிகள் மட்டுமே தொடர்ந்து சிறப்பாக கையாண்டன.

சிஎஸ்கேவின் பழைய மனநிலை…

மற்ற அணிகள் இதனை அவ்வப்போது முயற்சித்தன. இதே கொல்கத்தாவுக்கு எதிரான ஒரு போட்டியில் பஞ்சாப் அணி ஓப்பனர்கள் பேர்ஸ்டோவ் – பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் கூட இந்த பார்முலா பயன்படுத்தி வரலாற்று சிறப்புமிக்க சேஸிங்கை செய்தனர். டெல்லி அணியின் செகண்ட் ஆப் எழுச்சிக்கு காரணமும் இந்த பார்முலாதான். ஆனால் அதனை மற்ற அணிகள் தொடர்ந்து செய்யாததே அவர்களின் வீழ்ச்சிக்கு காரணம். இதில் சிஎஸ்கே போன்ற சில அணிகள் இன்னும் பழைய மனநிலையிலேயே பவர்பிளேவை அணுகியதும் அவர்கள் தோல்விக்கு வழிவகுத்தது எனலாம்.

இந்த சீசன் சொல்லும் பாடம்….

தற்போது இறுதிப்போட்டிக்கு வந்துள்ள இரண்டு அணிகளும் பேட்டிங்கை மட்டும் நம்பி வரவில்லை என்பதுதான் இங்கு பிளஸ் பாயிண்ட். இரு அணிகளிலும் மினிமம் கியாரண்டி பௌலர்கள், பிக் மேட்ச் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். எனவே, மற்ற அணிகளை விட இறுதிப்போட்டிக்கு வர இந்த இரு அணிகள்தான் தகுதியானவை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சம பலம் வாய்ந்த அணிகள் மோதிக்கொள்ளும் இன்றைய போட்டியை காண ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். மாறிவரும் டி20 சூழலை புரிந்துகொள்ளாமல், அதற்கேற்ப அணியை கட்டமைக்காவிட்டால் ‘கோப்பை இல்லை இனி வெங்கல கிண்ணம் கூட கிடைக்காது’ என்பது இந்த ஐபிஎல் சீசன் உரக்கச் சொல்லியிருக்கும் முக்கிய கருத்தாகும்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!