தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியா? களைகட்டும் சேப்பாக்கம் மைதானம்!

IPL 2024: ஐபிஎல் தொடரின் 61வது லீக் ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியா? களைகட்டும் சேப்பாக்கம் மைதானம்!

தோனி

Updated On: 

12 May 2024 20:16 PM

சென்னை – ராஜஸ்தான்:

ஐபிஎல் தொடரின் 61வது லீக் ஆட்டத்தில் சென்னை – ராஜஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. ஐபிஎஸ் 2024 இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கும் நிலையில், இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 12 ஆட்டங்களில் தலா 6 வெற்றி, தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. புள்ளிப்பட்டியிலில் 5 முதல் 8வது இடம் வரை உள்ள அணிகளுக்கு சம வாய்ப்பு இருப்பதால் எஞ்சியுள்ள 2 ஆட்டங்களில் வெற்றி பெறும் முனைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது. அதேசமயம், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 11 போட்டியில் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப், கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதிய 28 ஆட்டங்களில் சென்னை 15, ராஜஸ்தான் 13ல் வென்றுள்ளன. அதிகபட்சமாக சென்னை 246, ராஜஸ்தான் 223 ரன் விளாசி உள்ளன. குறைந்தபட்சமாக ராஜஸ்தான் 126, சென்னை 109 ரன்கள் எடுத்துள்ளன.

தோனியின் கடைசி ஐபிஎல் போட்டியா?

நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் கடைசி போட்டி இதுவாகும்.  இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் இன்று நடைபெறும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய சூழல் உள்ளது. ஒருவேளை சென்னை சூப்பர் கிங்ஸ்  அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினால் அந்த போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றால் அப்போட்டியில் கூட தோனிக்கு சென்னை சேப்பாக்கத்தில் கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கலாம். இதனால், ரசிகர்கள் ஆட்டத்தை பார்ப்பதோடு தோனி விளையாடுவதை பார்ப்பதற்காகவே சேப்பாக்கத்தில் குவிந்துள்ளனர்.

இப்படியான சூழலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகமும் புது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், “போட்டி முடிந்த பிறகு மைதானத்தில் அனைவரும் காத்திருங்கள். உங்களுக்கு சிறப்பான சம்பவம் காத்திருக்கிறது” என பதிவிட்டுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!