ஐபிஎல் 2024: ப்ளேயிங் லெவனில் தோனி தேவையில்லை – ஹர்பஜன் சிங் காட்டம்
தோனிக்கு பதில் ஒரு பவுலரைச் சேருங்கள் என்றும், 9 வது நிலையில் அவர் பேட்டிங் இறங்க தேவையில்லை என்றும் முன்னாள் சிஎஸ்கே வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
2021 -ம் ஆண்டு வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கடைசியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில், அதன்பிறகு 1,115 நாட்களுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை ருசித்துள்ளது சிஎஸ்கே. அந்த போட்டியில் சிஎஸ்கே பேட்டிங் வரிசை தற்போது பேசுபொருளாகியுள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் தடுமாறினர். அணிக்கு பக்க பலமாக இருக்க வேண்டிய சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்ஸ்மேன், விக்கெட் கீப்பர் என பல்வேறு பரிமாணங்களை கொண்டுள்ள தோனி கடமைக்கு பேட்டிங் செய்கிறார் என்ற விமர்சனம் தற்போது எழுந்துள்ளது.
கடைசி போட்டியில் பேட்டிங் ஆர்டரில் தோனி 9-வது வீரராக இறங்கியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் மற்றும் முன்னாள் சிஎஸ்கே வீரரான ஹர்பஜன் சிங் தோனி கடைசியாக பேட்டிங் செய்ய இறங்கியது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். 4வது அல்லது 5வது வீரராக ல் பேட்டிங் செய்யாமல் 9வது இடத்தில் பேட்டிங் இறங்கியது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு அவர் அணியில் இல்லாமல் இருக்கலாம், அவரது இடத்தை ஒரு வேகப் பந்துவீச்சாளருக்கு கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.
Also Read: ஐபிஎல் 2024: சிஎஸ்கே நினைவுகளை பகிர்ந்த பத்திரனா
“அவருக்கு பதிலாக பிளேயிங் லெவனில் ஒரு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்வது அணிக்கு நன்மையை கொடுக்கும். இப்போதும் முடிவை எடுக்கக்கூடிய அவர் முன்கூட்டியே பேட்டிங் செய்ய வராமல் தன்னுடைய அணியை தலை குனிய வைத்தார். அவருக்கு முன்பாக வந்த தாகூர் எப்போதும் தோனியை போல் ஷாட்டுகளை படித்ததில்லை. எனவே தோனியின் ஏன் இந்த தவறை செய்தார் என்பதை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை”
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்தான் தோனி ஒன்பதாம் வரிசையில் பேட்டிங் செய்தார். அந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்த போது விக்கெட்களை இழந்து தவித்தது. அப்போது ஏழு மற்றும் எட்டாம் வரிசையில் பந்துவீச்சாளர்களான மிட்செல் சான்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்குர் பேட்டிங் செய்தனர். அந்த நேரத்தில் நான்கு ஓவர்கள் மீதமிருந்த நிலையில் தோனி பேட்டிங் இறங்கி இருக்க வேண்டும். ஆனால் அவர் ஒன்பதாம் வரிசையில் தான் பேட்டிங் செய்தார். இதற்காக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.