ஐபிஎல் 2024: குஜராத்தை அணியை வீழ்த்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பி அணி அபார வெற்றி
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
2024 ஐபிஎல் போட்டிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 51-வது ஐபிஎல் லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விருத்திமான் சஹா மற்றும் சுப்பம் கில் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
குஜராத் அணி வீரர்கள் ஆட்டத்தின் தொடக்கம் முதலே பெங்களூரு அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். விருத்திமான் சஹா 1 ரன்னிலும், சுப்மன் கில் 2 ரன்களிலும், சாய் சுதர்சன் 6 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஷாருக்கான் – மில்லர் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டு, 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது, மில்லர் 30 ரன்களிலும், ஷாருக்கான் 37 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய திவேட்டியா அதிரடியாக விளையாடி, 21 பந்துகளில் 35 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். ரஷித் கான் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
குஜராத் 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி, தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான டு பிளெசிஸ் பழைய பார்மிற்கு திரும்பி, அதிரடியில் விளையாடினார். 18 பந்துகளில் அரைசதம் அடித்த அவர், பெங்களூரு அணிக்கு நல்ல அடித்தளம் எடுத்து கொடுத்தார்.மறுமுனையில், விராட் கோலி நிதானமாக விளையாடி 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
Also Read: டி20 உலகக் கோப்பை தொடருக்கான நடுவர்கள் யார்? ஐசிசி வெளியிட்ட அறிவிப்பு
டு பிளெசிஸ் 64 ரன்களிலும், கோலி 42 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஜேக்ஸ் (1), படிதார் (2), மேக்ஸ்வெல் (4), கிரீன் (1) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் இணைந்து அதிரடியாக விளையாடி 13.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு மிக எளிதாக இலக்கை எட்டினர். பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னர் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.