ஐபிஎல் 2024:ஆரஞ்சு கேப்பை கைப்பற்றிய ருத்துராஜ்..!

ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை குவிக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை தன்வசப்படுத்தினார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்துராஜ்

ஐபிஎல் 2024:ஆரஞ்சு கேப்பை கைப்பற்றிய ருத்துராஜ்..!
Updated On: 

02 May 2024 01:45 AM

2024 ஐபிஎல் 17 ஆவது தொடரின் ஐபிஎல் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 49 வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சேப்பாக் மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

10 அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் இந்த தொடரின் பல போட்டிகளில் நிறைய உலக சாதனைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. நட்சத்திர வீரர்கள் சொதப்பி வரும் நிலையில், எதிர்பார்க்காத பல வீரர்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாக ஆற்றி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்துராஜ்

சென்னை அணியின் கேப்டனாக இருந்த மகேந்திரசிங் தோனி, சென்னை அணியின் போட்டி தொடங்கும் முதல் நாளில் தனது கேப்டன் பதவியை இளம் வீரர் ருத்துராஜிடம் ஒப்படைத்தார். கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதிய சென்னை அணி வெற்றி பெற்றது. கேப்டன் பொறுப்பை ஏற்ற ருத்துராஜ் எப்படி விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையி, ருத்துராஜ் பேட்டிங்கில் பட்டையை கிளப்பி வருகிறார்.

Also Read: Hardik Pandya: துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

ஆரஞ்சு தொப்பி

சென்னை அணிக்காக சதம் அடித்த முதல் கேப்டன் பெருமையையும் தன் வசப்படுத்தினார். தொடர்ந்து நடைபெரும் போட்டிகளில் அணியின் வெற்றிக்காக ரன்களை குவித்து வருகிறார். சதம் அடிப்பதற்காக விளையாடாமல் அணியின் வெற்றிக்காக விளையாடும் ருத்துராஜ் இந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை குவிக்கும் வீரருக்கு வழங்கப்படும் ஆரஞ்சு தொப்பியை பெற்று சென்னை அணிக்கு மேலும் சிறப்பை சேர்துள்ளார்.

டி 20 உலக கோப்பை இடம்பெறாத ருத்துராஜ்

டி20 உலகக் கோப்பை 2024 அணியில் இடம் பெறும் வீரர்கள் பெயர்கள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை அணியின் கேப்டனாகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் விளையாடி வரும் ருத்துராஜ் இடம்பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ருத்துராஜூக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. நேற்று பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்றைக்கான போட்டியில், ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற பெருமையை தனதாக்கினார் ருத்துராஜ்.  சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஐபிஎல் 2024ல் ஆரஞ்சு கேப் பந்தயத்தில் விராட் கோலியை முந்திக்கொண்டு அதிக ரன் எடுத்தவர் ஆனார். சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் பேட்ஸ்மேன்களுக்கு முற்றிலும் சாதகமாக இல்லாத ஆடுகளத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ருதுராஜ் முதலிடத்திற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிட வேண்டும்?
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
மோட்டோ எட்ஜ் 50 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.13,000 தள்ளுபடி!