IPL 2024: சிஎஸ்கே அணியின் வெற்றி கொண்டாடத்தில் சுரேஷ் ரெய்னா.. தொடரும் தல, சின்ன தல நட்பு..!

IPL 2024 Suresh Raina: நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்ற பின்பு சென்னை ரசிகர்களுக்கு, சென்னை அணியின் வீரர்கள் நன்றி சொல்லும் நிகழ்வு நடைபெற்றது. அதில் சின்ன தல, மிஸ்டர் ஐபிஎல் என்று ரசிகளலால் அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டு அணி வீரர்களுடன் வெற்றிக்கொண்டாட்டத்தில் தோனியுடன் பங்கேற்றார். 

IPL 2024:  சிஎஸ்கே அணியின் வெற்றி கொண்டாடத்தில் சுரேஷ் ரெய்னா..  தொடரும் தல, சின்ன தல நட்பு..!
Updated On: 

27 Sep 2024 10:25 AM

Suresh Raina: சென்னையில் நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிய போட்டியின் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கொண்டாட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கலந்து கொண்டார்.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள ஐபிஎல் தொடரில் நடப்பு ஐபிஎல் 2024 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. லீக் போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை பெறும் அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி முன்னேறும், அந்த வகையில், முதல் இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதரபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் நான்கு இடங்களில் உள்ளன.

13 போட்டிகளில் 7வது வெற்றியை பதிவு செய்த சென்னை புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியது. அதன் காரணமாக பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பையும் சென்னை தக்க வைத்துக் கொண்டது. மே 12ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியின் முடிவில் சிஎஸ்கே ரசிகர்களுக்கு சென்னை அணி நிர்வாகம் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. ஏனெனில் அதுவே சென்னை அணி இந்த வருடம் தங்களுடைய சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் விளையாடிய கடைசி லீக் போட்டி என்பதால், ரசிகர்கள் இந்த போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த ஐபிஎல் சீசன் முழுவதும் சென்னை அணிக்கு சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த ஆதரவை வழங்கினர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நேற்றைய நிகழ்வு அமைந்தது.

சென்னை இதுவரை நடைபெற்ற ஐபிஎல் சீசனில் 5 கோப்பைகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனி களமிறங்கிய போதெல்லாம் சிஎஸ்கே ரசிகர்கள் எழுப்பிய சத்தம் விண்ணை முட்டும் அளவுக்கு இருந்தது. ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில், சுரேஷ் ரெய்னாவை கட்டிப்பிடித்த தோனி அவருக்கும் ஒரு பந்தை பரிசாக வழங்கி நட்பை வெளிப்படுத்தினார். மேலும் சிஎஸ்கே அணியின் ஜெர்ஸி, தொப்பி மற்றும் சில உபகரணங்களை ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்த கேப்டன் ருதுராஜ் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

Also Read: கிராண்ட் செஸ் டூர்: 3-வது இடத்திற்கு முன்னேறினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா..!

ஒரு அணியில் இருக்கும் வீரர் அங்கிருந்து வெளியேறிய பின்னரும், நட்புடன் தொடர்வது சிஎஸ்கே அணியில் மட்டுமே காண முடிகிறது. முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா தற்போது வரை சிஎஸ்கே அணியுடன் நட்பு பாராட்டுவது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!