IPL 2024: ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் அணி எது? பரபரப்பான லீக் போட்டியில் RCB -CSK இன்று பலப்பரீட்சை..!
RCB VS CSK : பரப்பரப்பாக நடைபெற்று வந்த நடப்பு 2024 ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 17வது சீசன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறப்போகும் 4வது அணி எது என்பதை தீர்மானிக்கும் லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
ஏப்ரல், மே மாதம் தொடங்கிவிட்டாலே கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் ஃபீவர் வந்துவிடும். இந்திய அணி என்று சப்போர்ட் செய்து வந்த ரசிகர்கள் இந்த இரண்டு மாதம் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளில் தங்களுக்கு பிடித்த அணிகளுக்கு தங்களது ஆதரவை வழங்குவர். இதில், மும்பை, சென்னை அணியின் ரசிகர்களுக்கு உலகபோர் அளவிற்கு சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வந்ததை நாம் பார்த்திருப்போம். ஐபிஎல் முடிந்தவுடன் அனைவரும் ஒன்றாக இணைந்து டி20 உலக கோப்பை தொடருக்கு ஆதரவு அளிப்பர். நடப்பு ஐபிஎல் 17 வது சீசன் கடந்த கடந்த மார்ச் 22ம் தேதி சென்னையில் கோலாகலமாகத் தொடங்கியது. மிகவும் பரப்பரப்பாக நடைபெற்றுவந்த ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ப்ளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன. இந்நிலையில் கடைசி மற்றும் 4 வது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு எந்த அணி செல்ல போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகளவில் எழுந்துள்ளது.
18 ஆம் தேதியான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் இடையில் நடைபெற இருக்கும் போட்டிக்கு ஒரே வாரத்திற்கு முன்னரே ரசிகர்கள் உற்சாகமடைய ஆரம்பித்தனர். இதில், வெற்றிபெறும் 4 வது அணியாக ஐபிஎல் கோப்பை வெல்லும் போட்டி களத்திற்கு செல்லும் என்பதால் இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாளையுடன் லீக் சுற்று போட்டிகள் முடிவடையும் நிலையில்,கொல்கத்தா முதலிடத்தை உறுதி செய்த நிலையில், இன்றும் நாளையும் நடைபெறும் லீக் ஆட்டங்களின் முடிவுகள் 2வது, 3வது, 4வது இடம் யாருக்கு என்பது தெரிய வரும்.
Also Read: Serial Actor: பிரபல சீரியல் நடிகர் தற்கொலை.. நள்ளிரவில் நடந்தது என்ன?
மழையினால் இந்த போட்டி நடைபெறாமல் சென்றால், இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி கிடைக்கபெற்று, சென்னை அணி ப்ளே ஆப் சுற்று தகுதி பெறும். அப்படி இல்லையென்றால் 18 ஓவர்களில் இன்று நடைபெறவிருக்கும் போட்டிகளில் சென்னை அணியை பெங்களூரு அணி வீழ்த்தினால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறலாம். இதையடுத்து இன்று நடைபெறும் போட்டியில் மழை குறுக்கிடாமல் இருக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால் இன்றைய போட்டியில் பரப்பரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றும், ரசிகர்களுக்கு இந்த போட்டி விருந்தாக அமையும் என்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்துகளை தெரிவித்துவித்து வருகின்றனர்.