IPL 2024: பஞ்சாப் அணியின் வீரர்களின் குடும்பத்துடன் விராட்… வீடியோ வைரல்..!

virat Kohli: பஞ்சாப் அணியின் வீரர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் ஆகியோரின் குடும்பத்தினர் விராட் கோலியை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது

IPL 2024: பஞ்சாப் அணியின் வீரர்களின் குடும்பத்துடன் விராட்... வீடியோ வைரல்..!
Updated On: 

14 May 2024 17:06 PM

தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் போது, பஞ்சாப் அணியின் வீரர்களான அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் ஆகியோரின் குடும்பத்தினர் விராட் கோலியை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர் விராட் கோலி சமீபத்தில் அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்பிரீத் பிரார் ஆகியோரின் பெற்றோரை சந்தித்தபோது இனிமையான தருணம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவர்களது தாய் மொழியான பஞ்சாபியில் விராட் கோலி அவர்களுடன் உரையாடினார். வீரர்களின் குடும்பத்தினருக்கும் விராட் கோலிக்கும் இடையேயான உரையாடல் அன்பாகவும், அதே நேரத்தில் தோழமையுடனும் காணப்பட்டது. விராட் கோலி அவர்களின் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி, உரையாடி வீடியோ புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது ஒற்றுமை மற்றும் விளையாட்டுத் திறனைப் பிரதிபலிப்பதாகவும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த வீடியோவை பஞ்சாப் கிங்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையேயான ஐபிஎல் 2024 போட்டியானது தரம்ஷாலாவில் முடிவடைந்த பிறகு, கோஹ்லி இரண்டு வீரர்களின் குடும்பத்தினருடன் பேசினார் மற்றும் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.

விராட் கோலியை அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் ஆகியோரின் குடும்பத்தினர் கையெடுத்து கும்பிட்டு தங்களது வாழ்க்களை தெரிவித்தனர்.  அர்ஷ்தீப் மற்றும் பிராரின் பெற்றோர் தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் தங்கள் மகன்களை கட்டாயம் வெல்ல வேண்டிய ஐபிஎல் ஆட்டத்தில் ஆதரிப்பதற்காக வந்திருந்தனர்.  இந்த ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி ப்ளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறியது.  போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியை தழுவினாலும், பஞ்சாப் அணியின்  கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்தினர்கள் விராட் கோலியை சந்தித்த மகிழ்ச்சியில் மைதானத்தை விட்டு வெளியேறினர்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!