ஐபிஎல் 2024: ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அவுட் கொடுத்தது நியாயமா? ரசிகர்கள் கேள்வி?
ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சம்சனுக்கு நடுவர்கள் அவுட் வழங்கியது இணையத்தில் வைரலான நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் அம்பையர்கல் உதவியுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிபெற்றதாக விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடரின் 56வது லீக் போட்டி டெல்லி உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல் அணிகள் மோதின. டாஸ் என்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய களம் இறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 221 ரன்களை சேர்த்தது.
222 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வால் 4, ஜாஸ் பட்லர் 19 ரன்கலிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடினார். 46 பந்துகளில் 86 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழந்த விதம் இணையத்தில் வைரல் ஆகி உள்ளது.
Also Read: டி20 உலகக் கோப்பை: ஒவ்வொரு வீரருக்கும் ரூ.83 லட்சம் பரிசு.. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு
சஞ்சு சாம்சன் சிக்ஸ் அடிக்க முயற்சித்த போது டெல்லி அணியின் வீரர் ஹோப் பவுண்டரி எல்லையில், தடுமாறிய நிலையில் அந்த கேட்சை பிடித்தார். இந்த கேட்சுக்கு மூன்றாவது அம்பையர் அவுட் கொடுத்தார் இதனை பார்த்த ராஜஸ்தான் வீரர்கள் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் ஆகியோர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ராஜஸ்தான் அணியின் வீரர்கள் ரிப்ளேவை சரி பார்க்குமாறு கூறினர். இதனை தொடர்ந்து 3 வது அம்பையர் அவுட் என்பதில் உறுதியாக இருந்ததால் வேறு வழி என்று சந்து சாம்சன் பெவிலியன் திரும்பினார். ஆனால் இந்த கேட்ச் குறித்த கேள்விகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சஞ்சு சம்சன் தனது விக்கெட்டை இழந்த பிறகு அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் வீரர்கள் தங்களது விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் பறிகொடுத்தனர். இறுதியில், ராஜஸ்தானி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல் அணி வெற்றி பெற்றது.
நியாயமான முறையில் விளையாடி வெற்றி பெறாமல் அம்பையரின் உதவியை நாடிய டெல்லி கேப்பிடல் அணி வெற்றி பெற்றுள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் கடுமையாக விமர்சனத்தை முன் வைக்கின்றனர். தொடர்ந்து இது போன்ற அதிருப்தியான அவுட் வழங்கப்படுவது ஐபிஎல் போட்டிகளில் வழங்கப்படுவது வழக்கமாகி வருவதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.