IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் 3 கேப்டன்கள் விடுவிப்பு..? குட்பை சொல்லப்போகும் அணிகள்..!
IPL Mega Auction: ஐபிஎல்லின் கடைசி மெகா ஏலம் கடந்த 2022 சீசனுக்கு முன் நடைபெற்றது. அந்த நேரத்தில் பல அணிகள் புதிய கேப்டன்களை நியமித்தனர். அதன்பிறகு, அடுத்த மூன்று சீசன்களிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. ஆனால், இந்த முறை இந்த கேப்டன்களை விடுவிக்கலாம் எனத் தெரிகிறது.
ஐபிஎல் 2025: கடந்த 2024 ஐபிஎல் சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. 2024 ஐபிஎல் சீசனை தொடர்ந்து ஐபிஎல் 2025க்கு முன்னதாக, வீரர்களுக்கான மிகப்பெரிய ஏலம் இந்தாண்டு டிசம்பரில் நடைபெறவுள்ளது. இதனால் அடுத்த சீசனுக்காக அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றன. இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் 3 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாடு வீரர் என 4 வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். இதன் காரணமாக பல முக்கிய வீரர்கள் விடுவிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இது போன்ற சூழ்நிலையில், கேப்டன்கள் உள்பட சில முக்கிய வீரர்களை அந்தந்த அணிகள் விடுவிக்க வாய்ப்புண்டு.
ஐபிஎல்லின் கடைசி மெகா ஏலம் கடந்த 2022 சீசனுக்கு முன் நடைபெற்றது. அந்த நேரத்தில் பல அணிகள் புதிய கேப்டன்களை நியமித்தனர். அதன்பிறகு, அடுத்த மூன்று சீசன்களிலும் பெரிய மாற்றங்கள் எதுவும் நிகழவில்லை. ஆனால், இந்த முறை இந்த கேப்டன்களை விடுவிக்கலாம் எனத் தெரிகிறது. விடுவிக்கப்பட உள்ள மூன்று கேப்டன்கள் யார் யார் என்று இங்கே பார்க்கலாம்.
ஃபாப் டு பிளேசிஸ்:
ஐபிஎல்லில் இதுவரை சாம்பியன் பட்டம் வெல்லாத ராயல் சேலஞ்சஸ் பெங்களூரு அணி, கடந்த 2022 மெகா ஏலத்தில் முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஃபாப் டு பிளேசிஸை எடுத்து கேப்னாக்கியது. இந்த 3 சீசன்களில் பெங்களூரு அணி இரண்டு முறை பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. ஐபிஎல் 2024ன் தொடக்கத்தில் மோசனான தொடக்கத்தை பெற்ற பெங்களூரு அணி, பின் தொடர் வெற்றிகளை பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. அதன்பிறகு எலிமினேட்டர் சுற்றில் தோல்வியடைந்து ஐபிஎல் 2024ல் இருந்து வெளியேறியது. தற்போது பெங்களூரு அணி இந்திய கேப்டனை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்தகைய சூழ்நிலையில் ஃபாஃப் விடுவிக்கப்படலாம்.
ஷிகர் தவான்:
பெங்களூரு அணியை போன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும் இதுவரை ஐபிஎல்லில் கோப்பையை வென்றதில்லை. பஞ்சாப் கிங்ஸ் அணி தனது அதிர்ஷ்டத்தை மாற்றுவதற்காக கேப்டன்களை தொடர்ந்து மாற்றி வருகிறது. கடந்த 2023 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, பஞ்சாப் கிங்ஸ் அணி அனுபவ வீரர் ஷிகர் தவானை கேப்டனாக்கியது. ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டாலும், அந்த அணியால் கடந்த 2 சீசன்களாக எதையும் சிறப்பாக செய்ய முடியவில்லை. இதற்கிடையில், ஐபிஎல் 17வது சீசனில், ஷிகர் தவான் ஒரு சில போட்டிகளுக்கு மட்டுமே கேப்டனாக இருந்தார். காயம் காரணமாக மீதமுள்ள போட்டிகளில் விளையாடவில்லை. இதன் காரணமாக, ஷிகர் தவானும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம்.
கே.எல்.ராகுல்:
பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறிய கே.எல்.ராகுல், ஐபிஎல் 2022 முதல் 2024 வரை லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியின் கேப்டனாக இருந்தார். தற்போது கே.எல்.ராகுல் லக்னோ அணியில் இருந்து விடுவிக்கப்படலாம் என தெரிகிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை கே.எல்.ராகுல் முதல் இரண்டு சீசன்களில் பிளே ஆஃப் சுற்றுக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், கடந்த சீசனில் லக்னோ அணி லீக் கட்டத்திலேயே வெளியேறியது. கேப்டன் பதவியுடன் கே.எல். ராகுலின் பேட்டிங் ஸ்டைலும் கேள்விக்குறியாகியுள்ளது. லக்னோ அணி தற்போது வேறு ஒருவரை கேப்டனாக ஆக்க நினைக்கிறது என்றும், அதே நேரத்தில் ராகுலும் அணியில் இருந்து விலகுவார் அல்லது விலக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.