IPL Auction 2025: ஐபிஎல் ஏலத்தில் எடுக்கப்பட்ட 13 வயது சிறுவன்.. ரூ.1.10 கோடி பணம்.. யார் இந்த சூர்யவன்ஷி?
Vaibhav Suryavanshi: 13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியை இவ்வளவு பெரிய தொகைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்க காரணம் இருக்கிறது. மிக இளம் வயதில் முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் கலக்கி வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் ரஞ்சி டிராபியில் பீகார் அணியில் இடம் பிடித்து அசத்தினார்.
கிரிக்கெட்டில் திறமை இருந்தால் வயது முக்கியமில்லை என்பது இங்கு மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சச்சின் டெண்டுல்கர், 31 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சூர்யகுமார் யாதவ், 43 வயதாகியும் இன்று ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் எம்.எஸ்.தோனி என பலரையும் இதற்கு உதாரணமாக அடுக்கி கொண்டே போகலாம். அதேபோல், பீகார் மாநிலம் சமஸ்திபூரை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி தனது 13 வயதில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இதுவரை உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வந்த வைபவ் சூர்யவன்ஷி, இனி ஐபிஎல் போட்டிகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தி ரன் மழை பொழிய இருக்கிறார். நேற்று நடைபெற்ற மெகா ஏலத்தில் வெறும் 13 வயதே ஆன இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை ரூ. 1.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. பல பல அனுபவ கிரிக்கெட் வீரர்களே ஐபிஎல் ஏலத்தின்போது லட்சத்தில் வாங்கப்பட்டபோது, வைபவ் சூர்யவன்ஷி ரூ. 1 கோடிக்கு மேல் சென்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் தள்ளியது. இதன்மூலம, ஐபிஎல் தொடங்கப்பட்டதற்கு பிறகு பிறந்து ஐபிஎல்லில் இடம் பிடித்த வீரர் என்ற சாதனையையும் தன்வசமாக்கியுள்ளார் வைபவ் சூர்யவன்ஷி.
𝙏𝙖𝙡𝙚𝙣𝙩 𝙢𝙚𝙚𝙩𝙨 𝙤𝙥𝙥𝙤𝙧𝙩𝙪𝙣𝙞𝙩𝙮 𝙞𝙣𝙙𝙚𝙚𝙙 🤗
13-year old Vaibhav Suryavanshi becomes the youngest player ever to be sold at the #TATAIPLAuction 👏 🔝
Congratulations to the young𝙨𝙩𝙖𝙧, now joins Rajasthan Royals 🥳#TATAIPL | @rajasthanroyals | #RR pic.twitter.com/DT4v8AHWJT
— IndianPremierLeague (@IPL) November 25, 2024
மிக குறைந்த வயதில் ஐபிஎல்லில் நுழைந்த சாதனை:
ஐபிஎல் மெகா ஏலத்தில் 491வது வீரராக ஏலம் போன வைபவ் சூர்யவன்ஷியை யாரும் வாங்க மாட்டார்கள் என்பது அனைவரது ஆரம்பக்கட்ட கருத்தாக இருந்தது. ஆனால், இவரது பெயர் அறிவிக்கப்பட்டது முதலே வைபவை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியாக, முன்னாள் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தூண்டுதலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ரூ. 1.10 கோடிக்கு 13 வயதான வைபவ் சூர்யவன்ஷியை ஏலத்தில் எடுத்தது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ள முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார் வைபவ் சூர்யவன்ஷி. மேலும், வருகின்ற ஐபிஎல் 2025ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பிளேயிங் 11ல் இடம் பெறுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரஞ்சி போட்டியில் இடம்:
13 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷியை இவ்வளவு பெரிய தொகைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்க காரணம் இருக்கிறது. மிக இளம் வயதில் முதல் தர மற்றும் லிஸ்ட் ஏ போட்டிகளில் கலக்கி வருகிறார் வைபவ் சூர்யவன்ஷி. உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய போட்டியாக பார்க்கப்படும் ரஞ்சி டிராபியில் பீகார் அணியில் இடம் பிடித்து அசத்தினார். தொடர்ந்து, ஹேமந்த் டிராபி, கூச் பெஹர் டிராபி மற்றும் வினு மங்கட் டிராபியிலும் களமிறங்கி தனது திறமையை வெளிப்படுத்தினார். மேலும், சமீபத்தில் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியிலும் தேர்வு செய்யப்பட்டார்.
𝗔 𝗵𝗶𝘀𝘁𝗼𝗿𝗶𝗰 𝗺𝗼𝗺𝗲𝗻𝘁 𝗶𝗻 𝘁𝗵𝗲 #TATAIPLAuction! 👏 👏
𝘿𝙊 𝙉𝙊𝙏 𝙈𝙄𝙎𝙎:
Here’s how the 13-year-old Vaibhav Suryavanshi – the youngest ever player to be bought in the auction – joined #RR 👌 👌#TATAIPL | @rajasthanroyals pic.twitter.com/eme92pM7jy
— IndianPremierLeague (@IPL) November 25, 2024
சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பல்வெறு போட்டிகள் உட்பட ஒரே ஆண்டில் வைபவ் சூர்யவன்ஷி மொத்தம் 49 சதங்களை அடித்ததாக கூறப்படுகிறது. தனது முதல் முதல் தர போட்டியில் வெறும் 12 ஆண்டுகள் 284 நாட்களில் விளையாடி மிக இளம் வயது வீரர் என்ற சாதனையை படைத்தார். இது மட்டுமின்றி, சமீபத்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி முச்சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக சதம்:
வைபவ் சூர்யவன்ஷி இந்த ஆண்டு ஜனவரியில் பீகார் அணிக்காக ரஞ்சியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டார். இதன் காரணமாக, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான இந்தியா ஏ அணியில் வைபவ் தேர்வு செய்யப்பட்டார். அங்கு ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக வைபவ் 58 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் சதம் அடித்தார். மேலும், வைபவ் சூர்யவன்ஷி தனது முதல்தர வாழ்க்கையில் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 100 ரன்களை எடுத்துள்ளார்.