IPL Auction 2025: மீண்டும் அணியில் அஸ்வின்.. இதுவரை சிஎஸ்கே எடுத்துள்ள வீரர்கள் பட்டியல்!

Chennai Super Kings Auction Players : கான்வே மற்றும் ரச்சினை மீண்டும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த நிலையில், இந்திய அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. ரூ. 2 கோடிக்கு அஸ்வின் அடிப்படை விலையில் களமிறங்கிய நிலையில், அவரின் அடிப்படை விலையை விட பல மடங்கு கொடுத்து வாங்கியது.

IPL Auction 2025: மீண்டும் அணியில் அஸ்வின்.. இதுவரை சிஎஸ்கே எடுத்துள்ள வீரர்கள் பட்டியல்!

விஜய் சங்கர் - ரவிச்சந்திரன் அஸ்வின் - கான்வே (Image: twitter)

Published: 

24 Nov 2024 23:02 PM

ஐபிஎல் 2025 மெகா ஏலம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முடிந்தவரை பழைய வீரர்களையே அணிக்கு கொண்டு வர ஆரம்பம் முதலே முயற்சித்தது. அதன்படி, கான்வே மற்றும் ரச்சினை மீண்டும் சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த நிலையில், இந்திய அணியின் ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடிக்கு சிஎஸ்கே வாங்கியது. ரூ. 2 கோடிக்கு அஸ்வின் அடிப்படை விலையில் களமிறங்கிய நிலையில், அவரின் அடிப்படை விலையை விட பல மடங்கு கொடுத்து வாங்கியது.

முன்னதாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சென்ற அஸ்வின், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடம் பெயர்ந்து விளையாடி வந்தார். தற்போது, மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இணைந்துள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்துள்ளது.

ஐபிஎல்லில் அஸ்வினின் கேரியர்:

அஸ்வின் இதுவரை தனது ஐபிஎல் வாழ்க்கையில் 212 போட்டிகளில் விளையாடி 180 விக்கெட்டுகளுடன் 800 ரன்களையும் எடுத்துள்ளார். கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய அஸ்வின் 15 போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும், 2024 சீசனில் 13 போட்டிகளில் 14 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

ALSO READ: IPL Auction 2025: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை.. புதிய வரலாறு படைத்த ஷ்ரேயாஸ், பண்ட்!

சிஎஸ்கே தக்கவைத்துள்ள வீரர்கள்:

  1. ருதுராஜ் கெய்க்வாட்
  2. மதீஷா பத்திரனா
  3. ஷிவம் துபே
  4. ரவீந்திர ஜடேஜா
  5. எம்எஸ் தோனி

ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே எடுத்துள்ள வீரர்கள் பட்டியல்:

  1. டெவோன் கான்வே – ரூ 6.25 கோடி
  2. ராகுல் திரிபாதி – 3.4 கோடி
  3. ரச்சின் ரவீந்திரா – ரூ 4 கோடி
  4. ரவிச்சந்திரன் அஸ்வின் – ரூ 9.75 கோடி
  5. கலீல் அகமது – ரூ 4.80 கோடி
  6. நூர் அகமது – ரூ.10 கோடி
  7. விஜய் சங்கர் – ரூ 1.2 கோடி

சிஎஸ்கே வெளியிட்ட வீரர்கள் பட்டியல்:

மொயீன் அலி, தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, அஜிங்க்யா ரஹானே, ஷேக் ரஷீத், மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங், நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ஷர்துல் தாகூர் , முஸ்தாபிசுர் ரஹ்மான், ரிச்சர்ட் க்ளீசன், அவனிஷ் ராவ் ஆரவெல்லி.

கணிக்கப்பட்ட சென்னை அணியின் விவரம்:

ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேவோன் கான்வே, ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்.எஸ்.தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், நூர் அஹமது, கலீல் அகமது, பதிரனா

ALSO READ: Mallika Sagar: ஐபிஎல் 2025 மெகா ஏலம்.. முதல் பெண் ஏலத்தாரர்.. யார் இந்த மல்லிகா சாகர்..?

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள்:

  1. ரிஷப் பண்ட் – ரூ. 27.00 கோடி – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்- ஐபிஎல் 2025
  2. ஷ்ரேயாஸ் ஐயர் – ரூ. 26.75 கோடி – பஞ்சாப் கிங்ஸ் – ஐபிஎல் 2025
  3. வெங்கடேஷ் ஐயர் – ரூ. 23.75 கோடி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ஐபிஎல் 2025
  4. அர்ஷ்தீப் சிங்- ரூ. 18 கோடி – பஞ்சாப் கிங்ஸ் – ஐபிஎல் 2025
  5. யுஸ்வேந்திர சாஹல் – ரூ.18 கோடி – பஞ்சாப் கிங்ஸ் – ஐபிஎல் 2025
  6. ஜோஸ் பட்லர் – ரூ. 15.75 கோடி – குஜராத் டைட்டன்ஸ் – ஐபிஎல் 2025
  7. கேஎல் ராகுல் – ரூ. 14 கோடி – டெல்லி கேப்பிடல்ஸ் – ஐபிஎல் 2025
இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!