IPL Auction 2025: ரூ. 641 கோடி.. 577 வீரர்கள்.. ஐபிஎல் ஏலம் எப்போது தொடக்கம்? முழு விவரம் இங்கே!
IPL 2025 Auction Date, Time: ஐபிஎல் 18வது சீசனுக்கான மெகா ஏலம் சவூதி அரேபியா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கும் தொடங்குகிறது. அதாவது, பார்டர் - கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று முடிந்ததும் ஏலம் தொடங்க இருக்கிறது.
ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஐபிஎல்லில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மெகா ஏலம் நடத்தப்படுகிறது. இங்கு அனைத்து அணி உரிமையாளர்களும் புதிய அணிகளை தயார் செய்ய முயற்சிப்பார்கள். இம்முறையும் அனைத்து அணிகளும் அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. இதுபோன்ற சூழ்நிலையில், இப்போது அனைத்து உரிமையாளர்களும் தங்கள் அணியில் அதிக வீரர்களைச் சேர்ப்பதில் கவனம் செலுத்தப் போகிறார்கள். அதே நேரத்தில், ஒரு அணி தனது அணியில் அதிகபட்சமாக 25 வீரர்களையும், குறைந்தபட்சம் 18 வீரர்களையும் கொண்டிருப்பது அவசியம்.
இந்தியர் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2025) சீசன் 18 க்கான மெலா ஏலம் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று (நவம்பர் 24) மற்றும் நாளை (நவம்பர் 25) ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 577 வீரர்கள் களமிறங்கும் நிலையில், 204 இடங்களை மட்டுமே தேர்வு செய்யும் நோக்கத்தில் 10 அணிகள் உள்ளன. இந்தநிலையில், ஐபிஎல் மெகா ஏலம் எத்தனை மணிக்கு தொடங்குகிறது..? எந்த சேனலில் இந்த ஏலத்தை கண்டுகளிக்கலாம் உள்ளிட்ட கேள்விகளுக்கு பதிலை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: IPL 2025 Schedule: மார்ச் 14 முதல் ஐபிஎல் ஆரம்பம்.. இறுதிப் போட்டி எப்போது..? வெளியான அட்டவணை!
மெகா ஏலம் எத்தனை மணிக்கு தொடங்குகிறது..?
ஐபிஎல் 18வது சீசனுக்கான மெகா ஏலம் சவூதி அரேபியா நேரப்படி பிற்பகல் 1 மணிக்கும், இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கும் தொடங்குகிறது. அதாவது, பார்டர் – கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான இன்று முடிந்ததும் ஏலம் தொடங்க இருக்கிறது.
எந்த சேனலில் ஏலத்தை காணலாம்..?
ஐபிஎல் 2025 மெகா ஏலம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். அதேநேரத்தில், ஜியோ சினிமா ஆப்பில் இலவச லைவ் ஸ்ட்ரீமிங்கில் கண்டுகளிக்கலாம்.
IPL mega auction entertainment begins tomorrow. 🍿📌#IPLAuction #IPL2025 #IPLAuction2025 #IPL pic.twitter.com/3Oovj97LF3
— Raviraj Yadav (@Raviraj02922665) November 23, 2024
ஏல பட்டியலில் எத்தனை வீரர்கள் உள்ளனர்..?
அக்டோபர் 31ம் தேதி ஐபிஎல்லில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐயிடம் சமர்பித்தது. இதன்பிறகு, மெகா ஏலத்தில் 1547 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 577 வீரர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வீரர்கள், இந்திய வீரர்கள் எத்தனை பேர்..?
பிசிசிஐ வெளியிட்டுள்ள 577 வீரர்கள் இறுதி பட்டியலில் 367 இந்தியர்கள் மற்றும் 210 வெளிநாட்டு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இதுவரை எத்தனை வீரர்கள் தக்கவைக்கப்பட்டனர்..?
ஐபிஎல்லில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இதுவரை தங்கள் அணியின் 46 வீரர்களை தக்கவைத்துள்ளனர். அந்தவகையில், மீதமுள்ள 204 வீரர்களுக்கான ஏலமே இன்று நடைபெறவுள்ளது. அதாவது 577 வீரர்கள் இறுதிப் பட்டியலில் 204 வீரர்கள் தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
ஒவ்வொரு அணிக்கும் எத்தனை வீரர்கள் தேவை..?
- சென்னை சூப்பர் கிங்ஸ் – 20 வீரர்கள் (7 வெளிநாட்டு வீரர்கள்)
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – 22 வீரர்கள் (8 வெளிநாட்டு வீரர்கள்)
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 20 வீரர்கள் (5 வெளிநாட்டு வீரர்கள்)
- மும்பை இந்தியன்ஸ் – 20 வீரர்கள் (8 வெளிநாட்டு வீரர்கள்)
- டெல்லி கேபிடல்ஸ் – 21 வீரர்கள் (7 வெளிநாட்டு வீரர்கள்)
- ராஜஸ்தான் ராயல்ஸ் – 19 வீரர்கள் (7 வெளிநாட்டு வீரர்கள்)
- பஞ்சாப் கிங்ஸ் – 23 வீரர்கள் (8 வெளிநாட்டு வீரர்கள்)
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 19 வீரர்கள் (6 வெளிநாட்டு வீரர்கள்)
- குஜராத் டைட்டன்ஸ் – 20 வீரர்கள் (7 வெளிநாட்டு வீரர்கள்)
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – 20 வீரர்கள் (7 வெளிநாட்டு வீரர்கள்)
வீரர்களின் அடிப்படை விலை என்ன..?
- 2 கோடி – 82 வீரர்கள்
- 1.5 கோடி – 27 வீரர்கள்
- 1.25 கோடி – 18 வீரர்கள்
- 1 கோடி ரூபாய் – 23 வீரர்கள்
- 75 லட்சம் – 92 வீரர்கள்
- 50 லட்சம் ரூபாய் – 8 வீரர்கள்
- 40 லட்சம் ரூபாய் – 5 வீரர்கள்
- 30 லட்சம் – 320 வீரர்கள்
எந்தெந்த அணிகளிடம் எவ்வளவு தொகை உள்ளது..?
- பஞ்சாப் கிங்ஸ் – 110.5 கோடி
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: ரூ.83 கோடி
- டெல்லி கேப்பிடல்ஸ்: ரூ 73 கோடி
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ரூ 69 கோடி
- குஜராத் டைட்டன்ஸ்: ரூ 69 கோடி
- சென்னை சூப்பர் கிங்ஸ்: 55 கோடி
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 51 கோடி
- மும்பை இந்தியன்ஸ்: ரூ.45 கோடி
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ரூ.45 கோடி
- ராஜஸ்தான் ராயல்ஸ்: 41 கோடி