5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL Auction 2025: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை.. புதிய வரலாறு படைத்த ஷ்ரேயாஸ், பண்ட்!

Shreyas Iyer: கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த முறை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார். இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயரின் பெயர் அறிவிக்கப்பட்டது முதலே,  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளிடையே இவரை வாங்க கடும் போட்டி நிலவியது.

IPL Auction 2025: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகை.. புதிய வரலாறு படைத்த ஷ்ரேயாஸ், பண்ட்!
ஷ்ரேயாஸ் ஐயர் – ரிஷப் பண்ட் (Image: PTI)
mukesh-kannan
Mukesh Kannan | Updated On: 24 Nov 2024 18:01 PM

ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரிஷப் பண்ட். கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு தலைமை தாங்கி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த முறை ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்திருந்தார். இதையடுத்து, ஷ்ரேயாஸ் ஐயரின் பெயர் அறிவிக்கப்பட்டது முதலே,  பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளிடையே இவரை வாங்க கடும் போட்டி நிலவியது. தொடர்ந்து, இரு அணிகளும் கடும் போட்டி போட்ட இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை ரூ. 26.75 கோடிக்கு வாங்கியது. முன்னதாக, ஏலத்தில் முதல் வீரராக வந்த வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.

ALSO READ: Mallika Sagar: ஐபிஎல் 2025 மெகா ஏலம்.. முதல் பெண் ஏலத்தாரர்.. யார் இந்த மல்லிகா சாகர்..?

ரிஷப் பண்ட்:

இதைதொடர்ந்து, இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் பெயர் ஏலத்திற்கு வந்தது. பண்டை ஏலம் வாங்க ஆரம்பம் முதலே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. விறுவிறுவென ரிஷப் பண்ட் விலையான அடிப்படை தொகை 2 கோடியில் இருந்து 10 கோடியை தாண்டி எகிறியது. இதற்கிடையே, ரூ. 20.75 கோடியாக இருந்தபோது ஏலத்தில் போட்டியிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பின் வாங்கியது. இதையடுத்து, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பண்ட் வாங்க தயாராக இருந்தது. அப்போது, ரைட் டூ மேட்ச் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேட்டது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இறுதியாக ரூ. 27 கோடி அறிவித்தபோது, டெல்லி பின்வாங்க, ரிஷப் பண்ட் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இணைந்தார்.

ALSO READ: IPL 2024 Auction Highest Paid Players: எம்.எஸ்.தோனி முதல் ஸ்டார்க் வரை.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம்போன வீரர்கள் இவர்கள்தான்!

மற்ற வீரர்கள்:

கடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்கை 24.75 கோடிக்கு வாங்கியது. இதை தற்போது, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளனர்.

அதேநேரத்தில், ஜோஸ் பட்லர் குஜராத்துக்கு 15.75 கோடிக்கும், மிட்செல் ஸ்டார்க் 11.75 கோடிக்கும் டெல்லி சென்றுள்ளனர். தொடர்ந்து, ரூ. 10.75 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி ககிசோ ரபாடாவையும், லக்னோ அணி ரூ.7.50 கோடிக்கு  தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லரையும் வாங்கியுள்ளது.

முகமது சிராஜ்:

இந்திய வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 கோடிக்கும், முகமது சிராஜை குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ. 12.25 கோடிக்கும் வாங்கியது. தொடர்ந்து, யுஸ்வேந்திர சாஹலை ரூ.18 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுலை 14 கோடி டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் வாங்கியது.

Latest News