5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Mallika Sagar: ஐபிஎல் 2025 மெகா ஏலம்.. முதல் பெண் ஏலத்தாரர்.. யார் இந்த மல்லிகா சாகர்..?

IPL 2025 Auctioneer: ஐபிஎல் 2024 ஏலம் இவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. ஐபிஎல் ஏலத்தை எப்போதும் நடத்தும் மிகவும் அனுபவம் வாய்ந்த ஹக் எட்மீட்ஸூக்கு பதிலாக மல்லிகா சாகர் பங்கேற்று கிரிக்கெட் ஏலத்தின் முதல் பெண் ஏலத்தாரராக வரலாறு படைத்தார்.

Mallika Sagar: ஐபிஎல் 2025 மெகா ஏலம்.. முதல் பெண் ஏலத்தாரர்.. யார் இந்த மல்லிகா சாகர்..?
ஐபிஎல் ஏலத்தாரர் (Image: Twitter)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 24 Nov 2024 11:20 AM

ஐபிஎல் 2025 ஏலம் நடைபெற இன்னும் சில மணிநேரங்களே உள்ளன. ஐபிஎல் சீசன் 18க்கான மெகா ஏலம் இன்று மற்றும் நாளை சவுதி அரேபியாவில் உள்ல ஜெட்டாவில் இந்திய நேரப்படி 3 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான ஆயத்த பணிகளில் அனைத்து அணிகளும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முன்னதாக, ஏலத்திற்கு 1574 வீரர்கள் பதிவு செய்திருந்த நிலையில், 574 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, 574 வீரர்களில் 204 வீரர்களை மட்டுமே மொத்தமாக 10 அணிகளும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இன்று நடைபெறும் ஏலத்தில் 367 இந்தியர்களும், 210 வெளிநாட்டு வீரர்களுடன் 577 வீரர்களின் தலையெழுத்தை தீர்மானிக்க ஏலதாரர் மல்லிகா சாகர் கைகளில் அனைத்தும் உள்ளது. அந்தவகையில், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் ஏகத்தாரராக பங்கேற்கும் மல்லிகா சாகர் யார் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: IPL Auction 2025: ரூ. 641 கோடி.. 577 வீரர்கள்.. ஐபிஎல் ஏலம் எப்போது தொடக்கம்? முழு விவரம் இங்கே!

யார் இந்த மல்லிகா சாகர்..?

இன்னும் சில மணி நேரத்தில் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு ஏலத்தாரராக மல்லிகா சாகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் இரண்டாவது முறையாக ஏலத்தாரராக பங்கேற்கிறார். மல்லிகா சாகர் கடந்த 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி மும்பையில் பிறந்தார். மும்பையில் ஒரு தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தவர். இவரது கல்வி குறித்த அடிப்படை விவரங்கள் தெரியவில்லை என்றாலும், அமெரிக்காவில் கலை வரலாற்றில் பட்டம் பெற்றவர். அதாவது, பிலடெல்பியாவில் உள்ள பிரைன் மாவ்ர் கல்லூரியில் கலை வரலாற்றில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

கடந்த 2001ம் ஆண்டு வெறும் 26 வயதில் மல்லிகா சாகர் நியூயார்க்கில் உள்ள கிறிஸ்டி ஹவுஸில் இந்திய கலையை ஏலம் எடுத்த முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையை பெற்றார். இதை தொடந்து, இந்திய கலையின் முக்கியத்துவத்தை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்ல, புண்டோல்ஸ் ஆர்ட் கேலரிஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

கலை உலகில் ஆளுமை:

மல்லிகா சாகர் கலை உலகில் நன்கு அறியப்பட்ட ஆளுமைகளில் ஒருவர். மேலும், பல கலை ஏலங்களை நடத்தியுள்ளார். மேலும், கலை, ஏலம், மற்றும் வணிகம் ஆகிய துறைகளில் மல்லிகா சாகர் சிறப்பான அனுபவம் கொண்டவர். கடந்த 2024ம் ஆண்டு மல்லிகா சாகர், மகளிர் பிரீமியர் லீக் (WPL) ஏலத்தை நடத்தும் வாய்ப்பை பெற்றார். இங்கு மல்லிகா தனது முழு திறனை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

இதன்பிறகு, ஐபிஎல் 2024 ஏலம் இவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. ஐபிஎல் ஏலத்தை எப்போதும் நடத்தும் மிகவும் அனுபவம் வாய்ந்த ஹக் எட்மீட்ஸூக்கு பதிலாக மல்லிகா சாகர் பங்கேற்று கிரிக்கெட் ஏலத்தின் முதல் பெண் ஏலத்தாரராக வரலாறு படைத்தார். அதன்பிறகு, புரோ கபடி லீக் வீரர்களின் ஏலத்தை நடத்திய முதல் பெண் ஏலத்தாரர் என்ற பெருமையையும் மல்லிகா பெற்றார். தற்போது, 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் பிசிசிஐ மல்லிகா சாகரை மீண்டும் ஏலத்தாரராக நியமித்துள்ளது.

ALSO READ: IPL 2025 Mega Auction: ஐபிஎல் ஏலத்தில் 13வயது கிரிக்கெட் வீரர்.. எகிறும் எதிர்பார்ப்பு.. யார் இந்த வைபவ் சூர்யவன்ஷி..?

மிகப்பெரிய எதிர்பார்ப்பு:

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் போன்ற அனுபவம் மிக்க இந்திய வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த ஏலத்தில் எப்போதும் நடக்காத ஒரு அதிசயம் நடக்கலாம். அதாவது, இந்த ஏலத்தில் ஒரு இந்திய வீரர் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை பெறலாம். அதன்படி, கடந்த ஆண்டு ஏலத்தொகையான 24.75 கோடி ரூபாயை இந்த முறை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்கை 24.75 கோடிக்கு ஏலம் எடுத்தது.

 

Latest News