IPL 2025: ரிஷப் பண்ட் வேண்டாம்! புதிய கேப்டனை தேடும் டெல்லி கேபிடல்ஸ்.. என்ன காரணம்..?

Delhi Capitals: வருகின்ற ஐபிஎல் 2025 சீசனுக்கு முன் டெல்லி அணி எத்தனை வீரர்களை தக்க வைக்கும், யார் யார் அந்த வீரர்கள் என்பதை அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அணியின் தக்கவைப்பு பட்டியலில் மூன்று பெயர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், கேப்டன் ரிஷப் பண்ட், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

IPL 2025: ரிஷப் பண்ட் வேண்டாம்! புதிய கேப்டனை தேடும் டெல்லி கேபிடல்ஸ்.. என்ன காரணம்..?

ரிஷப் பண்ட் (Image: PTI)

Updated On: 

28 Oct 2024 12:40 PM

ஐபிஎல் 2025 சீசனுக்கான பரபரப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. விரைவில் ஐபிஎல் 2025க்கான ஏலம் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் தாங்கள் தக்க வைத்துக்கொண்ட வீரர்களின் பெயரை பிசிசிஐ-யிடம் சமர்பிக்க வேண்டும். இதையடுத்து, ஐபிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளும் எந்த வீரரை தங்களுடன் வைத்து கொள்ளலாம், யாரை விடுவிக்கலாம் என்ற விவாதத்தை நடத்தி வருகிறது. இதுதவிர, பல அணிகள் பயிற்சியாளர்கள் குழுவில் அதிரடி மாற்றத்தை செய்து வருகின்றன.

ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு, கடந்த சீசன் வரை தலைமை பயிற்சியாளராக இருந்த ரிக்கி பாண்டிங் தனது ஒப்பந்தத்தை முடித்து கொண்டார். அவருக்கு பதிலாக யார் தலைமை பயிற்சியாளராக வருவார் என்ற கேள்வி எழுந்தநிலையில், தலைமை பயிற்சியாளராக முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் ஹேமங் பதானியை டெல்லி கேப்பிடல்ஸ் நியமித்துள்ளது. அதே நேரத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி இயக்குனராக முன்னாள் கிரிக்கெட் வீரர் வேணுகோபால் ராவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி நியமித்துள்ளது.

ALSO READ: Rishabh Pant: அறுவை சிகிச்சை செய்த அதே கால்.. வலியுடன் வெளியேறிய ரிஷப் பண்ட்!

ஹேமங் பதானி:

47 வயதான ஹேமங் பதானி இந்தியாவுக்காக நான்கு டெஸ்ட் மற்றும் 40 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். பல்வேறு கிரிக்கெட் லீக்குகளில் பயிற்சியளித்த அனுபவம் பதானிக்கு உள்ளது. 2021 முதல் 2023 வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தில் பீல்டிங் பயிற்சியாளராகவும் பின்னர் பேட்டிங் பயிற்சியாளராகவும் பணியாற்றினார். மேலும், லங்கா பிரீமியர் லீக்கில் யாழ்ப்பாண கிங்ஸ் அணி தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். சௌத் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் பட்டத்தை வென்ற சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப்பின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்தார். சமீபத்தில், ஹேமங் பதானி துபாய் கேப்பிட்டல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார். அந்த அணி இந்த ஆண்டு ILT20 இறுதிப் போட்டி வரை சென்றது.

டெல்லி அணி யார் யாரை தக்க வைக்கும்..?

வருகின்ற ஐபிஎல் 2025 சீசனுக்கு முன் டெல்லி அணி எத்தனை வீரர்களை தக்க வைக்கும், யார் யார் அந்த வீரர்கள் என்பதை அறிய ரசிகர்கள் காத்திருக்கின்றனர். தற்போது அணியின் தக்கவைப்பு பட்டியலில் மூன்று பெயர்கள் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில், கேப்டன் ரிஷப் பண்ட், அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் சம்பள வரம்பை பொறுத்தவரை, ரிஷப் பண்டை அதிகபட்சமாக ரூ. 18 கோடிக்கு தக்க வைத்துக் கொள்ளலாம் என்றும், அதேசமயம் அக்சர் படேல் 14 கோடிக்கும், குல்தீப் யாதவ் 11 கோடிக்கும் தக்க வைக்கப்படலாம். 5 வீரர்களை தக்கவைக்க ரூ.75 கோடி செலவாகும், எனவே கடந்த ஆண்டு நட்சத்திர வீரர் ஜேக்-பிரேசர் மெக்குர்க் மற்றும் தென்னாப்பிரிக்காவின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் ஆகியோரை ரைட் டு மேட்ச் (ஆர்டிஎம்) மூலம் அணி தேர்வு செய்யலாம் என்று நம்பப்படுகிறது.

புதிய கேப்டனை தேடும் டெல்லி கேப்பிடல்ஸ்:

கிடைத்த தகவலின்படி, கடந்த சீசன் வரை டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட், இந்த முறை கேப்டனாக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் மிக குறைவு என்று கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, ரிஷப் பண்டுக்கு பதிலாக ஆல்ரவுண்டர் அக்சர் படேலுக்கு கேப்டன் பொறுப்பை வழங்க டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இல்லையென்றால், டெல்லி நிர்வாகம் மெகா ஏலத்தின்போது கேப்டன் பதவிக்காக வேறு வீரர் யாரையேனும் தேர்வு செய்யலாம்.

ALSO READ: Miss India 2024 Winner: மிஸ் இந்தியா பட்டத்தை தட்டித் தூக்கிய நிகிதா போர்வால்… யார் இந்த பேரழகி?

டெல்லி நிர்வாகத்தில் கசிந்த தகவலின்படி, ” டெல்லி கேப்பிட்டல்ஸ் புதிய கேப்டனை எதிர்நோக்குகிறது என்பது உண்மைதான். இந்திய ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் புதிய கேப்டனாக வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தவிர, நவம்பர் நடுப்பகுதியில் 2017ல் வெளிநாட்டில் நடைபெறவுள்ள மெகா ஏலத்தில், கேப்டன் பதவிக்கு பொருத்தமான ஒரு வீரரை டெல்லி நிர்வாகம் பந்தயம் கட்டும். ரிஷப் பண்ட் டெல்லியின் சிறந்த தக்கவைப்பு பட்டியலில் இருந்தாலும், டெல்லி கேபிடல்ஸின் உயர் நிர்வாகம் பந்த் கேப்டன்சியின் அழுத்தம் இல்லாமல் போட்டியில் விளையாட வேண்டும் என்று நினைக்கிறது.”என்று கூறப்பட்டது.

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!