5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

BCCI: நான்கு கிரிக்கெட் வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், வீரர்களுக்காக செலவழித்த செலவு வீணாகிவிடும். அதனால்தான் தக்கவைப்பு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் அல்லது மெகா ஏலத்திற்கு பதிலாக மினி ஏலம் நடத்த வேண்டும் என்று காவ்யா மாறன் அந்த கூட்டத்தில் பேசியுள்ளார். ஆனால், பழைய விதிகளின்படி மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், புதிய தக்கவைப்பு விதிகள் குறித்து பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

IPL 2024: ஐபிஎல் 2025ல் மீண்டும் விளையாடப்போகும் தோனி! பிசிசிஐ பக்கா பிளான்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!
எம்.எஸ்.தோனி – ஹர்திக் பாண்டியா
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 25 Sep 2024 09:09 AM

ஐபிஎல் 2025: இந்தியன் பிரீமியர் லீக் 2025 சீசனுக்கு முன் வருகின்ற டிசம்பர் மாதம் மெகா ஏலம் மும்பையில் நடத்தப்பட இருக்கிறது. இந்த ஏலத்திற்காக ஐபிஎல்லில் விளையாடும் அனைத்து அணியின் உரிமையாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதன்படி, ஒரு சில அணியின் உரிமையாளர்கள் தங்கள் அணியை முழுமையாக மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், ஒரு சில அணிகள் தங்கள் அணியை அப்படியே தக்கவைக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு வாரத்திற்கு முன்பு பத்து உரிமையாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்தியது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அணிகளின் உரிமையாளர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ: IPL 2025: ஐபிஎல்லில் முக்கிய வீரரை கழட்டி விடப்போகும் மும்பை இந்தியன்ஸ்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மும்பையில் நடந்த இந்த பிசிசிஐ உடனான கூட்டத்தின்போது இரு அணியின் உரிமையாளர்களுக்கும் தக்கவைப்பு விதிகள் தொடர்பாக சண்டை ஏற்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், இது குறித்த முக்கிய அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து உரிமையாளர்களும் ஏலத்திற்கு முன் தக்கவைக்கப்பட்ட வீரர்களின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக அதிகரித்து கொள்ளலாம் என கூறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, தக்கவைக்கப்படும் வீரர்களின் எண்ணிக்கை குறித்த தெளிவு கிடைத்தவுடன், ஏலத்தில் எத்தனை வீரர்களை எடுக்க வேண்டும் என்பது குறித்து உரிமையாளர்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். இதன்மூலம், கிரிக்கெட் வீரர்களுடனான ஒப்பந்தங்களில் சரியான முடிவுகளை எடுக்க உரிமையாளர்களுக்கு உதவும்.

தக்கவைப்பு வீரர்களின் எண்ணிக்கை:

ஐபிஎல் 2024 சீசனின் இறுதிப் போட்டியில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர்களால் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையாளர்கள் காவ்யா மாறன் மற்றும் ஷாருக் கான் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்திற்குப் பிறகுதான் தங்கள் அணிகள் முழுமை பெற்று இருப்பதாகவும், இதற்காக தாங்கள் பெரியளவிலான தொகையை செலவிட்டதாகவும் தெரிவித்தனர். நான்கு கிரிக்கெட் வீரர்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், வீரர்களுக்காக செலவழித்த செலவு வீணாகிவிடும். அதனால்தான் தக்கவைப்பு வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் அல்லது மெகா ஏலத்திற்கு பதிலாக மினி ஏலம் நடத்த வேண்டும் என்று காவ்யா மாறன் அந்த கூட்டத்தில் பேசியுள்ளார். ஆனால், பழைய விதிகளின்படி மெகா ஏலம் நடத்தப்பட வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளர் நெஸ் வாடியா தெரிவித்ததாக கூறப்படுகிறது. இப்படியான சூழ்நிலையில், புதிய தக்கவைப்பு விதிகள் குறித்து பிசிசிஐ தெளிவுபடுத்தியுள்ளது.

மீண்டும் ஆர்டிஎம் விதி..?

கிரிக்பஸ்ஸின் அறிக்கையின்படி, பிசிசிஐ எப்போதும் போல் வருகின்ற டிசம்பர் மாதம் மெகா ஏலத்தை நடத்த இருக்கிறது. இருப்பினும், தக்கவைப்பு வரம்பை நான்கிற்கு பதிலாக ஆறாக அதிகரிக்க வாரியம் அனுமதித்துள்ளது. போட்டிக்கான உரிமை (ஆர்டிஎம்) விதியும் மீண்டும் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ஆர்டிஎம் விதி என்பது ரைட் டு மேட்ச் என்று கூறுவார்கள். அதாவது ஏலத்திற்குச் செல்லாமல் வீரர்களை வாங்குவதற்கான விருப்பமாகும். இதனால், ஆர்டிஎம் மற்றும் பிளேயர் தக்கவைப்பு மூலம், அதிக கிரிக்கெட் வீரர்களை ஒரு அணி தக்கவைத்துக்கொள்ள முடியும்.

கடைசியாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற மெகா ஏலத்தில் இருந்து ஆர்டிஎம் விதி நீக்கப்பட்டது. அப்போது ஒவ்வொரு உரிமையும் அதிகபட்சமாக ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டது. பழைய விதிகளின்படி, ஆர்டிஎம் மூலம் மூன்று வீரர்களுக்கு மேல் திரும்ப வாங்க முடியாது. இந்த ஆர்டிஎம் விதி மீண்டும் வந்தால், ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் வீரர்களைத் தக்கவைக்க 4+2 அல்லது 3+3 (தக்கவைப்பு, ஆர்டிஎம்) அமைப்பு நடைமுறைக்கு வரலாம்.

ALSO READ: IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் 3 கேப்டன்கள் விடுவிப்பு..? குட்பை சொல்லப்போகும் அணிகள்..!

இந்த ஆர்டிஎம் விதி ஐபிஎல் 2025 சீசனுக்கு முன்பாக மீண்டும் கொண்டு வரப்பட்டால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எம்.எஸ்.தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் போன்ற வீரர்கள் மீண்டும் அதே அணியில் விளையாடுவதை பார்க்கலாம்.

Latest News