IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது..? இடம், தேதியை அதிரடியாக அறிவித்த பிசிசிஐ!

IPL 2025: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பங்கேற்க அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த 91 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்கள் 76 வீரர்கள் பதிவு செய்து 2வது இடத்திலும், இங்கிலாந்து வீரர்கள் வீரர்கள் 52 பேர் பதிவு செய்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலம் எப்போது..? இடம், தேதியை அதிரடியாக அறிவித்த பிசிசிஐ!

ஐபிஎல் 2025 மெகா ஏலம் (Image: GETTY and twitter)

Updated On: 

06 Nov 2024 12:10 PM

ஐபிஎல் 2025க்கான மெகா ஏலத்தின் தேதி தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஐபிஎல் வீரர்களுக்கான ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் என பிசிசிஐ நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக, சவுதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற இருந்த ஏலம் தற்போது ஜெட்டாவிற்கு மாற்றப்பட்டது. இந்தியன் பிரிமீயர் லீக் 2025 ஏலத்தில் பங்கேற்பதற்காக ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், அர்ஷ்தீப் சிங் உட்பட 1165 இந்திய வீரர்களும், மொத்தமாக 1574 கிரிக்கெட் வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக அனைத்து 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் தக்கவைப்பு பட்டியலை அக்டோபர் 31 அன்று வெளியிட்டனர். சில அணிகள் பிசிசிஐயின் தக்கவைப்பு விதியை முழுமையாக பயன்படுத்தி 6 வீரர்களையும், சில அணிகள் ஒரு சில வீரர்களை மட்டுமே அணியில் வைத்து மீதமுள்ளவர்களை விடுவித்துள்ளனர். அனைத்து 10 அணிகளும் சேர்ந்து 204 காலி இடங்கள் மட்டுமே இருப்பதால், இந்த வீரர்களிடையே 204 ஏலம் மட்டுமே எடுக்கப்படும்.

ALSO READ: IPL 2025: 5 ஐபிஎல் அணிகளுக்கு புதிய கேப்டன்கள்.. சூடுபிடிக்கப்போகும் ஏலம்..!

ஒரு அணி அதிகபட்சமாக 25 வீரர்களை அணியில் சேர்க்கலாம். மொத்தம் 204 ஸ்லாட்களுக்கு செலவழிக்க 10 அணிகள் மொத்தமாக ரூ. 641.5 கோடியுடன் களமிறங்கியுள்ளது. இந்த 204 இடங்களில் 70 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதுவரை 10 அணிகள் மொத்தம் 558. 5 கோடி செலவு செய்து 46 வீரர்களை தக்கவைத்துள்ளது.

இந்திய வீரர்கள் ரூ.2 கோடி அடிப்படை விலை

  • ரிஷப் பண்ட்
  • கே.எல்.ராகுல்
  • ஷ்ரேயாஸ் ஐயர்
  • இஷான் கிஷன்
  • டி நடராஜன்
  • அர்ஷ்தீப் சிங்
  • வாஷிங்டன் சுந்தர்
  • முகமது சிராஜ்
  • முகமது ஷமி
  • க்ருனால் பாண்டியா
  • ஷர்துல் தாக்கூர்
  • தேவ்தத் படிக்கல்
  • உமேஷ் யாதவ்
  • ஹர்ஷல் படேல்
  • தீபக் சாஹர்
  • வெங்கடேஷ் ஐயர்
  • கலீல் அகமது

மெகா ஏலத்தில் எந்த அணிக்கு எவ்வளவு பணம் உள்ளது?

ஐபிஎல் 2025க்கு முன்னதாக, பிசிசிஐ அனைத்து அணி உரிமையாளர்களின் ஏல தொகையின் அளவை அதிகரித்தது. கடந்த சீசன் வரை ஒவ்வொரு அணிக்கும் தலா 100 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. அதன்படியே, ஒவ்வொரு ஆண்டு அணிகள் ரூ. 100 கோடிக்குள் ஏலத் தொகையைக் கொண்டு வீரர்களை ஏலம் எடுத்தது. ஆனால் புதிய விதிகளின்படி, இப்போது உரிமையாளர்களுக்கு ரூ.125 கோடி உயர்த்தியுள்ளது. வருகின்ற சீசனுக்கான ஏலத்தில் ரூ. 125 கோடி கொண்டு வீரர்களை ஏலம் எடுக்கும்.

ALSO READ: IPL 2025: எம்.எஸ்.தோனி ஆதரவு.. சென்னை அணியில் ரிஷப் பண்ட்..? ரெய்னா கொடுத்த அப்டேட்!

தக்கவைத்துள்ள வீரர்கள் போக அணிகளிடம் எவ்வளவு பணம் உள்ளது.?

  • பஞ்சாப் கிங்ஸ் – ரூ 110.5 கோடி
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்- ரூ.83 கோடி
  • டெல்லி கேபிட்டல்ஸ்- ரூ.73 கோடி
  • குஜராத் டைட்டன்ஸ்- ரூ.69 கோடி
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ 69 கோடி
  • சென்னை சூப்பர் கிங்ஸ்- ரூ.55 கோடி
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரூ.51 கோடி
  • மும்பை இந்தியன்ஸ்- ரூ.45 கோடி
  • சன்ரைசர்ஸ் ஹைதராபாத்- ரூ.45 கோடி
  • ராஜஸ்தான் ராயல்ஸ்- ரூ.41 கோடி

ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் பங்கேற்க அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்த 91 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர்கள் 76 வீரர்கள் பதிவு செய்து 2வது இடத்திலும், இங்கிலாந்து வீரர்கள் வீரர்கள் 52 பேர் பதிவு செய்து மூன்றாவது இடத்திலும் உள்ளனர். குறைந்தபட்சமாக, அமெரிக்காவைச் சேர்ந்த 10 வீரர்கள், அயர்லாந்தைச் சேர்ந்த 9 வீரர்கள், ஜிம்பாப்வே சேர்ந்த 8 வீரர்கள், கனடாவைச் சேர்ந்த 4 வீரர்கள், ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 2 வீரர்கள், இத்தாலி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த தலா ஒருவர் மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.  கடந்த 18 சீசன்களில் இதுவரை நடக்காத ஒன்று இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் நடக்க உள்ளது. முதன்முதலாக இத்தாலியை சேர்ந்த வீரர் ஒருவர் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளார்.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?