5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? பிசிசிஐ கைகளில் இருக்கும் முடிவு..!

IPL 2025: ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி, சிறப்பாக செயல்பட்ட போதிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை. 2024 ஐபிஎல்லில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் எம்.எஸ்.தோனி, விரைவில் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், வருகின்ற ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

MS Dhoni: ஐபிஎல் 2025ல் தோனி விளையாடுவாரா இல்லையா? பிசிசிஐ கைகளில் இருக்கும் முடிவு..!
எம்.எஸ்.தோனி
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 25 Sep 2024 09:09 AM

எம்.எஸ். தோனி: ஐபிஎல் 2024 முடிந்ததில் இருந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பதுதான் ரசிகர்களின் மனதில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. கடந்த 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டார். ருதுராஜ் தலைமையிலான சென்னை அணி, சிறப்பாக செயல்பட்ட போதிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற முடியவில்லை. 2024 ஐபிஎல்லில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாததால் எம்.எஸ்.தோனி, விரைவில் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், வருகின்ற ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

Also read: IPL 2025: மெகா ஏலத்திற்கு முன் 3 கேப்டன்கள் விடுவிப்பு..? குட்பை சொல்லப்போகும் அணிகள்..!

ஐபிஎல் 2025ல் தோனி:

தனியார் விளையாட்டு செய்தி நிறுவனம் சமீபத்திய வெளியிட்ட செய்தியின்படி, ஐபிஎல் 2025ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாட வேண்டும் என்றால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஒரு முக்கியமான முடிவை பொறுத்தது. வருகின்ற டிசம்பர் மாதத்தில் நடைபெறும் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் 10 அணிகளும் வீரர்களை தக்க வைத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும். கடந்த கால நிபந்தனையின் படி, ஐபிஎல் அணிகள் அதிகபட்சமாக நான்கு வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம். இந்த நிபந்தனை தொடர்ந்தால் தோனி மீண்டும் களமிறங்குவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த சீசனுக்கான தக்கவைப்பதற்கான 4 பேர் பட்டியலில் தோனியில் பெயர் இல்லை. கிடைத்த தகவலின்படி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, இலங்கை வீரர் மதிஷா பத்திரனா மற்றும் சிவம் துபே ஆகியோர் தக்கவைக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு முதல் ஐபிஎல்லில் 5 அல்லது 6 வீரர்கள் தக்க வைக்கப்படலாம் என தெரிவித்தால், தோனி வருகின்ற சீசனில் விளையாடலாம். இருப்பினும், தக்கவைப்புகளின் எண்ணிக்கை நான்கு மட்டும் என அறிவித்தால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இளம் மற்றும் திறமைகளுக்கு முன்னுரிமை அளித்து, தோனியை ஒரு வழிகாட்டியாக நியமிக்கலாம்.

Also read: IPL 2025: மீண்டும் ஐபிஎல்லில் ராகுல் டிராவிட்.. பலே திட்டத்துடன் களமிறங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்!

ருதுராஜ் கெய்க்வாட்:

ஐபிஎல் 2024ல் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைய முடியவில்லை. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தை பிடித்து கடைசி நிமிடத்தில் பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது. சென்னை அணி 14 போட்டிகளில் 7ல் வெற்றி, 7ல் தோல்வியடைந்தது. பிளேஆஃப் சுற்றுக்கு சென்னை செல்லவில்லை என்றாலும், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங்கிலும் கேப்டன்சியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போது அனைவரது பார்வையும் அடுத்த சீசனில் மீண்டும் ருதுராஜ் கெய்க்வாட் மீது திரும்பும். தோனி மற்றும் சென்னை சூப்பட் கிங்ஸ் அணியின் வெற்றி பட்டியலை கெய்க்வாட் தக்க வைத்துக் கொள்வாரா இல்லையா என்பதை ரசிகர்கள் பார்க்க விரும்புகிறார்கள்.

Latest News